ஓசோன் படை தேய்வடைதல் - nelliadynet
Headlines News :
Home » » ஓசோன் படை தேய்வடைதல்

ஓசோன் படை தேய்வடைதல்

Written By www.kovilnet.com on Saturday, April 19, 2014 | 2:10 AM

ஓசோன் என்பது மூன்று ஒட்சிசன் (O3) அணுக்களைக்கொண்ட ஒரு மூலக்கூறாகும். இது  வளிமண்டலத்தின் 10-50  கிலோமிற்றர் பகுதிக்குள் காணப்பட்ட போதிலும் 20- 25 கிலோமீற்றர் பகுதியிலேயே செறிவாகக் காணப்படுகின்றது.

ஓசோன் படையானது சூரியனிலிருந்து வெளிவரும் தீங்கு விளைவிக்கக்கூடிய புறஊதாக் கதிர்வீச்சினை தடுத்து புவியினை அதன் பாதிப்பிலிருந்து பாதுகாக்கும் ஒரு கவசமாகத் தொழிற்படுகின்றது.  இது ஈரணு ஒட்சிசன் மூலக்கூறுபோல் நிலைத்தன்மை இல்லாததுடன் இலகுவில் சிதைந்து விடும் தன்மை கொண்டதுமாகும்.

 1840 இல் சி.எப். ஸ்கோன்பின் என்பவர் ஓசோனைக் கண்டுபிடித்தார். அது ஒருவகையான மணத்தைத் தருவது என்ற அடிப்படையில் கிரேக்க மொழியில் மணத்தைக் குறிக்கும் ஓசோன் என்று பெயர் சூட்டினார்.1865 இல்தான் ஜே.எல். சொரட் என்பவர் செய்த ஆய்வுக்குப் பின்னரே மூன்று அணுக்கள் கொண்ட விஞ்ஞானப் பொருளின் பெயர் ஓசோன் என அறியப்பட்டது. இதனை பின்னா சி.எப்.ஸ்கோபின்சன் அவர்களும் 1867 இல் உறுதி செய்தார்.  ஒரு இரசாயணப் பொருளின் மாற்றுருவாக அறியப்பட்டவற்றுள் ஓசோனே முதலாவதாகும்.


ஓசோன் படை சிதைவடைதல்:-

ஓசோன் மூலக்கூறுகளின் சேர்வையானது இரசாயண முறையில் மாற்றியமைக்கப்படுவதால் குறிப்பாக ஊகுஊள முதலிய வாயுக்களினால் அழிக்கப்படுவதனால் ஓசோன்படையின் தடிப்பினளவு குறைவடைதலே ஓசோன் படை சிதைவு அல்லது ஓசோன்படையில் துவாரம் ஏற்படுதல் எனப்படுகின்றது.

 அந்தாட்டிக் பனிக்கண்டத்தில் ஓசோன் அளவு பருவநிலைக்கேற்ப சிறிய அளவிலான மாறுதலுடன் சராசரியாக நிலவுகின்றது. ஆனால் வசந்த காலத்தில் ஓசோன் அளவு சராசரி அளவில் 50 முதல் 60 சதவீதம் வரை குறைந்து காணப்படுகின்றது.

பிரித்தானிய விஞ்ஞானி ஜே.போர்மன் தலைமையிலான ஆய்வுக்குழு அண்டார்டிகாவின் காலேபே என்ற நிலையத்தில் 1974 ஆம் வருட மத்தியில் ஓசோன் அளவு குறைந்து காணப்பட்டதை முதன்முதலாகக் கண்டறிந்தது. 

அந்தாட்டிக் பகுதியில் ஓசோன் படையில் உள்ள ஓட்டையின் பரப்பளவு 2000 ஆம் ஆண்டில் 28.3 மில்லியன் சதுர கி.மீ ஆகவும், 2007 ஆம் ஆண்டில் 25 மில்லியன் சதுர கி.மீ. ஆகவும், 2008 ஆம் ஆண்டில் 27 மில்லியன் சதுர கி.மி. ஆகவும் உள்ளதாக உலக வானிலை ஆய்வு மையம் 2008 ஆம் ஆண்டில் ஓசோன்படை தேய்வு குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.



ஓசோன் படை அவதானிப்பும் அளவீடுகளும்:-

ஓசோன் நிலைப்பை அளவிடுவதற்காக நாசாவினால்    TOMS எனும்   செய்மதி 1996 இல் ஏவப்பட்டது. இது ஒவ்வொரு 8 செக்கணுக்கும் 35 அளவீடுகளை எடுக்கின்றது.

ஓசோனின் அடர்த்தி  Dobson units (DU) அலகில் அளவிடப்படுகின்றது.  ஓசோன் படையின் 1 மில்லிமீற்றர் தடிப்பு இங்கு 100 Dobson units (DU) ஆக காணப்படுகின்றது.

ஓசோன் அடர்த்தியை அளவிடும் கருவிகளில் டாப்சன் ஸ்பெக்ட்ரோ போட்டோ மீட்டர், ப்ருவர் போட்டோ மீட்டர், ஜோடு மீட்டர், பில்டர் ஓசோன் மீட்டர் எம் 83, பில்டர் ஓசோன் மீட்டர் எம். 124, மாஸ்ட், ஒக்ஸ்போர்டு, சர்பேஸ் ஓசோன் ப்பளர், எலக்ட்ரோ கெமிக்கல் செல் சோண்ட் போன்றவை முக்கியமானவையாகும்.

ஓசோன் படை தேய்வடைவதற்கான காரணங்கள்:-
ஓசோன் படை தேய்விற்கு ஓசோனைத் தேய்வடையச் செய்யக்கூடிய பொருட்களை   (ODS - Ozone Depleting Substances) வெளியிடுதலே காரணங்களாக உள்ளன. குறிப்பாக குளோரோ புளோரோ காபன்  (CFC- Chloro floro Carban) , காபன் நாற்குளோரைட் ( Carban Thetrachlorite);, ஐதரோ குளோரோ புளோரோ காபன் (HCFC)  , மெதில் புரோமைட்(Mathil Bromite) போன்ற வாயுக்களே காரணமாக உள்ளன. இவை இயற்கையாகவோ அல்லது மானிட நடவடிக்கைகளின் மூலமாகவோ வளிமண்டலத்தில் சேர்கின்றன. பெரும்பாலும் அண்மைக்காலமாக மானிட நடவடிக்கைகளின் மூலமான வெளியேற்றமே மிகப் பாரியளவில் செல்வாக்குச் செலுத்தி வருகின்றது. இயற்கைக் காரணங்கள் பாரியளவில் தாக்கம் செலுத்தவில்லை.
• குளோரோ புளோரோ காபனை வெளியேற்றும் பொருட்களின் பாவனை:-ஓசோன் தேய்வில் குளோரோ புளோரோ காபன்கள் முக்கிய பங்கினை வகிக்கின்றன. புறஊதாக்கதிர்கள் CFC தாக்கி CL அணுக்களை வெளிவிடுகின்றது. CL அணுவானது O3 ஐ தாக்கி CLO ஆகவும் O2 ஆகவும் மாறுகின்து. பின்னர் CLO மூலக்கூறு O உடன் இணைந்து CL ஆகவும், O2 ஆகவும் மாற்றமடைகின்றது. இவ்வாறு ஓசோன் படைமண்டலத்தில் ஓசோனின் அளவு வெகுவாகக் குறைந்து வருகின்றது. இந்த CFC வாயுக்களை வெளிவிடுகின்ற செயற்பாடுகளாக குளிர்சாதனப் பெட்டிகள், Air Container,  நிறப்பூச்சுக்களின் பாவனை, பொதிசெய்யும் நடவடிக்கைகள், சுற்றுப் பலகைகளைத் துப்பரவாக்கும் திரவங்களைப் பயன்படுத்தல் என்பன காரணங்களாக அமைகின்றன. 1950 ஆம் ஆண்டுகளில் CFC இன் உலக உற்பத்தி 50000 தொன்களாக இருந்தது. 1960 இல் 94 சதவீதமாக உயர்ந்து 1973 இல் 700000 தொன்களாக உயர்வடைந்தது.

Cl + O3 ----- ClO + O2
ClO + O -----  Cl + O2


  • ஓசோன் படைக்கூடாகச் செல்லும் அதிவேக விமானங்கள்:- மிகவேகமாகச் செல்லும் சில விமானங்கள் ஓசோன் படைக்கூடாகவே பயணம் செய்கின்றன. இவை வெளியேற்றும் சில வாயுக்கள் ஓசோன்படையில் நேரடியாகத் தாக்கத்தைச் செலுத்துகின்றன. குறிப்பாக வெளியேற்றப்படும் நைதரசன் ஒட்சைட்டு மிகமுக்கியமான பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு வாயுவாகும். உதாரணமாக கொன்கொட், சுபர்சொனிக், டுபோலர் -144, போயிங் - 2707 முதலிய விமானங்கள் இவ்வாறு ஓசோன்படை தேய்விற்கு காரணமாக அமைகின்றன.

•    அணுகுண்டுப் பரிசோதனைகள்;:- வல்லரசு நாடுகளினால் மேற்கொள்ளப்படுகின்ற அணுகுண்டுப் பரிசோதனைகளின்போது வெளியெற்றப்படும் நைதரசன் ஒட்சைட்டானது ஓசோன் படையைச் சிதைவடைய வைக்கின்றது. 1960- 62 காலப்பகுதிகளில் இடம்பெற்ற அணுகுண்டு வெடிப்புக்களினால் 1.3 – 1.7 மில்லியன் தொன் நைதரசன் ஒட்சைட் படைமண்டலத்திற்கு வெளியேற்றப்பட்டது. இதனால் 1960 களின் பின்னர் 2.0 – 2.45 சதவீத குறைவு ஓசோனில் ஏற்பட்டது.


•    இரசாயண உற்பத்திகள்:- சில வகை இரசாயணப் பொருட்களை உற்பத்தி செய்து பாவனைக்கு உள்ளாகின்றபோதும் அவை ஓசோன் படை சிதைவடைவதில் பங்காற்றுகின்றன. பூச்சிகொல்லியாக பயன்படுத்தப்படும் மெதில்புறோமைட் என்னும் வாயு வளிமண்டலத்தில் உள்ள ஓசொனை அளிக்கக்கூடியது. மெதில் புறோமைட்டின் மொத்த வருடாந்த உலகரிதியான உற்பத்தி 67000 தொன்களாகும். இதில் 25 சதவீதத்தை ஐக்கிய அமெரிக்கா பயன்படுத்துகின்றது. காபன் நாற்குளோரைட் ஐரோப்பிய நாடுகளில் தானியங்களை பூச்சிகளிலிருந்து பாதுகாப்பதற்கும், துணிகளைச் சலவை செய்வதற்கும் பயன்படுகின்றது. இதுவும் ஓசோன் படையை சிதைவடையச் செய்யும் வாயுவாகும்.

•    விவசாய நடவடிக்கைகள்;:- விவசாய நடவடிக்கைகளின்போது விளைச்சலை அதிகரிக்குமுகமாக பயன்படுத்தும் இரசாயண உரங்கள் மூலம் உருவாக்கப்படும் நைதரசன் ஒட்சைட் போனற் வாயுக்களாலும் ஓசோன் படை தேய்வடைகின்றது. குறிப்பாக செயற்கையாக விவசாய நடவடிக்கைகளில் நைதரசனை அடிப்படையாகக் கொண்ட உரத்தினைப் பாவிக்கின்றபோது நைதரசன் வட்டச் செயன்முறையில் பாதிப்பேற்படுகின்றது. அதாவது வளிமண்டலத்தில் மிகையாக நைதரசன் ஒட்சைட்டு சேர்வதற்கு வளிசமைக்கின்றது. இதனால் மிகையான நைதரசன் ஒட்சைட் வளிமண்டலத்திற்குச் சென்று தாக்கமடைவதனால் ஓசோன் படை தேய்வடையும்.

•    சூரியப் புள்ளி நடவடிக்கைகள்;:- சிறிய காலப்பகுதியிலும் சூரியனால் புவிக்கு வெப்பவேறுபாடு ஏற்படுகின்றது. இவற்றுள் 11 வருடகால சூரிய சுழற்சிக் காலம் முக்கியமானதாகும்.  இது சூரியப் புள்ளி நடவடிக்கை எனவும் அழைக்கப்படும். இதனால் ஏற்படும் மிகைவெப்பத்தினாலும் ஓசோன் படைக்கு பாதிப்பு ஏற்படுகின்றது. இத்தகைய வெப்ப அதிகரிப்புக் காலத்தில் உள்வரும் சூரியனின் இலத்திரன் கதிர்வீச்சானது நைதரசன் ஒட்சைட்டை தோற்றுவிக்கின்றது. இது ஓசோன் படையுடன் தாக்கமடைந்து தேய்வடைய வைக்கின்றது.

•    எரிமலை வெடிப்புக்கள்:- எரிமலை வெடிப்புக்களின் மூலம் வாயுக்கள், திரவங்கள், திண்மங்கள் என்ற வகையில் பொருட்கள் வெளித்தள்ளப்படுகின்றன. இவற்றுள் வாயுப்பொருட்களில் சல்பர்டைஒக்சைட் மற்றும் காபனீரொட்சைட் முதலிய வாயுக்களும் வெளிவிடப்படுகின்றன. இவை ஓசோன் மூலக்கூறுகளுடன் தாக்கமடைந்து ஓசோன் படையைச் சிதைவடையச் செய்யக்கூடியன. குறிப்பாக 1991 யூன் 15 இல் பிலிப்பைன்சில் உள்ள பினாட்டுபோ எரிமலை வெடித்ததினால் 15-30 மில்லியன் தொன் சல்பர்டைஒக்சைட் வளிமண்டலத்திற்கு வீசப்பட்டது.


ஓசோன் படைதேய்வடைவதினால் ஏற்படும் விளைவுகள்:-

சூரியனிலிருந்து வரும் புறஊதாக் கதிர்வீச்சை உறிஞ்சித் தடுத்து புவியினைப் பாதுகாக்கும் ஓசோன்படையானது தேய்வடையுமாயின் புறஊதாக்கதிர்வீச்சினை கட்டுப்படுத்தக்கூடிய சக்தியினளவு ஓசோன்படைக்கு குறைவதுடன் அது புவிமேற்பரப்பை புறஊதாக்கதிர்வீச்சு நேரடியாகத் தாக்குவதற்கு வழிவகுக்கும். இதனால் தாவரங்கள், விலங்குகள், மற்றும் பௌதீகசூழல் போன்றவற்றிற்கு பல்வேறுபட்ட பாதிப்புக்கள் ஏற்படும்.

• மானிட சௌக்கிய பாதிப்புகள்:- அதிகளவு சருமப் புற்றுநோய் ஏற்பட எதுவாக அமைகின்றது. கண்ணில் வெண்படலநோய், கண் பார்வையிழப்பு போன்ற பலவகையான கண்நோய்கள் ஏற்படுகின்றன. நோய்களின் எதிர்ப்பு சக்தியினைப் பலவீனமடையச் செய்கின்றது. இதனால் பல வகையான தொற்றுநோய்களுக்கான எதிர்ப்புச் சக்திகள் இழக்கப்படுகின்றது. நோய்த் தடுப்பூசிகளின் செயற்பாடுகள் செயலற்றுப் போகின்றன. ஒவ்வாமைத் தன்மை அதிகரிக்கின்றது.

• விலங்குகளுக்கான பாதிப்புகள்:- வளர்ப்பு விலங்குகளுக்க கண் மற்றும் சருமப் புற்றுநோய் என்பன அதிகரித்துக் காணப்படுவதுடன், விலங்குகளின் மீள் உற்பத்தித் திறனும் வீழ்ச்சியடைந்து காணப்படும்.

• இயற்கைச் சூழல் தொகுதி, காடுகள், விவசாயம் என்பவற்றிற்கு ஏற்படும் பாதிப்புகள்:- உலகின் அதிகமான பயிhகள் குறிப்பாக நெல், கோதுமை, பார்லி, ஒட்ஸ், சோளம், சோயா அவரை, நிலக்கடலை, தக்காளி, கரட் போன்ற பயிர்கள் ஆபத்தான நிலையில் உள்ளன. இதனால் அவற்றின் வளர்ச்சி அவற்றின் வளர்ச்சி, ஒளித்தொகுப்பு மற்றும'; பூத்தல் என்பன குறைவடைந்துள்ளன. தாவர விதைகளின் வளர்ச்சியும் பாதிப்படைந்துள்ளது. இத்தகைய மாற்றங்கள் மானிடர்களினதும் மேய்ச்சல் விலங்குகளினதும் உணவின் தரத்தினைப் பாதிப்படையச் செய்வதுடன் மரப்பலகைகளின் தரத்தினையும் பாதிப்படையச் செய்கின்றன.

• பொருட்களுக்கு ஏற்படும் பாதிப்புகள்:-
 புறஊதாக்கதிர்வீச்சானது பருhத்தி, கம்பளி போன்ற பொருட்களின் பாவனைக்காலத்தை குறைவடையச் செய்கின்றது. செயற்கைப் பொருட்களான பொலித்தீன். பிளாஸ்டிக், நார்ப்பொருட்கள், கட்டுமானப் பொருட்கள் என்பனவற்றின் பாவனைக் காலத்தையும் குறைவடையச் செய்கின்றன.

• சூழல் தொகுதிகள் பாதிப்படைதல்:- போசனை மீள்வட்டம் குழம்புதல், சக்திப்hபய்ச்சல் பாதிப்படைதல், உயிர்பல்வகைமை இழப்பு ஏற்படுதல்.

•  உயிர்புவி இரசாயண வட்டங்களின் பாதிப்ப ஏற்படுதல்:- குறிப்பாக காபன் வட்டததைப் பொறுத்தவரை மிகப்பெரிய காபன் தேக்கம் சமுத்திர பிளாங்டன்களாகும். இவற்றின் அழிவு காபன் வட்டத்தைப் பாதிக்கும்.

Share this article :

1 comment:

www.facebook.com/nelliadynet

 
Support :
Template Design by V.Rajeepan Published by Nelliadynet Template