பெண்களின் கண்டுபிடிப்புக்கள் - nelliadynet
Headlines News :
Home » » பெண்களின் கண்டுபிடிப்புக்கள்

பெண்களின் கண்டுபிடிப்புக்கள்

Written By www.kovilnet.com on Monday, December 31, 2012 | 8:32 PM



20 ஆம் நூற்றாண்டின்   முடிவில் 10 % ஆன பெண் கண்டுபிடிப்பாளர்கள் மட்டுமே  பரிசளிக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டுள்ளர்கள் கடந்த சில நூற்றாண்டுகளின் புகழ் பெற்ற கண்டுபிடிப்புக்களை எடுத்துக்கொண்டால் அதில் நிச்சயமாக் பெண்களின் பெயர்கள் இருக்கும் பொதுவாக ஒருபெண் தனது கண்டுபிடிப்புக்களை வெளி கொண்டுவருவதற்கு அதிக அளவு தடைகளை தண்டவேண்டி இருக்கிறது 
1700 களில் அமெரிக்காவிலும் பெண்கள் விஞ்ஞான கற்கைகளை கற்பது விரும்பத்தகாததாக இருந்தது 1700 களில் அமெரிக்காவில் ஒரு சட்டம் இருந்தது 

பெண்களுக்கு எந்த ஒரு சொத்தும் உரிமையாக இருத்தல் கூடாது என்பதுதான் அது  இவர்கள் இக்காலத்தில் தமது கண்டுபிடிப்புக்களையோ அல்லது ஒரு உள்ளநாட்டு தயாரிப்பையோ வெளியிட நேர்ந்தால் தமது தந்தையின் பெயரிலோ அல்லது கணவரின் பெயரிலோதான் உரிமம் பெற்று வெளியிடப்படவேண்டியிருந்தது.


இவற்றை தாண்டி தனது தயாரிப்பிற்கு தனது பெயரிலேயே உரிமம் பெற்ற  முதல் அமெரிக்க பெண்  Mary  kies  1809 இல் பெற்றார் .1 ஆம் உலகப் போரினால் பெண்களுக்கு ஒரு எதிர்பாராத நன்மை ஏற்பட்டது.உலகப் போருக்கு முன்பாக பெண்கள் ஆணுக்கு நிகராக வேலைவாய்ப்பும்,வோட்டுரிமையும் கேட்டு வன்முறையை பரிசாகவாங்கிக்கொண்டார்கள்.உலகப் போரின் போது ஆண்கள் அனைவருக்கும் கட்டாய இராணுவப்பையிற்சி என்றசட்டம் இருந்தது.இதனால் ஆண்கள் பணிபுரிந்த தொழிற்சாலைகள்,சுரங்கங்கள்,ஆயுதக்கிடங்குகள்,இரசாயன நிலையங்கள் என அனைத்து இடங்களுக்கும் ஆடகள் தேவை..வேறுவழி இல்லை பெண்களைத்தான் இவற்றிற்கு அமர்த்தினார்கள். 
நடைமுறையில் நாம் பயன்படுத்திக்கொண்டிருக்கும் பலவிடயங்களை பெண்கள்தான் கண்டுபிடித்திருக்கிறார்கள் 

இங்கு சில பெண் கண்டுபிடிப்பாளர்களையும்   அவர்களது கண்டுபிடிப்புக்களையும் நோக்குவோம் 

Circular saw
18 ஆம் நூற்றாண்டை சேர்ந்த "Tabiththa babbitt " என்றபெண்தான் இதை கண்டுபிடித்தார்இவர் நெசவாளர் இது ஒரு வட்ட தட்டு உருவான வாள்
இவர் ஒரு நெசவாளர் 1810 இல் இவர் 2  மனிதர்கள் வாள் ஒன்றை பயன்படுத்தி மரம் அரிவதை அவதானித்தார் இருவரும் இருதிசையிலும் வாளை   இழுத்து அரிந்தார்கள் வாளின் முனை ஒருபக்கமாக சரிவாக இருந்ததால் ஒரு பக்கமாக  அரியும்போது மாத்திரமே  வாள்  வெட்டியது மற்றைய பக்கம் இழுக்கும் போது சக்திச்ச்செலவு மாத்திரமே மிஞ்சியது இதை அவதானித்து 

கண்டு பிடிக்கப்பட்டதுதன் circular  saw  


Liquid  paper 

டிபேஸ் என நாம் பயன்படுத்தும் உபகரணத்தை போன்றதுதான்   இந்த liquidpaper இதைக்கண்டு பிடித்தவர்  "BetteNesmith Graham  "  என்ற பெண் இவர் ஒரு டைபிஸ்ட்  தனது வேலையில் பல தவறுகளை செய்துவிடுவார் 1950 இல் மின்சாரத்தில் இயங்கும்  typewritter அறிமுகப்படுத்தப் பட்டது இதன்  கார்பன் ரிபனால் பதியப்பட்ட எழுத்துக்கள் திருத்துவதற்கு கடினமாக இருந்தது ஒரு நாள் grahm ஒரு பேங்க் யன்னலில் சிலர் ஓவியம் வரைவதை அவதானித்தார் அவர்கள் வரையும்போது 

தாம் செய்த தவறை சரி செய்ய அதன்மேல் வேரொரு வர்ணத்தை  தீட்டி தவறை சரி செய்தார்கள் இதுதான் grahm  ஐ இக்கண்டு பிடிப்பிற்கு தூண்டியது 
தனது சமையல் அறையில் கிரைண்டேரில் tempera பெயிண்ட் ,டை ,நீர் என்பவற்றை சேர்த்து அரைத்துத்தான்   இதை கண்டுபிடித்தார் 
தனது அலுவலகத்தில் இதை விநியோகித்தார் அலுவலகப்பணிகளை விட அதிகநேரம் தனது கண்டுபிடிப்பை விநியோகிக்க செலவிட்டதால் பணிநீக்கம் செய்யப்பட்டார் 1958 இல் தனது கண்டு பிடிப்பிற்கு காப்புரிமை பெற்றார் 
   

Chocolate chip cookies


இது ஒரு சாப்பாட்டு ஐட்டம் வெளிநாடுகளில் மிகவும் பிரபலமானது இதைக்கண்டுபிடித்தவர் Ruth wake field 1930 இல் கண்டுபிடித்தார்.இவர் ஒரு டயரிசன் அத்துடன் பூட்lecturer ஒருநாள் இவர் விருந்தினருக்கு கூகீஸ் தயாரித்துக்கொண்டிருந்தார் இதற்கு வழக்கமாக உருக்கிய சாக்லேட் தான் சேர்ப்பார்கள்   விரைவாக கூகிஸ் செய்ய வேண்டியதன்  காரணமாக சாக்லேட் துண்டை  உருக வைப்பதற்கு பதிலாக சிறு துருவல்களாக்கி கூகியில் தூவி bake பண்ணினார் இதனால் சாக்லேட் உருகிவிடும் என நம்பினார் ஆனால் சாக்லேட் உருகவில்லை அதற்கு மாறாக பெறப்பட்டதுதான் இந்த சாக்லேட் சிப் கூகீஸ்





The Compiler and COBOL computer language 

இதைக்கண்டுபிடித்தவர் கடற்படை அதிகாரியான ஹொப்பர்.இவர் 1943 இல் இராணுவத்தில் இணைந்துகொண்டார்.ஹவேர்ட் பல்கலைக்கழகத்தில் IBM இன் முதலாவது லார்ஜ் ஸ்கேல் கணணியான  Harvard Mark I ஐ இயக்குவதில் ஈடுபட்டிருந்தார்.இக்கணணியை ப்றோக்கிராம் செய்த மூன்றாவது நபர் இவர்தான்.1950 இல் இவர் ஒரு கணணையைக்கண்டுபிடித்தார்.இதில் ஆங்கில மொழியில் கட்டளைகளை கோட்டாக வழங்கமுடியும்.
 அமெரிக்காவின் முதல் விற்பனைக்காக தயாரிக்கப்பட்ட கணணியான Universal Automatic Computer 1,2 களில் இவரது கொம்பைலர்கள்தான் பயன்படுத்தப்பட்டன.ஆரம்பகாலங்களில் இருந்த கணணி மொழிகளில் முக்கீயமானவற்ருள் ஒன்றாக இருந்த Common Business-Oriented Language (COBOL)  ஐ டெவலப் செய்தவர்களுள் முக்கியமானவர் இவர்தான்.இவரது இக்கண்டுபிடிப்புகளால் தான் ப்ரோகிராமெர்ஸ் பிழையின்றி தமது ப்ரோக்கிராம்களை எழுதமுடிந்தது.இவற்றிற்காக ஹொப்பர் பல விருதுகளைப்பெற்றுள்ளார்.அத்துடன் இவரைக்கௌரவிக்கும் முகமாக அமெரிக்க யுத்தக்கப்பலுக்கு இவரது பெயரைவைத்துள்ளார்கள்.




Colored Flare System

பல ஆங்கிலபடங்களில் குகைகள் இருளான பிரதேசங்களில் அல்லது கடலுக்கடியில் கையில் ஒன்றை வைத்து அழுத்தும் போது பீறிட்டு எரியும் பாருங்கள் அதன் பெயர்தான் Colored Flare System  இதைக்கண்டுபிடித்தவர் Martha Coston 1847 இல் தனது 21 ஆவது வயதில் விதவையாக்கப்பட்டார்.இவரது கணவனின் குறிப்புப்புத்தகத்தில் இதை எப்படி உருவாக்குவது என்பதை பற்றி இடப்பட்டிருந்தது ஆனால் அக்குறிப்புப்புத்தகத்தில் இருப்பது நடைமுறையில் சாத்தியப்படவில்லை தன் கணவனின் கனவை நன்வாக்க எண்ணி அடுத்த 10 வருடங்கள் தொடர்ந்து இதற்காக கடுமையாக முயற்சி செய்தார்..இறுதியில் இதைக்கண்டுபிடித்து விஞ்ஞானிகள் இராணுவ அதிகாரிகளுக்கு முன்பாக பரிசோதனை செய்து காட்டினார்.ஆனால் அது நீண்ட நீரம் எரியாததால் பரிசோதனை தோல்வியில் முடிந்தது.பின்பொருநாள் தனது மகங்களுடன் வானவேடிக்கையை பார்க்க சென்றபொழுது இவருக்கு இதற்கான திட்டம் பளிச்சிட்டது.பின்னர் அமெரிக்க நேவி இவருக்கு உரிமத்தை வழங்கியது..பின்னர் நடைபெற்ற சிவில் யுத்தங்கள் முதல் அனைத்து யுத்தங்களிலும் இவரது கண்டுபிடிப்பு பயன்படுத்தப்பட்டு வருகின்றது.


The Square-bottomed Paper Bag

கண்டுபிடித்தவர் Margaret Knight.இவர் பேப்பர் பாக்கை கண்டு பிடிக்கவில்லை சாதாரணமாக பயன்படுத்தப்படும் பேப்பர்பாக்கில் பொருட்களைக்கொண்டு செல்லல் கடினமாக இருந்தது. இதற்குத்தீர்வாக சதுர முகத்தைக்கொண்ட பேப்பர்பாக்கை உருவாக்கினால் இலகுவாக இருக்கும் என எண்ணி சதுரமுகம் கொண்ட பேப்பர் பாக்கை உருவாக்கினார்.இதை உருவக்குவதற்காக சிக்கலான இயந்திரமொன்றையும் உருவாக்கினார்.Charles Annan என்பவர் இவரது இயந்திரத்தை திருடி அது தன்னுடைய தயாரிப்பு என்றும் இதே போல ஒரு சிக்கலான இயந்திரத்தை ஒரு பெண்ணால் எப்படி உருவாக்கமுடியும் எனவும் அறிவித்தார்.ஆனால் Margaret Knight  இயந்திரத்தின் சரியான அளவீடுகள்,விபரங்களை தன்வசம் வைத்திருந்ததால் அவரது முயற்சி தோல்வியில் முடிந்தது.




Dishwasher

இதைகண்டுபிடித்தவர் Josephine Cochrane 1883 இல் இவர் கணவனை இழந்தார்.தனது வேலையாட்கள் மீது அதிருப்தியடைந்ததால் இவர் இதைக்கண்டுபிடிக்க நேர்ந்தது.இவரது டிஸ்வோஸர் உயர் அமுக்கத்தில் இயங்குமாறு வடிவமைத்திருந்தார்.இதை விளம்பரப்படுத்தல் மிக கடினமாக இருந்தது இதை பயன்படுத்துவதற்கு ஹீட்டர் தேவையாக இருந்தது ஹீட்டர் பலரது வீட்டில் அக்காலத்தில் இருக்கவில்லை இதனால் இவர் ஹீட்டர்ளை பயன்படுத்துவதற்கு இலவசமாக வழங்கினார்.ஆரம்பத்தில் இல்லத்தரசிகளிடம் இது பிரபலமடைந்தது.பின்னர் பெரிய கம்பனிகள்வரை இது சென்றது.


Windshield Wiper

இதைக்கண்டுபிடித்தவர் Mary Anderson .இவர் பனி பெய்துகொண்டிருக்கும் சமயம் பேருந்தில் சுற்றுலா ஒன்றை மேற்கொண்டிருந்தார்.அப்பொழுது ஓட்டுனர் ஒவ்வொரு தடவையும் பேருந்தை நிறுத்தி நிறுத்தி கண்ணாடியை துடைத்தார்.இதனை அவதானித்த மேரி இதற்காக ஒரு உபகரணத்தை வடிவமைத்து ஓட்டுனரிடம் வழங்கினார்.அவ்வுபகரணத்தை பேருந்தின் உள்ளே இருந்தே இயக்க முடியும்.கண்ணாடியை சுத்தம் செய்ய வேண்டியிருப்பின் ஒரு கைபிடி செய்யப்பட்டிருக்கும் அதை பயன்படுத்தி உள்ளே இருந்தே சுத்தம் செய்ய முடியும்.
இதை மேரி முதலில் கண்ணாடி சுத்தம் செய்யும் தொழிலார்களுக்கு பரிந்துரைசெய்தார்.பின்னர் மக்கள் இதை வாகனங்களிலும் பயன்படுத்த ஆரம்பித்தார்கள் அடுத்த 10 வருடத்தில் அனைத்து வாகனங்களிலும் இவரது தயாரிப்புத்தான் இருந்தது.


Nystatin

இது ஒரு பங்கஸ் கொல்லியாகும்.கண்டுபிடித்தவர்கள் Rachel Fuller Brown, Elizabeth Lee Hazen இவர்களது கூட்டுத்தயாரிப்புத்தான் இது.1940 இல் New York State Department of Health இல் 1940 ஆம் ஆண்டு இது தொடர்பான பரிசோதனையில் ஈடுபட்டார்கள் 1950 இல் இதை வெற்றிகரமாக கண்டுபிடித்தார்கள்.இது பின்னர் பல பிராண்ட் பெயர்களில் இப்பொழுது பயன்படுத்தப்பட்டுவருகின்றது.



Kevlar

Stephanie Kwolek என்ற பெண் அமெரிக்காவில் 1964 இல் du Pont என்ற இரசாயன நிறுவனத்தில் மொலிக்கியூல்களை உறுதியான நார்களாக மாற்றுதல் தொடர்பான ஆராச்சியில் ஈடுபட்டிருந்தார்.இதன்விழைவாக கண்டுபிடிக்கப்பட்டதுதான் kevlar இது வலுவான நாரால் ஆக்கப்பட்ட மெற்றீரியலாகும்.உலக அளவில் 1970 களில் இருந்து அதிக கேள்வி உடையதாக இருந்து வருகின்றது.இதை பயன்படுத்தித்தான்.கூடாரங்கள்,புள்ளட் புரூஃப் உடைகள் தயாரிக்கப்படுகின்றன.


இப்படி நாம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் பல விடயங்களைக்கண்டுபிடித்தவர்கள் நம்ம தாய்க்குலங்கள் தான்...


Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

www.facebook.com/nelliadynet

 
Support :
Template Design by V.Rajeepan Published by Nelliadynet Template