விண்கல்லை இழுத்துவர கங்கணம் கட்டிநிற்கும் நாசா..! - nelliadynet
Headlines News :
Home » » விண்கல்லை இழுத்துவர கங்கணம் கட்டிநிற்கும் நாசா..!

விண்கல்லை இழுத்துவர கங்கணம் கட்டிநிற்கும் நாசா..!

Written By www.kovilnet.com on Friday, January 4, 2013 | 6:17 AM


அமெரிக்க விண்வெளி ஆராட்சி மையம் விஷப் பரிட்ச்சை ஒன்றில் ஈடுபட்டுள்ளது ! அதாவது வேலியில் போன ஓணானை எடுத்து மடியில் போட்ட கதை என்று தமிழர்கள் அடிக்கடி செல்லுவார்களே ! அதேபோன்றதொரு நிகழ்வு தான் நடைபெறவுள்ளது. இதற்கு 2.5 பில்லியன் டாலர்கள் செலவிடவும் உள்ளது நாசா ! அப்படி என்ன விடையம் என்று யோசிக்கிறீர்களா ?

பூமியில் இருந்து பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் மிகவும் வேகம் குறைவாக , பயணித்துக்கொண்டு இருக்கும் விண் கல் ஒன்றை அப்படியே லாவகமாகப் பிடித்து பூமி நோக்கி இழுத்துவர நாசா முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இந்த விண் கல்லில் விட்டம் சுமார் 20 மீட்டர் இருக்கும் என்று நம்பப்படுகிறது. இந்த விண் கல்லை பிடிக்கும் வேலையை ஒரு ரோ-போ பிடிக்கவுள்ளதாம். இதற்காகவே ஒரு பிரத்தியேக ராக்கெட்டும் அதனுடன் கூடிய ரோ-போ வும் தயாரிக்கப்பட்டு வருகிறது.

பூமியில் இருந்து ஏவப்படும், இந்த ராக்கெட் குறிப்பிட்ட இந்த விண் கல்லை நோக்கிச் சென்று, அதனை முதலில் ஆராயும் எனவும் பின்னர், 20 மீட்டர் அகலம் கொண்ட பிளாஸ்டிக் பை ஒன்றால் அதனைப் போர்த்தி, பின்னர் பூமி நோக்கி இழுத்துவரும் என்றும் நாசா தெரிவித்துள்ளது. இந்த விண் கல் பூமியை நோக்கி இழுத்துவர, சுமார் 10 ஆண்டுகள் பிடிக்கும் எனவும், இவ்வாறு இழுத்துவரப்படும் கல் சந்திரனை சுற்றி வரும்படி அதன் ஓடுபாதை மாற்றப்படும் எனவும் நாசா மேலும் தெரிவித்துள்ளது.

எனவே சந்திரனுக்குச் செல்லும் விஞ்ஞானிகள், பின்னர் இக் கலையும் ஆராயலாம். தேவைப்பட்டால் அதன் மீது தரையிறங்கவும் முடியும். குறிப்பிட்ட இந்த விண் கல்லை சுழலவிட்டால், அதில் சிறிய அளவு ஈர்ப்பு சக்தியும் உண்டாகும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்கள். இந்த விண் கல் ஏன் இவ்வளவு முக்கியமானது ? இல்லை என்றால் குறிப்பிட்ட இந்த விண் கல்லை மட்டும் ஏன் நாசா விஞ்ஞானிகள் குறிவைத்துள்ளார்கள் என்று தெரியவில்லை.

இது தனது பாதை மாறி, பூமியோடு மோதினால் என்னவாகும் ? இதில் எவ்வகையான வாயுக்கள் காணப்படுகிறது. இது வெடிக்கும் தன்மையுடையதா என்பது போன்ற விபரங்கள் இதுவரை அறியப்படவில்லை. ஆனால் அதனை கட்டி இழுத்து பூமியின் பக்கம் கொண்டுவரவேண்டும் என்று கங்கணம் கட்டி நிற்கிறது நாசா ! இனி என்ன நடக்குமோ தெரியவில்லை ! பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் !
செய்தி வகை: 
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

www.facebook.com/nelliadynet

 
Support :
Template Design by V.Rajeepan Published by Nelliadynet Template