வலம் புரிச்சங்கு பூஜை சிறப்பும், பலனும்..! - nelliadynet
Headlines News :
Home » » வலம் புரிச்சங்கு பூஜை சிறப்பும், பலனும்..!

வலம் புரிச்சங்கு பூஜை சிறப்பும், பலனும்..!

Written By www.kovilnet.com on Tuesday, January 28, 2014 | 4:49 AM


1.ஒரு வீட்டில் இச்சங்கு அலங்காரமாக வைக்கப்பட்டிருந்தால் குபேரன் 
   அருள்,மகாலட்சுமியின் நித்திய வாசம் தொடர்ëந்து இருக்கும்.
2. கடலில் உள்ள ஒரு வகை நத்தையின் கழிவு மூலம் ஓடு போன்று 
   உருவாகிவருவதே சங்கு என்றாலும் குபேரன் அருளைப் பெற்றுத் தருவது.
3. வலம்புரிச் சங்கில் தீர்த்தம் துளசி இட்டு பூஜை செய்து மங்கள ஸ்நானம் 
    செய்தால் நமக்கு பிரம்மகத்திதோஷம் இருப்பின் போய்விடும். இதையே 
     தர்ம  சாஸ்திரம். ``சங்க மத்யே ஸ்திதம் தோயம் ப்ராமிதம் சங்கரோ ஸ்ரீ! 
     அங்க லஷணம்  மனுஷ்யானாம் ப்ரம்மஹத்யாயுதம் தாகத்'' என்று 
     விளக்குகிறது. சுவாமிக்கு அபிஷேகம் செய்தாலும் நமக்கு உள்ள
     தோஷம் நீங்கிவிடும். கார்த்திகை சோமவாரத்தில் 108 சங்கு 
     அபிஷேகத்தில் நடுவில் வலம்புரிச்சங்கு உருவில் குபேரன் இருப்பார்.
4. நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் சங்கு நாதத்தால் ஆழ்வார்கள் பக்திப் பரவசம் 
    அடைவதை, பேதாண்டப் பெதுவி என்ற வார்த்தையால் குறிப்பிடுகின்றனர்.
5. வாஸ்து தோஷம் உள்ள வீட்டில் துளசி தீர்த்தத்தை சங்கில் இட்டு பிரதி 
     வெள்ளி தெளித்து வர தோஷம் விலகி நலம் உண்டாகும்.
6. செவ்வாய் தோஷம் உள்ள பெண்கள் செவ்வாய் தோறும் வலம்புரிச்சங்கில்
    பால் வைத்து அங்காரக பூஜை செய்ய தோஷம் விலகி திருமணம் நடந்து 
    விடும்.
7. அதிகக் கடன் வாங்கியவர்கள் பௌர்ணமி தோறும் சங்குக்கு குங்கும், 
    அர்ச்சனை செய்து வர கண்ணுக்குத் தெரியாமல் கடன் தீரும். 16-வலம்புரிச் 
     சங்கு கோலமிட்டு  நடுவில் தீபம் ஏற்றிட கடன் தீரும்.
8.சுத்தமான உண்மையான வலம்புரிச்சங்கு பூஜிக்கப்படும் வீட்டில் பில்லி 
    சூன்யங்கள்,  ஏவல்கள் நெருங்காது. ஓடிவிடும்.
9. ஒரு தெய்வத்துக்கு சங்கால் அபிஷேகம் செய்வதால் 10 பங்கு அபிஷேகம்
    செய்த பலனைப் பெறுகிறோம்.
10. பிறந்த குழந்தைக்கு ஜுரம் வந்தால் சங்கில் நீர்விட்டு உத்ராட்சம் இட்டு 
     அது ஊறிய நீரை மட்டும் ஊட்டி விட ஜுரம், தோஷங்கள் அனைத்தும் 
    விலகும்.
11. பூஜை அறையில் ஒரு சிறு தட்டில் அரிசி போட்டு அதில் சங்கை வைத்து பூ, 
      பொட்டிட்டு வணங்கி வருவதால் உணவுக்குப்பஞ்சமே வராது
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

www.facebook.com/nelliadynet

 
Support :
Template Design by V.Rajeepan Published by Nelliadynet Template