வீட்டில் பீட்ஸா செய்வது எப்படி?
வாங்க புதுசா இன்னிக்கு ஒரு டிஷ் எப்படி செய்வதுன்னு தெரிஞ்சிக்கலாம். பீட்ஸா இதுவரை கடையில் தான் சாப்பிட்டுருப்பீங்க. வீட்டிலேயே எளிமையா செய்ய இங்கே சொல்லி தர்றேன். ஓகே?
கல்லிலே பீட்ஸா இது தோசையில் செய்யும் பீட்ஸா ! என்னது தோசை மாவா என முகம் சுழிக்காதீங்க. கடையில் கிடைக்கும் பீட்ஸா வெயிட் போடும் ஆனால் வீட்டில் உள்ள மாவை வைத்தே அதே டேஸ்ட்டுக்கு பீட்ஸா.. ரொம்ப எளிமையா செய்யலாம்
தோசை மாவு புதுசா இருக்கும் போதே இதை செஞ்சிடுங்க. வார கடைசியில் செய்ய பார்த்தா மாவு புளிச்சு போயி சொதப்பிடும்
குடை மிளகாய், வெங்காயம், பெங்களூர் தக்காளி (நாட்டு தக்காளி வேண்டாம்; புளிக்கும். பொடியா நறுக்க முடியாது; தண்ணியா கொட்டும் ) ஆகியவற்றை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வச்சிக்குங்க (பின்னாடி தான் தேவை என்றாலும் அப்போ நறுக்க முடியாது!). - Cheese ஐ கேரட் திருகும் உபகரணம் மூலம் திருகி வச்சிக்குங்க
தோசை கல்லை போட்டு லேசா எண்ணெய் தொட்டு கல்லை துடைச்சிக்குங்க.
அப்புறம் தோசை மாவு கல்லில் ஊத்துங்க. இட்லி மாவில் தான் செய்யணும். தோசை மாவு என்றால் சில பேர் கொஞ்சம் தண்ணியா நினைச்சிட போறாங்க. இட்லி மாவில் கல் தோசை பதத்தில் மொத்தமா ஊத்தணும். மீடியம் அல்லது சின்ன சைசில் இருக்கணும். சுற்றி அதிக எண்ணெய் விடாதீங்க. கொஞ்சமா விடுங்க.
தோசையை மூடியை வச்சு மூடிடுங்க. அடுப்பை சிம்மில் வச்சிடுங்க; மெத்து மெத்துன்னு தோசை நல்லா சாப்ட்டா ரெடி ஆகும்.
இப்போ தக்காளி சாஸ் ஓரளவுக்கு தோசை மேல் ஊற்றி அதை நல்லா சுற்றி தோசை முழுதும் படுகிற மாதிரி செய்யுங்க.
அப்புறம் முதலில் நறுக்கி வச்ச குடை மிளகாய், வெங்காயம், தக்காளி, Cheese இவற்றை தூவுங்க. ஸ்பூன் வைத்து நன்றாக எல்லா இடத்திலும் படுற மாதிரி நிரவி விடுங்க
கொஞ்ச நேரத்தில் பீட்ஸா தோசை தயார் !!.
பீட்ஸா ரெடி!
வெறும் தோசை என்றால் பசங்க நொந்து போவாங்க. இப்படி குடுத்தா செம டேஸ்ட்டி என சாப்பிடுவாங்க. இதுக்கு சட்னி அது இதுன்னு நீங்க எந்த சைட் டிஷும் செய்ய தேவையில்லை என்பது கூடுதல் சிறப்பு.
இந்த வார குழந்தைகள் தினம் அன்று இரவு இந்த பீட்ஸா தான் எங்க வீட்டு மெனு. சூப்பரா இருந்தது !!
இதை படிக்கும் ரங்கமணிகள் இந்த புது டிஷ் செய்து தங்கமணிகளை அசத்துங்க.
தங்கமணிகள் ..நீங்களும் செஞ்சு பாத்துட்டு எப்படி இருந்ததுன்னு சொல்லுங்க !
இன்றுள்ள விலை ஏற்றத்தால் இனி வீட்டு பீட்ஸா சாப்பிட்டா தான் உண்டு ! பீட்ஸா சாப்பிட ஓட்டல் போக முடியாது !
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !