ஏலியன்கள் எனப்படும் வேற்றுக் கிரகவாசிகள் வசிக்கும் கோள் 2013-இல் முதன் முதலாகக் கண்டுபிடிக்க சாத்தியக்கூறுகள் உள்ளது என அறிவியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த ஆண்டுகளில் கண்டுபிடிக்கப்பட்ட சில கோள்களில் எமது புவியைப் போல உயிரினங்கள் வாழ முடியும் என்று கருதுகோள்கள் இருந்தன, எனினும் இவற்றின் நம்பகத்தன்மை உறுதிப்படுத்தப்பட வேண்டியதாக இருக்கிறது. வெறும் கூற்றில் மட்டுமல்லாது உண்மையிலேயே வேற்றுக் கோள் வாசிகள் வசிக்க உகந்ததென பலவிதங்களில் உறுதிப்படுத்தப்பட்ட கோள் ஒன்று இற்றைவரை அறியப்படவில்லை. இப்படிப்பட்ட கோள் ஒன்றினையே 2013-இல் கண்டுபிடிக்க இயலுவதாக புறச்சூரியக் கோள்களைப் பற்றி ஆராயும் நிபுணர்கள் அறிவித்துள்ளனர்.
1995-இல் ‘51 பெகாசி பி’ எனப்படும் புறக்கோளைக் கண்டுபிடித்தனர். இதுவே முதன் முதலில் கண்டறியப்பட்ட சூரியன் போன்றதொரு விண்மீனைச் சுற்றி வரும் புறக்கோள் ஆகும். இதன் விண்மீன் 51 பெகாசி (51 Pegasi) என்று அழைக்கப்படுகின்றது. ஆனால் 1992-இல் PSR B1257+12 எனும் துடிப்பலை நொதுமி விண்மீனைச் சுற்றி வரும் புறக்கோள்களே முதன் முதலில் கண்டறியப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
அன்றிலிருந்து இற்றைவரைக்கும் 854 புறக்கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றுள் உயிரினம் வசிக்கக்கூடியன என்று இனம் காணப்பட்டவை கிட்டத்தட்ட 36 கோள்கள் ஆகும். இவற்றுள் இவ்வாண்டில் செப்டம்பர், நவம்பர் மாதங்களில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய கோள்களும் அடங்கும். எனவே எதிர்வரும் 2013இல் புதிதாகவோ அல்லது ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்ட உயிரின வாழ்தகமை உள்ள கோள்களைப் பற்றிய ஆய்வுகளில், திட்டவட்டமாக உயிரினம் வசிக்கின்றது என்று கருதப்படும் கோளைப் பற்றிய அறிக்கை வெளிவரும் என்பதே மென்டேசு (Mendez) மற்றும் மாசி (Geoff Marcy) ஆகியோரின் கூற்றாகும்.
சில விண்மீன் குடும்பத்தில் உயிரின வாழ்தகமை வலையம் (Habitable zone ) எனும் பிரதேசம் உள்ளது எனக் கருதப்படுகின்றது. இது உயிரினங்கள் வாழக் கூடிய கோள்கள் காணப்படலாம் எனக் கருதப்படும்
கெப்லர்-22பி விண்வெளிப் பகுதியாகும். விண்மீனின் வெப்ப ஒளிர்வு இதில் முக்கியமானது. எமது சூரியனுடன் ஒப்பிடுகையில் வெப்பமாகவோ அன்றி குளிர்மையாகவோ விண்மீன்கள் காணப்படலாம். இவ் வலையங்களில் உள்ள கோள்களில் சரியான வளி அமுக்கத்துடனும் திரவ நிலையிலுள்ள நீரும் இதில் அனுமானிக்கப்படும். புவியானது சூரியனின் வாழ்தகமைப் பிரதேசத்தில் காணப்படும் கோள் என்பதால் இதனில் உயிரினங்கள் வாழும் தகமை உள்ளது. இக் கோட்பாடு உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழலை உடைய அண்டவெளிக் கோள்களைக் கண்டுபிடிக்க உதவுகின்றது.
கெப்ளர் விண்வெளித் தொலைநோக்கி மூலம் இவ்வகையான கோள் கண்டுபிடிப்புகள் நிகழ்கின்றன. மென்டேசு என்பவர் உயிரின வாழ்தகமை கோள்கள் என்று அவற்றைப் பட்டியலாக்கி உள்ளார். கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சார்ந்த மாசியும் (Geoff Marcy) மென்டேசுடன் இணைந்து இத்தகைய ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். சிலி நாட்டில் அமைந்துள்ள ஹார்ப்ஸ் HARPS (short for High Accuracy Radial velocity Planet Searcher) எனும் உபகரணம் உயிரினங்கள் வாழும் தகமை உள்ள கோள்களைக் கண்டுபிடிப்பதில் உதவுகின்றது.
கெப்ளர் மற்றும் ஹார்ப்சின் உதவியுடன் விரைவில் புவியின் இரட்டையனைக் கண்டுபிடிக்கலாம் என்று மென்டேசு அறிவித்துள்ளார். எமது பால் வெளியில் ஏரளாமான ஏலியன் வாழும் கோள்களை வரும் காலத்தில் கண்டுபிடிக்கலாம் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
சில உயிரின வாழ்தகமை கோள்கள்: Gliese 667C c, Kepler-22 b, Gliese 163 c (செப்டம்பர் 2012இல் கண்டுபிடிக்கப்பட்டது), HD 85512 b, Gliese 581 d
இவற்றையும் படிக்க:அண்மைய விண்மீன்களின் கிளீசுப் பட்டியல், கிளீசு581 விண்மீன் தொகுதி, ‘கிளீசு விண்மீன்கள்’ (Gliese Stars), விண்மீன் வகைப்பாடு

0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !