நிலைத்து நிற்கும் அபிவிருத்தி - nelliadynet
Headlines News :
Home » » நிலைத்து நிற்கும் அபிவிருத்தி

நிலைத்து நிற்கும் அபிவிருத்தி

Written By www.kovilnet.com on Saturday, April 19, 2014 | 2:09 AM

அதிகரித்து வரும் மனிதத் தேவைகளை நிறைவு செய்து கொள்ளும் பொருட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் பாரியளவிலான சுற்றுச் சூழல் வளங்களின் உபயோகத்தினையும், அதேநேரம் இதனால் சூழலுக்குள் விடப்படும் பெருமளவிலான கழிவுப்பொருட்களின் வெளியேற்றத்தையும் கவனத்தில் எடுக்கும்போது சுற்றுச்சூழலின் தரத்தை பேணிப் பாதுகாப்பதில் நிலைத்துநிற்கும் அபிவிருத்திக்கான தேவை முக்கியத்துவமடைகின்றது.
அந்தவகையில்  நிலைத்து நிற்கும் அபிவிருத்தி எனும்போது சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும் வருங்கால சந்ததியினரும் பயன்படுத்தக்கூடிய வகையில் வளங்களைப் பயன்படுத்தி அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் நிலைத்து நிற்கும் அபிவிருத்தி அல்லது பேண்தகு அபிவிருத்தி எனப்படுகின்றது.
•    உணவு விவசாய தாபணம் (FAO) :- நிலைத்து நிற்கும் அபிவிருத்தி என்பது இயற்கை வளங்களின் அடிப்படை முகாமைத்துவத்தையும் நிகழ்கால எதிர்கால சந்ததியினரின் தேவைகள் அவற்றின் கிடைப்பனவுகளை நிச்சயப்படுத்திக் கொள்ளக் கூடிய வகையில் தொழிநுட்ப ரீதியான மாற்றங்களை நெறிப்படுத்துவதாகும்.
•    புறுண்லாண்ட் ஆணைக்குழு (சுற்றுச்சூழல் மற்றும் அபிவிருத்தி உலக ஆணைக்குழு):-       வருங்கால தலைமுறையினர் தமது தேவைகளை நிறைவு செய்து கொள்ளக் கூடிய ஆற்றலின்மிது தாக்கம் எதனையும் எடுத்துவராமல் இன்றைய தலைமுறையினரின் தேவைகளை நிறைவு செய்து வைக்கும் அபிவிருத்தி செயன்முறை நிலைத்து நிற்கும் அபிவிருத்தி ஆகும்.

1)    நிலைத்து நிற்கும் அபிவிருத்தியின் அவசியம்:-
•    அதிகரித்துவரும் குடித்தொகை தேவைகளை நிறைவு செய்தல்:- இன்று உலகின் சனத்தொகையானது ஆரம்பகாலங்களைவிட ப்மடங்கு அதிகரித்து வருகின்றது. 1999 இல் ஆறு பில்லியனாக காணப்பட்ட சனத்தொகை 2012 இல் 7 பில்லியனாகவும், 2024 இல் எட்டு மில்லியனாகவும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இக்குடித்தொகைக்கு தேவையான உணவு, சேவை மற்றும் நுகர்வுப் பொருட்களின் தேவையினை வழங்குவதிலுள்ள நெருக்கடிகளைத் தீர்ப்பதற்கு நிலைத்து நிற்கக் கூடிய அபிவிருத்தி பற்றிய எண்ணக்கரு ஒரு சிறந்த உத்தியாக உள்ளது.
•    வளங்களின் வீண்விரயம் தடுக்கப்படும்:-  எல்லா நாடுகளிலும் வழங்கள் ஒழுங்கான முறையில் பரந்து காணப்படாதமையுடன் இவை சரியான முறையில் உச்சப்பயன்பாட்டினைப் பெற்றிருப்பதாகவும் இல்லை. இதனால் வழங்களின் கனிசமானளவு விரயம் காணப்படுகின்றது. இதனால் நிலைத்திருக்கக் கூடிய அபிவிருத்தி செயன்முறையின் கீழ் வளங்களிள் பயன்பாடு அதி உச்ச நிலையினைப் பெற்றதாக அமையும்.
•    வறுமை நாடுகiளுக்கான வறுமை போக்கப்படும்;:- அபிவிருத்தி அடைந்த நாடுகளில் உலக சனத்தொகையில் 1ஃ3 பங்கினர் உள்ளனர். ஆனால் உலக வளங்களில் 2ஃ3 பங்கினை அவை அனுபவித்து வருகின்றன. அதே வேளை அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகள் உலக சனத்தொகையில் 2ஃ3 பங்கினைக்; கொண்டிருந்தாலும் உலக வளங்களில் 1ஃ3 பங்கினையே பயன்படுத்தி வருகின்றன. இந்த நிலைமையை மாற்றுவதுடன் வளங்களின் மீள்பரம்பல் மூலம் வறிய நாடுகளின் வறுமை போக்கப்படும்.

•    சூழல் மாசடைவினை கட்டுப்படுத்தலாம்:- சனத்தொகை அதிகரிப்பினால் அதிகளவில் காடுகள் அழிக்கப்படுவதுடன், கழிவுகளினால் சுற்றுப்புறம் மாசடைதல் முதலிய சூழல் மாசடைவுகள் ஏற்படுகின்றன. இவை நிலைத்து நிற்கும் அபிவிருத்தி கொள்கையினால் சூழல் மாசடைவைக் கட்டுப்படுத்த வழிவகுக்கும்.
•    பௌதீக இடர்களை தவிர்த்துக் கொள்ளலாம்:- இன்று உலகில் அதிகரித்துவரும் புவிடிவெப்பமடைதல், ஓசோன்படை அருகிச் செல்லல், கடல்மட்ட உயர்வு, துருவப்பனி உருகுதல், காலநிலை மாற்றம் போன்றவற்றைத் தடுப்பதற்கு அல்லது இழிவளவாக்கவதற்கு நிலைத்து நிற்கும் அபிவிருத்தி முறை அவசியமாகும்.
•    வனவிலங்குகளின் அழிவை கட்டுப்படுத்தல்:- உணவுக்காக அதிகளவில் வனவிலங்குகள் மற்றும் கால்நடைகள் அழிவடைவதனால் உயிர்பலவகைமை பாதிக்கப்படுகின்றது. இதனை நிவர்த்தி செய்வதற்கு நிலைத்து நிற்கும் அபிவிருத்தி பற்றிய எண்ணக்கரு முக்கியமானதாகும்.

•    தற்போதைய அபிவிருத்தி முறைகளின் குறைபாட்டினை களையலாம்:- தற்போதைய அபிவிருத்தி நடைமுறைகள் எதிர்காலத்திற்கு தாக்குப் பிடிக்கக் கூடியனவாகவில்லை. இதனால் எதிர்காலத்திற்கு ஏற்றவகையிலான அபவிருத்தி முறைகள் அவசியமாகும்.

2)    நிலைத்துநிற்கக் கூடிய அபிவிருத்தி அணுகுமுறையை அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் பின்பற்றுவதிலுள்ள பிரச்சினைகள்:-
•    வளங்களின் தேவை:- அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு துரித பொருளாதார அபிவிருத்தி வேண்டப்படுகின்றன. இதனால் இந்நாடுகளின் பயன்பாட்டிற்கு அதிகளவான வளங்கள் தேவைப்படுகின்றன. இவ்வாறான அதிகரித்த வளங்களின் பயன்பாடு, வளங்களுக்கான மேலதிக அழுத்தங்களைத் தோற்றுவிக்கின்றன. வளங்களின் பயன்பாடும் வளங்களைப் பேணிப்பாதுகாத்தலும் ஒன்றில் ஒன்று முரண்பட்டுக் காணப்படுகின்றது.
•    துரித குடித்தொகை வளர்ச்சி:- அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளின் பொதுவான இயல்பு துரிதமான குடித்தொகை வளர்;சியாகும். இதனால் குறைந்த பட்ச வளங்களைப் பயன்படுத்தியே உணவு, சேவை மற்றும் பொருட்களை வழங்க வேண்டியுள்ளது. இதனால் வளங்களின் பயன்பாட்டிலும் அவற்றைப் பேணிக்காத்தலுக்கும் இடையில் முரண்பாடுகள் காணப்படுகின்றன.
•    கல்வியறிவு குறைவு:- குறைந்தளவான கல்வியறிவு காணப்படுவதனால் அபிவிருத்தி நடவடிக்கைகளின்போது மக்களும் பொதுத்துறை உத்தியோகத்தர்களும் இவர்களது நடவடிக்கைகள் எந்தளவுக்கு சூழலை பாதிக்குமென அறிந்ததில்லை.
•    வறுமை நிலை:- வளர்முக நாடுகளில் காணப்படும் வறுமைநிலை காரணமாக ஏற்படுத்தப்படும் மக்களின் நடவடிக்கைகள் சூழலைப் பாதிப்படையச் செய்கின்றது. சூழலைப் பற்றிய போதிய அறிவு இருந்தாலும் வறுமையினால் முதலில் தமது தேவைகளைப் பூர்த்தி செய்த பின்னர் இரண்டாவதாகவே சூழல் பாதுகாப்பு என கருதிக் கொள்கின்றனர்.
•    மூலதனம், தொழிநுட்ப அறிவு இன்மை:- அபிவிருத்தியடைந்து வரும் நதடுகள் சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு போதிய மூலதனம் மற்றும் உயர் தொழிநுட்ப அறிவு என்பன இல்லாமையும் மேலும் இவற்றுக்காக வளர்ச்சியடைந்த நாடுகளில் தங்கியிருக்கின்ற நிலைமையும் காணப்படுகின்றமை.
•    சூழல் வழங்களை முழுமையாக பயன்படுத்தல்:- வளர்ச்சியடைந்து வரும் நாடுகள் வளர்ந்த நாடுகளுக்கான மூலப்பொருட்களுக்காக தமது சூழலை வழங்குகின்றன. மற்றும் விவசாயப் பொருட்களை தமது நாட்டின் குறைந்த பட்ச நிலையிலுள்ள காடுகள் மற்றும் நிலங்களைப் பயன்படுத்தியே வழங்கி வருதல்.
•    சமூகப்பிரச்சினைகள்:- அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் காணப்படும் குறைந்தளவான வளங்களைப் பயன்படுத்தி வறுமை, மந்தபோசாக்கு, வேலையின்மை, பயங்கரவாதம் முதலிய சமூகப்பிரச்சினைகளை தீர்ப்பது கடினம்.

3)    நிலைத்து நிற்கும் அபிவிருத்தியை அடையப்பெறுவதில் அபிவிருத்தியடைந்துவரும் நாடுகள் எதிர்கொள்ளும்  சூழற் பிரச்சினைகள்:-
•    பாலைவனமாதல்:- அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகள் காடுகளை அழித்து விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், குறைறந்தளவு நிலப்பரப்பில் அதிகளவு மந்தைகளை மேய்த்தல் போன்ற காரணங்களினால் தாவரப்போர்வை குறைவடைந்து நிலச்சிPரளிவிற்கு வழவகுக்கின்றது.
•    பூகோள வெப்பமடைதல்:- காடழிப்பு, கைத்தொழில் நடவடிக்கைகளினாலும் வாகனங்களின்பாவனையாலும் உயிர்சுவட்டு எரிபொருட்கள் பயன்டுத்தப்படல் போன்ற காரணங்களினால் புவிவெப்பமடைகின்றது.
•    ஓசோன் படையில் துவாரம்:- பொருளாதார வளர்ச்சியின்மையால்  விலைகுறைந்த உபகரணங்களையே இவை பயன்படத்துகின்றன.  ஊகுஊ வெளியேற்றும் குளிர்சாதனப்பெட்டிகள்  மற்றும் ளுpசயல களின் பாவனையால் ஓசோன்படையின் தடிப்பானது குறைவடைந்து வருகின்றது.
•    நச்சுக்கழிவுகள் சூழலில் வீசப்படுதல்:- விவசாய நடவடிக்கைகளில் பயன்படுத்தப்படுகின்ற கிருமிநாசினிகளின் பாவனைக்குட்படுத்தப்பட்ட எஞ்சிய போத்தல்கள் ஆறுகளிலும் நிலமேற்பரப்பிலும் வீசப்படுகின்றது. அத்துடன் தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் எண்ணெய்க் கழிவுகள் நதியுடன் கலந்து நீரை மாசடைய வைக்கின்றன.
•    உயிரினங்களின் பல்லினத்தன்மை அழிதல்:- வறுமை காரணமாக காட்டு விலங்குகள் அதிகம் அழிக்ப்படுவதுடன், விறகு மற்றும் அபிவிருத்திப்பணிகளுக்காக காடுகளும் அழிவடைகின்றன. இதனால் பல உயிரிங்கள் ருகிப்போகின்றன.
•    நகராக்கம்:- அபிவிருத்தியடைந்து வருகின்ற நாடுகளில் காணப்படும் நகரங்களை நோக்கி அதிகரித்துவரும் நகராக்கச் செயன்முறையால் கழிவகற்றல் பிரச்சினை சேரிப்பற பிரச்சினை என்பன உருவெடுத்துள்ளன.
•    குடித்தொகை அதிகரிப்பு:- வளர்முக நாடுகளில் குடித்தொகையினை குறைப்பதற்கான முறையான தடுப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்படாமையினால் குடித்தொகை வருடந்தோறும் அதிகரித்து வருகின்றது.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

www.facebook.com/nelliadynet

 
Support :
Template Design by V.Rajeepan Published by Nelliadynet Template