தோப்புக்கரணம் உணர்வைத் தூண்டும் என அன்று மெய்ஞானம் கூறியதை இன்று ஏற்றுக்கொள்ளும் விஞ்ஞானம் - nelliadynet
Headlines News :
Home » » தோப்புக்கரணம் உணர்வைத் தூண்டும் என அன்று மெய்ஞானம் கூறியதை இன்று ஏற்றுக்கொள்ளும் விஞ்ஞானம்

தோப்புக்கரணம் உணர்வைத் தூண்டும் என அன்று மெய்ஞானம் கூறியதை இன்று ஏற்றுக்கொள்ளும் விஞ்ஞானம்

Written By www.kovilnet.com on Friday, January 31, 2014 | 5:34 AM

சைவப் பெரியோர்கள் விநாயகரரை வணங்கும்போது இரண்டு கைகளால் காதுகளைத் பிடித்து  தோப்புக்கரணம் போட்டு தலையில் குட்டிக்கொண்டால் அறிவு வளரும் என்றார்கள். வகுப்பில் படிப்பில் கவனக்குறைவான மாணவர்களை ஆசிரியர்கள் காதைப்பிடித்து திருகி தலையில் கொட்டுவதும், தோப்புக்கரணம் போடச் சொல்வதும் அறிவு வளர்ச்சிக்குத்தான் என்பதும் தெரிகிறது.
இக்காலத்தில் தோப்புக்கரணம் போடுவதை அதிகமாக நாம் காண முடிவதில்லை. ஆனால் இந்த தோப்புக்கரணம் அமெரிக்காவில் ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது என்று சொன்னால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? லாஸ் ஏஞ்சல்ஸைச் சேர்ந்த மருத்துவர் எரிக் ராபின்ஸ் (Dr.Eric Robins) இந்த எளிய உடற்பயிற்சியால் மூளையின் செல்களும் நியூரான்களும் சக்தி பெறுகின்றன என்கிறார். 

அவர் தன்னிடம் வரும் நோயாளிகளுக்கு அந்த உடற்பயிற்சியை சிபாரிசு செய்வதாகக் கூறுகிறார். பரிட்சைகளில் மிகக் குறைந்த மதிப்பெண்கள் எடுக்கும் ஒரு பள்ளி மாணவன் தோப்புக்கரண உடற்பயிற்சியைச் சில நாட்கள் தொடர்ந்து செய்த பின் மிக நல்ல மதிப்பெண்கள் வாங்க ஆரம்பித்ததாகக் கூறுகிறார்.

யேல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நரம்பியல் நிபுணரான டாக்டர் யூஜினியஸ் அங் (Dr. Eugenius Ang) என்பவர் காதுகளைப் பிடித்துக் கொள்வது மிக முக்கிய அக்குபஞ்சர் புள்ளிகளைத் தூண்டி விடுகின்றன என்று சொல்கிறார். 

அதனால் மூளையின் நரம்பு மண்டல வழிகளிலும் சக்தி வாய்ந்த மாற்றங்கள் ஏற்படுவதாக அவர் தெரிவிக்கிறார். இடது கையால் வலது காதையும், வலது கையால் இடது காதையும் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து எழுகையில் மூளையின் இரு பகுதிகளும் பலனடைகின்றன என்று சொல்கிறார்.

தோப்புக்கரணம் போடுவதால் ஏற்படும் மாற்றங்களை EEG கருவியால் டாக்டர் யூஜினியஸ் அங் அளந்து காண்பித்தார். மூளையில் நியூரான்கள் செயல்பாடுகள் அதிகரிப்பதை பரிசோதனையில் காண்பித்த அவர் மூளையின் வலது, இடது பாகங்கள் சமமான சக்திகளை அடைவதாகவும் சொன்னார். மிக நுண்ணிய தகவல் அனுப்பும் காரணிகள் வலுப்பெறுவதும் பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டாக்டர் யூஜினியஸ் அங் தானும் தினமும் தோப்புக்கரணம் போடுவதாகக் குறிப்பிடுகிறார்.

Autism, Alzheimer போன்ற இக்காலத்தில் அதிகரித்து வரும் நோய்களுக்குக் கூட இந்த தோப்புக்கரண உடற்பயிற்சியை ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைக்கிறார்கள். தோப்புக்கரணம் தினமும் செய்வதன் மூலம் மேற்கண்ட நோய்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மிக நல்ல பலன்களைப் பெறுவதாக அவர்களது பரிசோதனைகள் சொல்கின்றன.

ப்ராணிக் சிகிச்சை நிபுணர் கோ சோக் சூயி (Master Koa Chok Sui) தன்னுடைய Super Brain Yoga என்ற புத்தகத்தில் தோப்புக்கரணத்தைப் பற்றியும் அதன் பலன்கள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். தன்னுடைய சொற்பொழிவுகளிலும் இதை அதிகம் குறிப்பிடுகிறார்.

இதனால் தான் தோப்புக்கரணம் பள்ளிகளில் நம் முன்னோர்களால் நடைமுறைப்படுத்தப்பட்டு இருக்கலாம் என்று தோன்றுகிறது. படிக்காத மாணவர்கள் தோப்புக்கரண முறையால் தண்டிக்கப்படுவதன் மூலம் அவர்களது அறிவுத் திறன் அதிகரிக்க வழியும் காண்பிக்கப்பட்டிருக்கிறது என்று தோன்றுகிறது.

இந்த தோப்புக்கரணப்பயிற்சியை தினந்தோறும் மூன்று நிமிடங்கள் செய்தால் போதும் வியக்கத் தக்க அறிவு சார்ந்த மாற்றங்களைக் காணலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். அவர்கள் பரிந்துரைக்கும் தோப்புக்கரண பயிற்சியை அவர்கள் சொல்கின்ற முறையிலேயே காண்போமா?

உங்கள் கால்களை உங்கள் தோள்களின் அகலத்திற்கு அகட்டி வைத்து நின்று கொள்ளுங்கள். உங்கள் பாதங்கள் நேராக இருக்கட்டும். வலது காதை இடது கையின் பெருவிரலாலும் ஆட்காட்டி விரலாலும் பிடித்துக் கொள்ளுங்கள். அதே போல் இடது காதை வலது கையின் பெருவிரலாலும் ஆட்காட்டி விரலாலும் பிடித்துக் கொள்ளுங்கள். பிடித்துக் கொள்ளும் போது இடது கை உட்புறமாகவும், வலது கை வெளிப்புறமாகவும் இருக்க வேண்டும் என்பது முக்கியம்.

மூச்சை நன்றாக வெளியே விட்டபடி அப்படியே உட்கார்ந்து மூச்சை உள்ளே நன்றாக இழுத்தபடி எழுந்து நில்லுங்கள். மூச்சும், உட்கார்ந்து எழுவதும் ஒரு தாளலயத்துடன் இருக்கட்டும்.

செய்து பழக்கமில்லாதவர்களுக்கு ஆரம்பத்திலேயே மூன்று நிமிடங்கள் தொடர்ந்து தோப்புக்கரணம் செய்வது கடினமாக இருக்கலாம். அப்படிப்பட்டவர்கள் ஒரு நிமிடம் செய்வதில் இருந்து ஆரம்பித்து நாட்கள் செல்லச் செல்ல இரண்டு நிமிடங்கள், பிறகு மூன்று நிமிடங்கள் என்று அதிகரியுங்கள்.

ஆராய்ச்சியாளர்கள் சொல்லும் மிக நல்ல பலன்களைப் பார்க்கும் போது உங்கள் அறிவுத் திறனின் வளர்ச்சிக்காக மூன்று நிமிடங்கள் தினமும் செலவழிப்பது மிகப்பெரிய விஷயமல்ல அல்லவா?

நம் முன்னோர்களின் துல்லியமான கண்டு பிடிப்பிற்கு முன்னால் எவ்வளவுதான் விஞ்ஞானத்தில் வளர்ச்சி அடைந்தாலும் ஈடு கொடுத்து நிற்க முடியவில்லை
விநாயகர் முன் தோப்புக்கரணம் போட்டு வணங்குவது எப்படி?
இரண்டு கைகளையும் முட்டியாகப் பிடித்து வலது கையால் வலப்பக்க நெற்றியின் முடிவிலும், இடது கையால் இடது நெற்றியின் முடிவிலும் ஒரே முறையாக மூன்று அல்லது ஐந்து தடவைகள் குட்டியபின், இரண்டு கைகளையும் (பக்கங்களை) குறுக்காக இடது கையால் முதலில் வலது காதையும், அதன்பின் வலது கையால் இடது காதையும் பிடித்துக் கொண்டு மூன்று, ஐந்து, ஏழு அல்லது ஒன்பது முறை பாதம்வரை பதிந்து எழும்புதல் வேண்டும். இடது கையானது நெஞ்ச்சோடு (இருதயத்துடன்) ஒட்டி இருக்க வேண்டும் வலது கை அதற்கு மேல் இருக்க வேண்டும். தோப்புக்கரணம் போடும்போது விகினேஸ்வரை ஒருமனதாக நிணைத்து "ஓம் விக்நேவராய நம" என கசிந்துருகி வணங்க்குதல் வேண்டும்.
பொதுவாக இறைவனை வணகும்போது தலையும் (தலையையும் தாழ்த்தி) வணங்க வேண்டும், கைகள் கூப்புவதுபோல் கால்களையும் ஒன்றாக சேர்த்து (கை கால் கூப்பித் தொழு) தொழுதல் வேண்டும். அத்துடன் எமக்கு மேலான தெவத்தை வணநும்போது கைகள் தலைக்கு மேலே இருத்தல் வேண்டும் என்பது சைவசமய நியதி. நண்பர்களையும், விருந்தினர்களையும் வணங்கும் போது கைகள் நெஞ்ச்சுக்கு நேராகவும், பெரியோர்கள், பெற்றோர், குருமாரை வணங்கும்போது சற்று உயர்த்தி முகத்திற்கு நேராகவும், கடவுளை வணங்கும்போது தலைக்கு மேலாகவும் கூப்பித் தொழ வேண்டும் என சமய நூல்கள் கூறுகின்றன.  
                                                                         சுபம்
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

www.facebook.com/nelliadynet

 
Support :
Template Design by V.Rajeepan Published by Nelliadynet Template