விண்ணில் உள்ள வாயு, தூசி, ஒளி போன்றவற்றை, தன்வசம் ஈர்க்கும் கருந்துளையை (பிளாக் ஹோல்ஸ்) இந்திய விஞ்ஞானி தலைமையிலான குழு கண்டுபிடித்துள்ளது. பிரிட்டன் கேம்ப்ரிட்ஜை சேர்ந்த, இந்திய விஞ்ஞானி மாண்டா பானர்ஜி தலைமையிலான குழுவினர் "யுஎல்ஏஎஸ்ஜெ1234+0907' என்ற சக்தி வாய்ந்த கருந்துளையை கண்டறிந்துள்ளனர். இது குறித்து விஞ்ஞானி மாண்டா பானர்ஜி கூறியதாவது:
விண்ணில் இருக்கும் இந்த கருந்துளைகள், அடர்த்தியான தூசியால் மூடப்பட்டிருப்பதால், இதற்கு முன் இதனை கண்டறிவதில் சிரமம் இருந்தது. ஆனால், தற்போது அதிநவீன தொலைநோக்கியை பயன்படுத்தி, ஆராய்ச்சி செய்ததில், இவை, அதிகளவில் கதிர் வீச்சை வெளியிடுவது தெரிந்தது. அருகில் காணப்படும், நட்சத்திர கூட்டங்களில் உள்ள பொருட்களை தன்னுள் இழுப்பதினாலே கருந்துளையின் வெப்பம் அதிகரித்து, அதன் காரணமாகவே கதிர்வீச்சை வெளியிடுகிறது.
கன்னிராசி நட்சத்திர மண்டலத்திற்கு அருகே உள்ள, இந்த கருந்துளை மிகவும் பெரியதாக கருதப்படுகிறது.பூமியிலிருந்து மிகவும் தொலைவில் இருப்பதால், இதன் ஒளி, பூமியை வந்தடைய 1100 கோடி ஆண்டுகள் ஆகும். இது, சூரியனை விட 1000 கோடி மடங்கு அதிக அடர்த்தியானது. நமது பால்வழி மண்டலத்தை விட, 10 ஆயிரம் மடங்கு அடர்த்தி மிக்கது.
இதுபோன்ற சக்தி வாய்ந்த, 400 கருந்துளைகள் விண்ணில் இருக்க கூடும். அனைத்து நட்சத்திர மண்டலங்களிலும், இவ்வகை பெரிய கருந்துளைகள் இருக்கும். அவை, அருகிலுள்ள நட்சத்திர மண்டலங்களோடு மோதி, அந்த நட்சத்திர துகள்களை, தன்னுள் இழுத்துக் கொள்ளும்.இவ்வாறு மாண்டா பானர்ஜி கூறினார்.

0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !