கடந்த 15-ம் தேதி எரி நட்சத்திரம் ஒன்று ரஷ்யாவின் யூரல் மலைப் பகுதிகளில் வெடித்துச் சிதறியது. இதில் பல வீடுகளும் தொழிற்ச்சாலைகளும் கடுமையாக சேதம் அடைந்தன. இந்த சம்பவத்தில் 1500- க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அவர்களில் 46 பேர் இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவத்தால் 33 மில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிகின்றன. இந்நிலையில் உரல் மலைப் பகுதிகளில் ஆராய்ச்சி நடத்திவரும் 'யூரல் பெடரல் பல்கலைக்கழகம்' விஞ்ஞானிகள் நேற்று எரி நட்சத்திரத்தின் துகள்களை கண்டுபிடித்துள்ளனர்.
உறை பனி மூடிய 'செபர்குல்' ஏரியில் 6 மீட்டர் அகல பெரிய துளையை எரி நட்சத்திரம் ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஏரிக்கு அடியிலும் ஆராய்சிகள் செய்யப்பட்டு வருகின்றன. ஏரியின் மேல் தளத்தில் ஒரு சென்டி மீட்டருக்கும் குறைவான அளவுள்ள 53 துகள்களை இந்தக் குழு கண்டுபிடித்துள்ளது.
இந்தத் துகள்களில் 10 சதவிகிதம் இரும்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதற்கிடையே இந்த எரிநட்சத்திரத்தின் துகள்களை வாங்குவதற்கு கடும் போட்டி நிலவுகிறது. இதனால் இந்தத் துகள்களின் மதிப்பு அதிகரித்து உள்ளது. இதனால், அப்பகுதியில் வசிபவர்களும் இந்த துகள்களை கண்டுபிடிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
எரி நட்சத்திரத்தின் தாக்குதலை முன்கூட்டியே கண்டுபிடித்து தடுக்கும் விதமாக, பத்து ஆண்டுகளுக்குள் 1.9 பில்லியன் செலவில் புதிய அதி நவீன தொலைநோக்கியை நிறுவ ரஷிய விண்வெளி ஆராய்ச்சி மையம் முடிவு செய்துள்ளது.

0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !