சந்திரன் பாறைகளில் தண்ணீர் அறிகுறி: அமெரிக்கா ஆய்வில் தகவல் - nelliadynet
Headlines News :
Home » » சந்திரன் பாறைகளில் தண்ணீர் அறிகுறி: அமெரிக்கா ஆய்வில் தகவல்

சந்திரன் பாறைகளில் தண்ணீர் அறிகுறி: அமெரிக்கா ஆய்வில் தகவல்

Written By www.kovilnet.com on Tuesday, February 19, 2013 | 12:05 AM


சந்திரன் பாறைகளில் தண்ணீர் அறிகுறி: அமெரிக்கா ஆய்வில் தகவல்

அமெரிக்கா சந்திரனுக்கு விஞ்ஞானிகளை அனுப்பி ஆய்வு மேற்கொண்டது. அதற்கு 'அப்பல்லோ மிஷன்' என பெயரிடப்பட்டது. அப்போது, அங்கிருந்து எடுத்து வரப்பட்ட பாறைகளின் மூலம் சந்திரனில் தண்ணீர் உள்ளதா என்ற ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

இந்த ஆய்வில் ஈடுபட்ட மிசிகன் பல்கலைக்கழக நிபுணர்கள் தற்போது ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதன்படி சந்திரனில் இருந்து எடுத்து வரப்பட்ட பாறை படிவங்களை ஆய்வு செய்வதில் சந்திரனில் தண்ணீர் இருந்ததற்கான அறிகுறி உள்ளது என உறுதி செய்துள்ளனர். 

சந்திரன் உருவானபோது அது ஈரத்தன்மையுடன் இருந்திருக்க வேண்டும். அது முழு வடிவாக மாறியபோது அதன் ஈரத்தன்மை குறைந்து கெட்டியாகி பாறையாக மாறி இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மிகவும் பளபளப்பான நிறத்தினால் ஆன இந்த பாறை சந்திரன் தோன்றியபோது உருவாகியிருக்கலாம். 

எடை குறைவு காரணமாக இவை அங்கிருந்த மேக்மா என்ற கடலில் மேற்பரப்பில் மிதந்து இருக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. அந்த பாறைகளில் 'பிலிஜியோகல்ஸ் பெல்ட்ஸ்பா' என்ற தண்ணீர் துகள்கள் உள்ளன. எனவே சந்திரனில் தண்ணீர் இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.


tamil matrimony_INNER_468x60.gif
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

www.facebook.com/nelliadynet

 
Support :
Template Design by V.Rajeepan Published by Nelliadynet Template