வாஷிங்டன்,
\
பூமி மீது விண்கற்கள் 3 முதல் 10 முறை அதிகமாக மோதி பாதிப்பை ஏற்படுத்தி உள்ளன என்று முன்னாள் விண்வெளி வீரர்கள் தெரிவித்துள்ளனர். வருகிற 22ந்தேதி பூமி நாள் கொண்டாடப்படுகிறது.
இந்த தினத்தில், விண்வெளியில் பயணம் செய்த மூத்த விண்வெளி வீரர்களான எட் லூ, டாம் ஜோன்ஸ் மற்றும் பில் ஆண்டர்ஸ் ஆகியோர் திகிலூட்டும் செய்தி ஒன்றினை தெரிவிக்க உள்ளனர். பூமி மீது விண்கற்கள் மோதியது குறித்து இதற்கு முன்பு வெளியான தகவலை விட தற்பொழுது வெளியிடப்படும் தகவல் அச்சம் தருவதாக இருக்கும். இதற்கு தங்களிடம் போதிய ஆதாரமும் உள்ளது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக சியாட்டில் நகரில் நடைபெறும் நிகழ்ச்சியில் அது குறித்த தகவலை வெளியிட அவர்கள் முடிவு செய்துள்ளனர். எனினும், அதற்கு முன்பாக செய்தியாளர்கள் சந்திப்பில், எட் லூ தலைமையிலான பி612 என்ற அமைப்பு இந்த தகவலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அணு ஆயுதங்கள் எச்சரிக்கை வலைதளத்தின் வழியே கிடைத்த தகவலின்படி, கடந்த 2001ம் ஆண்டில் இருந்து 26 மல்டி&கிலோ டன் வெடிப்புகள் நடந்துள்ளன. இவை அனைத்தும் விண்கற்கள் மோதலால் நடந்துள்ளவை.
அதன்படி, விண்கற்கள் மோதல் என்பது எப்பொழுதாவது நடைபெறுவது என்ற கூற்றில் உண்மையில்லை. நாம் இதற்கு முன்பு அறிந்திருப்பதை விட 3 முதல் 10 மடங்கு அதிகமாக இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், கடந்த 2001ம் ஆண்டில் இருந்து மிக பெரிய விண்கற்கள் வருடத்திற்கு 2 முறை என்ற அளவில் தனது தாக்கத்தை பூமி மீது மோதி ஏற்படுத்தி உள்ளது.
இதனால் கடந்த வருடம் வெளியான, ஒவ்வொரு பத்தாண்டுகள் அல்லது இருபதாண்டுகளுக்கு ஒரு முறை பூமி மீது விண்கற்கள் மோதும் வாய்ப்பை நாம் எதிர்பார்க்கலாம் என்ற எச்சரிக்கை தகவலை விட அதிக அச்சம் தரும் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !