மனிதனுக்கு முன்பே செவ்வாய் கிரகத்துக்கு நுண்ணுயிர் கிருமிகள் சென்றடையும் ஆபத்து இருப்பதாக ‘நாசா’ எச்சரிக்கை விடுத்துள்ளது.
செவ்வாய் கிரகத்துக்கு ‘கியூரியாசிட்டி’ விண்கலத்தை அனுப்பி அமெரிக்காவின் ‘நாசா’ மையம் ஆய்வு மேற்கொண்டு வருகிறது. அதற்கு அடுத்தப்படியாக அங்கு மனிதனை அனுப்பி குடியமர்த்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
அதற்கு முன்னதாகவே, பூமியில் இருந்து நுண்ணுயிர் கிருமிகள் செவ்வாய் கிரகத்துக்கு சென்று வந்து குடியேறும் வாய்ப்பு உள்ளது. இந்த தகவலை ‘நாசா’வில் பணிபுரியும் இந்திய விஞ்ஞானி கஸ்தூரி ஜெ.வெங்கடேஸ்வரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த நுண்ணுயிர் கிருமிகள் செவ்வாய் கிரகத்துக்கு செல்லும் விண்கலன்களில் பரவி அதன் மூலம் அங்கு சென்றடையும். அங்கு அவை உயிர் வாழக்கூடிய தட்ப வெப்ப நிலை நிலவுகிறது.
எனவே, மனிதனுக்கு முன்பே நுண்ணுயிர் கிருமிகள் செவ்வாய் கிரகத்தில் குடியேறி அயல் கிரகவாசி என்ற பெருமையை பெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !