காணாமல் போன மலேசிய விமானம் கடத்தலா?: கோலாலம்பூரில் 11 தீவிரவாதிகள் கைது - nelliadynet
Headlines News :
Home » » காணாமல் போன மலேசிய விமானம் கடத்தலா?: கோலாலம்பூரில் 11 தீவிரவாதிகள் கைது

காணாமல் போன மலேசிய விமானம் கடத்தலா?: கோலாலம்பூரில் 11 தீவிரவாதிகள் கைது

Written By www.kovilnet.com on Saturday, May 3, 2014 | 6:59 PM

காணாமல் போன மலேசிய விமானம் கடத்தல்?: கோலாலம்பூரில் 11 தீவிரவாதிகள் கைதுகோலாலம்பூர், மே 4-
கோலாலம்பூர், மே 4-
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் 11 அல்கொய்தா தீவிரவாதிகள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கும் மலேசிய விமானம் காணாமல் போனதற்கும் சம்பந்தமுள்ளதா என அந்நாட்டு காவல்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

அந்நாட்டில் மிகப்பெரிய தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்த எப்.பி.ஐ மற்றும் ரகசிய புலனாய்வு மையம்(எம்.ஐ.6), இத்தீவிரவாதிகளின் விவரங்களை அந்நாட்டு அரசிடம் அளித்தது. இதன் மூலம் தீவிரவாதிகள் அனைவரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். அத்தீவிரவாதிகளிடம் பல்வேறு உலக நாடுகளை சேர்ந்த முக்கிய உளவு அமைப்பினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தென் இந்திய பெருங்கடலில் இந்த விமானம் விழுந்ததாக கூறிய போதும் அதற்கான ஆதாரம் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. தற்போது காணாமல் போன மலேசிய விமானத்தை இந்த 11 தீவிரவாதிகள் கடத்தியிருக்கலாம் என பலத்த சந்தேகம் எழுந்துள்ளது. கைது செய்யப்பட்டுள்ள தீவிரவாதிகள் அனைவருக்கும் 22 முதல் 55 வயது இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதில் ஒரு இளம் விதவையும் அடக்கம்.

ஒசாமா பின் லேடனின் மருமகனான சுலைமான் அபு கெய்த்திடம் நடைபெற்ற விசாரணையில், பிரிட்டனில் பிறந்த இஸ்லாமியரான சாஜித் பதாத் ஆப்கனில் தீவிரவாத குழு ஒன்றுக்கு பயிற்சி அளித்தபோது மலேசியாவை சேர்ந்த ஒருவருக்கு ஷு பாம் ஒன்றை கொடுத்துள்ளார். விமானத்தின் காக்பிட் அறைக்கு செல்லும் நோக்கில் இந்த பாம் அந்த நபரிடம் தரப்பட்டதாக கெய்த் தெரிவித்துள்ளார்.

தற்போது ஐரோப்பிய யூனியனில் பதுங்கி வாழும் பதாத், மலேசிய விமானத்தை கடத்தும் திட்டத்துக்கு அமெரிக்காவில் 9/11 தாக்குதல் நடத்திய காலித் முகமது ஷேக் மூளையாக செயல்பட்டதாக கூறியுள்ளான். கடத்தப்பட்ட விமானத்தில் 200 கிலோ எடை கொண்ட லித்தியம் பேட்டரிகள் கொண்டு செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆக தீவிரவாதிகள் இந்த விமானத்தை ஆசிய நாடுகளில் ஒன்றின் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டு கடத்தியிருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

www.facebook.com/nelliadynet

 
Support :
Template Design by V.Rajeepan Published by Nelliadynet Template