வாஷிங்டன்: குடிபோதையில் கார் ஓட்டுவதை தடுக்கும் புதிய தொழில்நுட்பத்தை அமெரிக்காவை சேர்ந்த விஞ்ஞானிகள் உருவாக்கி வருகின்றனர்..
குடிபோதையில் வாகனங்களை ஓட்டும்போது நிகழும் விபத்துக்களால்,சர்வதேச அளவில் ஆண்டுதோறும் லட்சக்கணக்கானோர் உயிரிழக்கின்றனர். குடிபோதையில் கார் ஓட்டுவதை தடுக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளும், பிரச்சாரங்களும் போதிய பலனை அளிக்கவில்லை.
சர்வதேச பிரச்சினையான இதற்கு தீர்வு காணும் வகையில்,குடிபோதையில் வாகனங்கள் ஓட்டுவதை தடுப்பதற்கு வட அமெரிக்காவை சேர்ந்த தனியார் நிறுவனத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கி வருகின்றனர். இந்த புதிய தொழில்நுட்பம் குறித்த செயல்விளக்க நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய ஆய்வுக்குழு தலைவர் கூறியதாவது:
"டிரைவர் உடலில் உள்ள ஆல்கஹால் அளவை கண்டுபிடிக்க நவீன தொழில்நுட்பம் கொண்ட கருவி காரில் பொருத்தப்படும்.கார் கதவுகள் மற்றும் ஸ்டீயரிங்கில் மது அளவை கண்டுபிடிக்க பொருத்தப்பட்டிருக்கும் சென்சார்களுடன் இந்த கருவி இணைக்கப்படும்.
ஸ்டீயரிங்கில் உள்ள சென்சார்கள் மீது டிரைவர் கையை வைக்கும்போது, அவரது தோலின் வழியாகரத்தத்தில் உள்ள ஆல்கஹால் அளவை இந்த கருவி ஒரு சில வினாடிகளில் கண்டுபிடித்துவிடும். மேலும், டிரைவரின் ரத்தத்தில் 0.08 சதவீதத்திற்கு மேல் ஆல்கஹால் அளவு இருந்தால், காரை ஸ்டார்ட ஆகாதவாறு இந்த கருவி தடுத்தவிடும்.
பிரீத் அனலைசர் கருவியின் தொழில்நுட்பத்தில் இருந்து,இந்த தொழில்நுட்பம் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும். தற்போது சோதனை கட்டத்தில் உள்ள இந்த தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் பணிகள் அமெரிக்க நெடுஞ்சாலை ஆணையத்தின் நிதி உதவியுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த தொழில்நுட்பம் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு 8முதல் 10 ஆண்டுகள் ஆகலாம். இந்த தொழில்நுட்பம் பயன்பாட்டுக்கு வரும்போது குடிபோதையால் ஏற்படும் விபத்துக்கள் மற்றும் உயிரிழப்புகளை முற்றிலும் தடுக்க முடியும்,"என்றார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !