உலகவெப்பமயமாதலைத் தடுக்கும் முயற்சியில் பல நாடுகள் தற்போது முனைப்புடன் செயலாற்றி வருகின்றன. ஐ.நா சபையும் இதற்கான பல ஒப்பந்தங்களை ஏற்படுத்தி வருகின்றது. வரும் 2015-ம் ஆண்டில் பெரும் காலநிலை மாற்ற செயல்பாடுகளை மேற்கொள்ளும் விதத்தில் ஒரு அடித்தளத்தை உருவாக்கும் முயற்சியின் முதல் கட்டமாக அபுதாபியில் நேற்று ஒரு கலந்தாய்வு மாநாடு நடைபெற்றது.
அந்நாட்டின் தலைநகரில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் உலக நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். வரும் செப்டம்பரில் நடைபெற உள்ள காலநிலை உச்சி மாநாட்டிற்குத் தேவையான அடித்தள செயல்பாடுகளைத் துவக்கும் ஒரு மாநாடாக இந்த கூட்டம் நடைபெறுகின்றது.
இதற்குத் தலைமை தாங்கிய ஐ.நா பொதுசெயலர் பான்-கி-மூன் தனது உரையில் அடுத்த ஆண்டிற்கான புதிய உலக வெப்பமயமாதல் ஒப்பந்தத்தினைத் தயாரிக்க உலகளவிலான கொள்கைத் தலைவர்களைக் கேட்டுக்கொண்டார்.
அந்த முயற்சியில் காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் அச்சுறுத்தல் குறித்த செயல்பாடுகளில் அதிக முயற்சிகளை மேற்கொள்ளுமாறும் அவர் வலியுறுத்தினார். சுற்றுப்புற சூழலைப் பாதுகாப்பதில் அவசர முயற்சிகளை மேற்கொள்ளாமல் உலக செழிப்பு மற்றும் பாதுகாப்பு மேம்பாட்டிற்கான நடைமுறைகளை செயல்படுத்தமுடியாது என்று அவர் குறிப்பிட்டார்.
கடந்த 2009-ம் ஆண்டில் டென்மார்க்கின் தலைநகர் கோபன்ஹேகனில் நடைபெற்ற சுற்றுச்சூழல் பாதுகாப்பு மாநாட்டிற்குப் பின்னர் காலநிலை மாற்ற செயல்பாடுகள் உடன்பாடு குறித்து ஒரு இலக்கை எட்ட தொடர்ந்த முயற்சிகள் முரண்பாடுகளோடு முடிவடைந்தது இங்கு நினைவூட்டப்பட்டது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !