ஒளி ஆண்டு என்றால் என்ன ? - nelliadynet
Headlines News :
Home » » ஒளி ஆண்டு என்றால் என்ன ?

ஒளி ஆண்டு என்றால் என்ன ?

Written By www.kovilnet.com on Tuesday, February 11, 2014 | 5:03 AM

2009-07-18eclipse003_solor
நாம் ஒரு மணி நேரத்தில் எவ்வளவு தூரத்தைக் கடக்கலாம். நடந்து சென்றால் 5 அல்லது 6 கிலோமீட்டர். பேருந்தில் பிரயாணித்தால் 60 -80 கி.மீ.விமானத்தில் சென்றால் 400 – 500 கி.மீ. சில விமானங்கள் மணிக்கு 1500 கி.மீ கடக்கும் வல்லமை பெற்றுள்ளன. ராக்கெட்டுகள் இதைவிட அதிக தூரத்தை (சுமார் 20,000 கி.மீ) கடக்கலாம். இவற்றையெல்லாம் ‘கி.மீ ‘ என்ற அலகால் எளிதில் அளந்து விடுகிறோம்.
சரி பூமியிலிருந்து சூரியன் எத்தனை கி.மீ? தோராயமாக 149 ,600 ,000 கிலோமீட்டர்கள். அதாவது கிட்டத்தட்ட 15,00,00,000 கி.மீ. அதாவது 15 கோடி கி.மீ. நமது விண்மீன் மண்டலமான பால்வீதியின் உள் வட்டத்தில் அமைந்துள்ள ஓரியன் வளைவில் சூரியன் அமைந்துள்ளது. சூரியன் அமைந்துள்ள இடத்தில் இருந்து விண்மீன் மண்டல மையம் சுமார் 24 ,800 ஒளியாண்டுகள் இருக்கலாம் எனறு கணிக்கப்படுகிறது
ப்ராக்சிமா செண்டரி

சூரியனுக்கு அடுத்தபடியாக ப்ராக்சிமா செண்டாரி என்ற நட்சத்திரம் உள்ளது. இதன் தூரம் 41 போட்டு 12 ஜீரோக்கள். அதாவது 41 லட்சம் கோடி கி.மீ.இதனைவிட தூரமான நட்சத்திரங்கள் கணக்கிலடங்காமல் உள்ளன.இவற்றின் தூரத்தை எப்படி கூற முடியும்? இதற்கான அலகுதான் ஒளி ஆண்டு ஆகும்.
ஒளி ஆண்டு என்றால் என்ன? மிகத் தொலைவில் உள்ள நட்சத்திரங்களின் தூரத்தைக் குறிப்பிட ஒளியாண்டு தூரம் என்ற கணக்கு வசதியானது. சொல்வது சுலபம், எழுதுவது அதைவிட சுலபம். நிறைய பூஜ்யங்களைப் போட வேண்டியது இல்லை.

ஒளியானது ஒரு ஆண்டிற்கு செல்லும் தூரம்தான் ஒளி ஆண்டு ஆகும். ஒளி ஒரு நொடியில் பாய்கின்ற தூரம் 3,00,000 கி.மீ. ஒரு நிமிடத்திற்கு 3,00,000 * 60 = 1,80,00,000 கி.மீ. ஒரு ஆண்டிற்கு பாயும் தூரம்?
நொடி – 60, நிமிடம் – 60, ஒரு நாள்- 24, ஒரு ஆண்டு – 365 1/4
3,00,000 * 60 * 60 * 24 * 365 1/4 = 9,460,730,472,580.8 கி.மீ. இதையே மைல் கணக்கில் சொன்னால் 5,878,625,373,183.608 மைல். இதுதான் ஒரு ஆண்டிற்கு ஒளி பாயும் தூரமாகும்.
இதை நாம் உச்சரிப்பதற்குள் மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கும். எனவே இவற்றை ஒளி ஆண்டில் – light year ( குறியீடு- ly ) உச்சரிக்கலாம். ஒரு நொடியில் 3 லட்சம் கி.மீ வேகத்தில் செல்லும் ஒளியானது சூரியனிலிருந்து பூமிக்கு வந்தடைய 8 நிமிடம் ஆகும். எனவே பூமியிலிருந்து சூரியன் 8 ஒளி நிமிடத்தொலைவில் உள்ளது. இது சொல்வதற்கு எளிதாக இருக்கும் . இதேபோல் ப்ராக்சிமா செண்டரி பூமியிலிருந்து 41,00,000,00,00,000 கி.மீ தூரத்தில் உள்ளது. இதை ஒளி ஆண்டில் சொன்னால் 4.2 ஒளி ஆண்டு ஆகும். அதாவது உங்களுக்கு ஒரு வயது இருக்கும்போது ப்ராக்சிமா செண்டரியிலிருந்து புறப்படும் ஒளி உங்களுக்கு ஐந்து வயதாகும் போதுதான் பூமியை வந்தடையும்.
பிரபஞ்சத்தில் ஏராளமான நட்சத்திரங்கள் உள்ளன. இப்போது பார்ப்பது சில நூறு அல்லது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் அந்த நட்சத்திரங்களிலிருந்து புறப்பட்ட ஒளியேயாகும். அவை இப்போது அங்குதான் இருக்குமா? சில வெடித்துப் போயிருக்கலாம், சில இடம்மாறிப் போயிருக்கலாம்!!! காலை பதினோரு மணிக்கு நீங்கள் விண்ணைப் பார்க்கும் போது, 10 மணி 52 நிமிட நேரத்தில் இருந்த சூரியனைத்தான் பார்ப்பீர்கள். அதாவது 8 நிமிடங்களுக்கு முன்னால் இருந்த சூரியனைத்தான் நாம் இப்போது பார்க்கிறோம். எவ்வள்வு வேடிக்கையான ஒன்று!

காலெக்ஸி
நன்றி : google images
பிரபஞ்சத்தில் நிறைய நட்சத்திர கூட்டங்கள் உள்ளன. பழங்கால மனிதர்கள் அசுவணி – குதிரை முகம்போல், பரணி – அடுப்புக்கல் போல், திருவாதிரை – நெருப்புக்கட்டி போல் என்றெல்லாம் வகைப்படுத்தியுள்ளனர். ஏராளமான நட்சத்திரங்களின் கூட்டம் காலெக்ஸி எனப்படும்.பிரபஞ்சத்தில் எண்ணற்ற காலெக்ஸிகள் உள்ளன. எல்லையில்லாப் பிரபஞ்சம்… நினைக்கவே பயமாக உள்ளது. எல்லை இனி இல்லை.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

www.facebook.com/nelliadynet

 
Support :
Template Design by V.Rajeepan Published by Nelliadynet Template