கடற்கரையில் உள்ள கிணற்று நீர் நன்னீராக இருப்பதற்கான காரணம் - nelliadynet
Headlines News :
Home » » கடற்கரையில் உள்ள கிணற்று நீர் நன்னீராக இருப்பதற்கான காரணம்

கடற்கரையில் உள்ள கிணற்று நீர் நன்னீராக இருப்பதற்கான காரணம்

Written By www.kovilnet.com on Monday, February 4, 2013 | 4:48 AM




கடலில்
 உள்ள நீர்  உவர்நீராக உள்ளபோதிலும்,கடற்கரையோரங்களில் உள்ள கிணறுகளில் உள்ள நீர்சுத்தமான நன்னீராகவே உள்ளதுஇந்த நிலைமைக்குஎன்ன காரணம் என்பதனை இக்கட்டுரைவிளக்குகின்றது. 

என்னுடைய விரிவுரையாளர்களிடமிருந்து கிடைத்ததகவல்கள் மற்றும்இணையங்களில் தேடிப்பெற்றவிடயங்களையும்நேரடியாக குறிப்பிட்ட விடயம்சம்பந்தமாக களத்தில் அவதானித்த விடயங்களையும் கொண்டே இக்கட்டுரையினைவரைகின்றேன்.
கரையோரத்தில் உள்ள கிணற்று நீர் நன்னீராக இருப்பதற்குரிய காரணத்தைஅறியுமுன்னர் நாம் இங்கு நீரியல் வட்டம் மற்றும் தரைக்கீழ் நீர்  முதலிய விடயங்களைஅறிய வேண்டும்.

நீரியல் வட்டம்
திண்மம்,திரவம்வாயு ஆகிய நிலையிலுள்ள நீரானது நிலம்கடல்வளிமண்டலம்ஆகியவற்றுக்கிடையில் ஒரு வட்ட வடிவில் செயற்படும் நிலையினை பொதுவாகநீரியல் வட்டம் எனப்படுகின்றதுஅதாவது நீரானது ஆவியாகுதல்ஒடுங்குதல்,படிவுவீழ்ச்சிகழுவுநீரோட்டம் ஆகிய செயன்முறைகளுக்கூடாக ஒரு வட்ட வடிவில்இயற்குவதனை இது குறித்து நிற்கின்றதுஅந்தவகையில் நீரியல் வட்டத்தில்பிரதானமாக நான்கு செயன்முறைகள் முக்கியம் பெறுகின்றன.
1.    ஆவியாதல்
2.    ஒடுங்குதல்
3.    படிவுவீழ்ச்சி
4.    கழுவுநீரோட்டம்


1. ஆவியாதல் - சமுத்திரம்உள்நாட்டு நீர்நிலைகள்உயிரினங்கள் ஆகியவற்றில் உள்ள நீரானது வெப்பத்தின் காரணமாக வாயு நிலைக்கு மாற்றப்பட்டு மேலெழும் செயன்முறைஆவியாதல் எனப்படுகின்றதுபொதவாக சமுத்திரங்கள் மற்றும் உள்நாட்டு நீர்நிலைகள்ஆகியவற்றில் இருந்து திரவ நிலையிலிருந்து வாயுவாகும் செயன்முறை ஆவியாதல்எனவும்உயிரினங்கள் மற்றும் தாவரங்களிலிருந்து நீரானது வாயுவாக மேலெழுதல்ஆவியுயிர்ப்பு எனவும் குறிப்பிடப்படுகின்றதுஆவியாகின்றபோது நிலமேற்பரப்பில்இருந்து .
2. ஒடுங்குதல் - ஆவியாதல் மூலம் வளிமண்டலத்தை அடைந்த நீராவியானதுகுளிர்வடைந்து திண்மமாகவோ அல்லது திரவமாகவோ மாற்றமடையும் செயன்முறைஒடுங்குதல் எனப்படுகின்றதுஆவியாதல் மூலம் வளிமணடலத்தையடைந்தநீராவியானது நிரம்பிய வளியாக மாறி பணிபடு நிலைய அடைகின்றது.பனிபடுநிலையை அடைந்த நீராவியானது மேலும் குளிர்வடைவதனாலேயே அவ்வளிகொண்டுள்ள ஈரப்பதனானது திண்மமாகவோ திரவமாகவோ மாற்றமடைகின்றது.வளிமண்டலத்தில் உள்ள உப்புகந்தகம்தூசுக்கள் முதலிய உட்கருக்களைச் சுற்றியேநீராவியானது திரவமாகவோ அல்லது திண்மமாகவோ ஒடுங்குகின்றது.
3. படிவுவீழ்ச்சி – ஒடுங்குதல் மூலம் திரவமாகவோ அல்லது திண்மமாகவோமாற்றமடைந்த நீராவியானது நிலத்தை நோக்கி பல்வேறு வடிவங்களில் வீழ்கின்றபோதுபடிவுவீழ்ச்சி எனப்படுகின்றதுஉட்கருக்களைச் சுற்றி ஒடுங்கிய நீராவினாது முகில்களாககூழ்நிலையில் காணப்படும்முகிற்துளிகள் ஒன்றையொன்று இணைந்து பாரமானதானபெரிய திரண்மழை முகில்களைத் தோற்றுவிக்கின்றனஇவ்வாறு தோற்றுவிக்கப்பட்டபாரமான திரண்மழை மகில்களே பூமியை நோக்கி படிவுவீழ்ச்சியாக வீழ்கின்றது.படிவுவீழ்ச்சி என்று கூறும்போது , மழைவீழ்ச்சிதூறல்மழைப்பனிபனிகலந்தமழை,ஆலிஉறைபனி எனப் பல்வேறு வடிவங்களில் நிலத்தை அடைகின்றது.
4. கழுவுநீரோட்டம் - பல்வேறு படிவுவீழ்ச்சி வடிவங்களாக புவிமேற்பரப்பை வந்தடைந்தநீரானதுசமுத்திரத்தை  சென்றடைகின்ற செயற்பாடு கழுவு நீரோட்டம் எனப்படுகின்றது.அதாவது நிலத்தின் மேல் நதிகளிற்கூடாகவோ அல்லது தரைக்கீழான நகர்வின் மூலமோஅது சமுத்திரத்தை அடைகின்றதுஇதன் மூலம் ஏற்கனவே நிலமேற்பரப்பிலிருந்துஆவியாக்கப்பட்ட நீரிலும் பார்க்க அதிகமாகக் கிடைத்த நீரானது சமுத்திரத்தை அடைந்துசமநிலையை பேணுகின்றதுஇதனை கீழேயுள்ள நீர்ச்சமநிலையை விளக்கும்படத்திலிருந்து அறிந்து கொள்ளமுடியும்.
தரைக்கீழ் நீர்

படிவுவீழ்ச்சியின் மூலம் நிலத்தில் கிடைக்கும் நீரின் ஒரு பகுதி நிலத்தின்பாறைகளுக்கூடாக ஊடுருவி நிலத்தின் கீழே சேமிக்கப்பட்டிருக்கும்போது அதனைதரைக்கீழ் நீர் என அழைக்கின்றோம்தரைக்கீழ் நீசேகரிக்கப்படும் பகுதிகள் நீர்தாங்குபடுக்கை என அழைக்கப்படுகின்றதுநீர் தாங்கு படு;க்கையானது பிரதான நீhதாங்கு படுக்கைஉப நீர் தாங்கு படுக்கை என இரண்டாக காணப்படுகின்றது.
பிரதான நீர் தாங்கு படுக்கை என்பதுநிலமேற்பரப்பில் கிடைக்கும் மழைநீரானதுவண்மையான பாறைகளுக்கூடாகக் கசிந்து தேங்கியிருக்கும் பகுதியினைக் குறிக்கும்.இப்பகுதியில் தேங்கியுள்ள நீரை  நிரந்தர தரைக்கீழ் நீர் எனவும் அழைப்பர்இப்பகுதியில்துளையிடுவதன் மூலமே ஆட்டிசியன் கிணறுகள் மூலம் நீர் பெறப்படுகின்றது.
உபநீர் தாங்கு படுக்கை என்பதுநிலமேற்பரப்பில் கிடைக்கும் மழைநீரானது மணல்போன்ற மென்மையான நிலமேற்பரபிற்கூடாக ஊடுருவி நீரை உட்புகவிடாதபாறைப்படைகளுக்கு மேல் தேங்கியிருக்கும் நீhப் பகுதியை குறிப்பிடுவர்இப்பகுதியில்தேங்கியிருக்கும் நீரை தற்காலிக தரைக்கீழ் நீர் எனவும் அழைப்பர்.

நீர்தாங்கு படுக்கையின் மேல் எல்லையானது நீர்ப்பீடம் என அழைக்கப்படுகின்றது.நீர்ப்பீடத்தின் எல்லையானது மாற்றமடையக் கூடிய ஒன்றாகும்படிவுவீழ்ச்சியின் ஒருபகுதியானது தரைக்கீழ் நீராக நகர்ந்து சமுத்திரங்களை அடைகின்றது.

கரையோரத்தின் நீரியல் நிலைமைகள்.

கரையோரப்பகுதியில் நீரின் இரசாயண இயல்புகளின் அடிப்படையில் இருவேறுபட்டநீர்தாங்கு படுக்கைகளை அவதானிக்க முடியும்ஒன்று நன்னீரைக் கொண்டநீர்தாங்குபடுக்கைஇரண்டாவது உவர்நீரைக் கொண்ட நீர்தாங்குபடுக்கை என அவைஇரண்டாகக் காணப்படுகின்றதுநிலத்தைச் சார்ந்து அமைந்திருக்கும் நீர்தாங்குபடுக்கையானது நன்னீரைக் கொண்டதாகவும்கடலைச் சார்ந்ததாக அமைந்திருக்கும் நீர்தாங்குபடுக்கையானது உவர்நீரைக் கொண்டதாகவும் காணப்படுகின்றது.

  நன்னீரும் உவர்நீரும் கலந்துள்ள பகுதியானது நன்னீர்உவர்நீர் இடைமுகம் எனஅழைக்கப்படும்இந்த இடைமுக எல்லையானது  மாற்றமடையக் கூடியதுகுறிப்பாகநன்னீர் தரைக்கீழ் நீர்மட்டமானது குறைவடைகின்றபோதுஇடைமுக எல்லானதுநிலத்தை நோக்கி நகரும்அதேபோன்று மாறாக நன்னீர் தரைக்கீழ் நீர்மட்டமானதுஅதிகரிக்கின்றபோது கடல்பகுதியை நோக்கி நகரக்கூடியது.

 
கடற்கரையோரப்பகுதிகளில் உள்ள நிலப்பகுதியில் கிணறு ஒன்றை அமைக்கின்றபோதுஅது நன்னீராக இருப்பதற்குப் பிரதான காரணம் , நிலத்திற்குக் கீழ் காணப்படும் நீர்தாங்குபடுக்கையானது நன்னீராகக் காணப்படுவதனாலேயாகும்அருகிலிருப்பதுஉவாத்தன்மையுடைய கடல்நிராக இருந்தாலும்தரைக்கீழ் நன்னீர் நீர்தாங்குபடுக்கையிலிருந்தே கிணற்றுக்கு நீர்கிடைக்கின்றது.
கடற்கரையோரப் பகுதிகளில் தரைக்கீழ் நீராக சமுத்திரத்தை நோக்கி நகர்ந்து வருகின்றநன்னீரின் அழுத்தமானது கடலை நோக்கியதாகக் காணப்படும்அதுமட்டுமன்றி நன்னீரின்நீர்மட்டம் (நீர்ப்பீடம்உயர்வாகவும் காணப்படுவதனால் உவர்நீரின் ஊடுருவலானதுதரைக்குள் வருவது கட்டுப்படுத்தப்படுகின்றதுஇதேவேளை வரட்சியான காலத்தில்அல்லது தரைக்கீழ் நன்னீர் நீர்ப்பீடம்  தாழ்த்தப்படுமானால் உவர்நீர் ஊடுருவல்இடம்பெறும் . இதனால் கிணறுகளில் உவர்த்தன்மை அதிகமாக இருக்கும்குறிப்பாகஇலங்கையின் யாழ் குடா நாட்டில் நன்னீர் நீர்ப்பிடம் மனித நடவடிக்கைகளினால்தாழ்த்தப்படுகின்றமையானது அப்பகுதிகளில் உள்ள கிணறுகளில் உவர்த்தன்மைஊடுவலுக்கு வழிவகுத்துள்ளது.
ஒளிப்படம் 1:-
மட்டக்களப்பு மாவட்டத்தின் கழுவன்கேணி கடற்கரைப்பகுதி

 
ஒளிப்படம் 2:-
யாழ்ப்பாண மாவட்டத்தின் நகுலேஸ்வர ஆலயத்தின் கீரிமலைத் தீர்த்தம் (நன்னீர் ஊற்று)
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

www.facebook.com/nelliadynet

 
Support :
Template Design by V.Rajeepan Published by Nelliadynet Template