உலகின் மிக அதிக சக்திவாய்ந்த ரேடியோ அலை தொலைநோக்கி தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து ஆகிய மூன்று நாடுகளிலுமாக அமையப்போகிறது.
மூவாயிரம் ரேடியோ ஆண்டெனாக்கள் கொண்டு உருவாகும் பிரம்மாண்ட தொலைநோக்கி, ஒன்றோடு ஒன்று விலகிச் சென்றுகொண்டிருக்கும் நூறு கோடி அண்டங்களை அலசிக் கணக்கெடுக்கவுள்ளது.
பிரபஞ்சம் பற்றிய அடிப்படையான பல கேள்விகளுக்கும், வேற்று கிரகங்களில் உயிரினங்களுக்கான சாத்தியப்பாடு தொடர்பிலும் இந்த தொலைநோக்கியால் பதில் கிடைக்கும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
தற்போது பயன்பாட்டில் இருந்து வருகின்ற தொலைநோக்கியை விட பத்தாயிரம் மடங்கு வேகமாகவும், ஐம்பது மடங்கு துல்லியமாகவும் இந்த புதிய தொலைநோக்கி செயல்படும் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த தொலைநோக்கி ஒரே நாட்டில் அல்லாமல் மூன்று நாட்டில் பகிர்ந்து வைக்கப்படுவதற்கு அறிவியல் காரணங்களை விட அரசியல் அவசியமே அதிக காரணம் என்று எழுந்துள்ள குற்றச்சாட்டை விஞ்ஞானிகள் மறுத்துள்ளனர்.
அதேசமயம் உலகின் மிக அதிக சக்திவாய்ந்த இந்த ரேடியோஅலை தொலைநோக்கியானது, பேரண்டம் தொடர்பான ஆய்வில் மேலும் பல புதிய கண்டுபிடிப்புகளுக்கு வழிவகுக்கும் என்கிறார் பெங்களூருவில் இருக்கும் அறிவியல் எழுத்தாளர் மோகன் சுந்தரராஜன்.
இது குறித்து பிபிசி தமிழோசைக்கு அவர் அளித்த செவ்வியின் ஒலிவடிவத்தை நேயர்கள் இங்கே கேட்கலாம்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !