புகை, மதுவினால் ஏற்பட இருக்கும் அபாயம்: ஆய்வில் தகவல் - nelliadynet
Headlines News :
Home » » புகை, மதுவினால் ஏற்பட இருக்கும் அபாயம்: ஆய்வில் தகவல்

புகை, மதுவினால் ஏற்பட இருக்கும் அபாயம்: ஆய்வில் தகவல்

Written By www.kovilnet.com on Sunday, May 4, 2014 | 9:53 AM

லண்டன், மே.4- 

புகை, மதுவினால் ஏற்பட இருக்கும் அபாயம்: ஆய்வில் தகவல்
புகை பிடித்தல், மதுபான பயன்பாடு, அதிக அளவிலான உப்பு பயன்பாடு, உயர் ரத்த அழுத்தம், ரத்தத்தில் அதிக சர்க்கரை அளவு மற்றும் தொப்பை ஆகியவற்றை முறையாக கட்டுப்படுத்தினால் வருகிற 2025ம் ஆண்டிற்குள் 3.7 கோடி பேர் விரைவாக இறப்பதில் இருந்து அவர்களை தடுத்திடலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 

இது குறித்து தி லேன்சர் என்ற மருத்துவ நாளிதழில் குழுவாக ஆய்வு செய்து ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டு உள்ள தகவலில், கடந்த 2010ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், இருதயம் அல்லது நுரையீரல் வியாதி, ஸ்டிரோக், புற்றுநோய் அல்லது நீரிழிவு ஆகியவற்றால் ஏற்படும் மரணங்களை மேற்கூறிய காரணிகளை கட்டுப்படுத்துவதால் ஆண்களில் 22 சதவீதம் பேரும், பெண்களில் 19 சதவீதம் பேரும் வருகிற 2025ம் ஆண்டிற்குள் உலக அளவில் விரைவாக மரணமடைவதை தடுக்க முடியும் என தெரிவித்துள்ளனர். 

அதன்படி, கட்டுப்படுத்தும் காரணிகளை கடைப்பிடிக்காவிட்டால், வருகிற 2025ம் ஆண்டில் 3.88 கோடி பேர் விரைவில் மரணமடையும் வாய்ப்பு உள்ளது என்றும் இது கடந்த 2010ம் ஆண்டில் நடந்த மரண விகிதத்தை காட்டிலும் 1.05 கோடி எண்ணிக்கையில் அதிகம் என்றும் அந்த குழு தெரிவித்துள்ளது. 

இதற்காக ஆய்வு குழுவினர், தேசிய மக்கள் தொகை தகவல் மற்றும் மக்கள் சுகாதாரம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு தகவல்களை கணக்கிட்டு உள்ளனர்.  மக்கள் மரணத்தை தள்ளி போடுவதற்கு கடைப்பிடிக்க வேண்டிய அம்சங்கள் என்றால், 30% புகையிலை கட்டுப்பாடு, 10% மதுபான கட்டுப்பாடு, 30% உப்பு கட்டுப்பாடு, 25% உயர் ரத்த அழுத்த கட்டுப்பாடு மற்றும் பரவலாக காணப்படும் கொழுப்பு சேருவதால் உண்டாகும் தொப்பை மற்றும் நீரிழிவு நோய் போன்றவற்றை தடுத்து நிறுத்துவது ஆகியவை அதிக பலன் தரும். 

அதனுடன், வருகிற 2025ம் ஆண்டிற்குள் புகைப்பிடித்தலை 50% கட்டுப்படுத்துவதால், ஆண்களில் 24% பேரும், பெண்களில் 20% பேரும் மரணத்தை விரைவில் எதிர்கொள்வதை தள்ளிபோடலாம் என அவர்கள் குறிப்பிட்டு உள்ளனர்.  பெரும்பாலும், குறைந்த வருவாய் மற்றும் நடுத்தர வருவாய் கொண்ட நாடுகளில், 3.1 கோடி பேர் இதனால் அதிக பயன் அடைவார்கள். இதனால் 30-70 வயது உடையவர்களில் 1.6 கோடி பேரையும் மற்றும் 70 அல்லது அதற்கு மேல் 15 வருடங்கள் வயதுடையோரில் 2.1 கோடி பேரையும், விரைவாக மரணம் அடைவதில் இருந்து அவர்களை தடுத்து காத்திடலாம்.  இது உலக அளவிலான மக்களுக்கு பொருந்தும் என்பது ஆய்வின் சிறப்பம்சம். 

குறைந்த வயதில் மரணம் என்பது 30 முதல் 70 வயதுக்கு உட்பட்டோரை குறிக்கும் வகையில் வரையறுக்கப்பட்டு உள்ளது.  மேலும், 2010 மற்றும் 2025ம் ஆண்டிற்குள் 25 சதவீதம் பேரை விரைவாக மரணம் அடைவதில் இருந்து தடுக்க ஐ.நா. சபை இலக்கு நிர்ணயித்துள்ளது. இது போன்ற வியாதிகள் சுகாதாரமற்ற வாழ்க்கை முறைகளான, புகையிலை பயன்பாடு, உடலை வளைத்து வேலை செய்யாமை, தீங்கு தரும் மதுபான பயன்பாடு மற்றும் சுகாதாரமற்ற உணவு பழக்கங்கள் ஆகியவற்றினால் ஏற்படுகின்றன.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

www.facebook.com/nelliadynet

 
Support :
Template Design by V.Rajeepan Published by Nelliadynet Template