கடலில் சிக்கிய கருப்புச் சாத்தான்..!
தற்போது சிக்கியுள்ள ஏலியன் மீன் கருப்பு நிறத்தில் உள்ளது. சுமார் ஒன்றரை அடி நீளமுள்ள இதன் கண்கள் அகலமாக பிரகாசமாக உள்ளன. தலையை விட அதிகமாக பிளந்து நிற்கும் இதன் வாயைப் பார்த்தாலே எதிரிக்கு பயம் வந்து விடும். வாய் முழுவதும் ஒழுங்கற்று அமைந்துள்ள ஊசி ஊசியான கோரைப் பற்கள், பிடிக்கும் இரையை குத்திக் கிழிப்பதற்காகவே அமைந்துள்ளன. இது தவிர உடலின் பிற்பகுதியில் நீண்ட வால் உள்ளது. இந்த வாலின் பெரும் பகுதி முட்களால் சூழப்பட்டுள்ளது.
இந்த முட்கள் அனைத்தும் கடுமையான விஷத்தன்மை கொண்டவை. இந்த வகை மீன்கள் ஆழ்கடல் பகுதியில் மட்டுமே காணப்படுகின்றன. தற்போது பிடிபட்ட ஏலியன் மீன் கடலடியில் அதாவது, 7 ஆயிரம் அடி ஆழத்தில் பிடிபட்டுள்ளது. அதுபோன்ற ஆழ்கடல் பகுதியில் இருக்கும் உயிரினங்கள் தாங்களாகவே ஒளியை உமிழும் தன்மை கொண்டவையாக இருக்கும். அதுபோலவே ஏலியன் மீனும் தனது வாயில் உள்ள நீட்சி ஒன்றின் மூலமாக பல்வேறு நிறங்களை உமிழுகின்றது. இந்த ஒளியில் மயங்கியோ, உணவாக நினைத்தோ அருகில் வரும் மற்ற மீன்களை வேட்டையாடும் திறமை கொண்டது ஏலியன் வகை மீன்.
இந்த வகை மீன்களில் ஆச்சரியப்படும் விஷயம் ஒன்று உள்ளது. அது ஆண் மீன்கள் 5 செ.மீ நீளம் மட்டுமே உடையவை. பெண் மீன்களோ 40 செ.மீ. நீளம் கொண்டவை. ஏலியன் மீனுக்கு ‘இடியாகேன்தஸ் அட்லாண்டிகஸ்’ என்று அறிவியல் நாமகரணம் சூட்டியுள்ளனர். ஆழ்கடலில் இருந்தாலும் இந்த மீன்கள் நன்னீர் வகை மீன்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இது எப்படி சாத்தியமாகும்..?
கடலுக்கு அடியில் 7 ஆயிரம் அடி ஆழத்தில் ஓடும் நீரோட்டங்களில் இந்த மீன்கள் வாழலாம் என்று கணித்துள்ளனர். அந்த நீரோட்டங்களில் ஒரு சிலவகை கடல் நீர் கலந்தும் சில வகை நீரோட்டங்கள் (அதாவது பாறைக்கு அடியில் ஓடும் ஆறுகள்) நன்னீராகவும் இருப்பதால் ஏலியன் மீன்கள் நன்னீர் வகை மீன்கள் என்று ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளளனர். நல்லவேளை அதனை யாரும் ருசித்துப் பார்க்கவில்லை. இல்லையென்றால் அதையும் ஒரு கை பார்த்து விடுவோம்…!
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !