நடக்கும் மீன்கள்
ஆம் மனிதர்களைப் போலவே அதுவும் லாவகமாக நடக்கின்றன. மஞ்சள் வண்ணம் பிங்க் கலரில் கடலில் வாழும் இந்த மீன்களின் இனம் அழிந்து வருகின்றன. இப்போது இந்த மீன்கள் தெற்கு ஆஸ்திரேலியா கடலோரப் பகுதியான டாஸ்மேனியாவில் மட்டும் காணப்படுகிறது. கடல் மீன் குடும்பங்களில் மிகவும் உயர் ரகத்தைச் சேர்ந்தது இந்த நடக்கும் மீன். இதனை தமிழில் நடக்கும் மீன் எனக் குறிப்பிட்டாலும், இதன் அறிவியல் பெயர் ஙிக்ஷீணீநீலீவீஷீஸீவீநீலீtலீஹ்வீபீணீமீ. இது தூண்டில் மீன் இனத்தின் வகையைச் சேர்ந்தது.
கடல் வாழ் மீன் இனங்களில் கைகளும் கால்களும் கொண்டுள்ள ஒரே மீன் வகை இனம் இது மட்டும்தான். இது கிட்டதட்ட 15 செ.மீ நீளத்திற்கு வளர்கின்றது. கடலுக்கு அடியில் உணவு தேடும்போது தன் கால்களால் நடந்து கைகளால் உணவைத் தேடி உண்கின்றது. அதே போல மற்ற மீன்கள் தன் செவில்களினால் நீந்துகின்றன. ஆனால் ஆங்கிலத்தில் ஹேன்ட் ஃபிஸ் என அழைக்கப்படும் இந்த மீன் தன் கைகள் மற்றும் கால்களால் நீந்துகின்றன.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !