மின் விளக்குகள் மூலம் இணைய வசதி - nelliadynet
Headlines News :
Home » » மின் விளக்குகள் மூலம் இணைய வசதி

மின் விளக்குகள் மூலம் இணைய வசதி

Written By www.kovilnet.com on Thursday, May 29, 2014 | 8:52 AM

Getting online using light bulbs










அடியக்கமங்கலம், 20.10.2013: குழந்தைகளுக்கு டிஜிட்டல் பொம்மை முதல் வீடியோ கேம் வரை, பல்பு முதல் பட்டாசு வரை எல்லாவற்றையும் மலிவு விலையில் தயாரிக்கும் சீனா இப்போது இந்த பல்ப் மூலம் இன்டர்நெட் வசதியையும் கண்டுபிடித்துள்ளது. இதற்க்கு லைபை (Li-Fi) எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஒரு வாட் பல்பை வாங்கி எரிய விட்டால் போதும், அடுத்த நொடி இன்டர்நெட்டுக்கு உயிர் வந்துவிடும். லைட்டை அனைத்து விட்டால் இன்டர்நெட்டுக்கான லைபை போய் விடும். ஒரு பல்பு எரியவிட்டால் நான்கு கம்ப்யூட்டர் வரை இன்டர்நெட்டை பயன்படுத்த முடியும்.

விநாடிக்கு 150 மெகாபைட் வேகம் கொண்டதான இந்த லைபை குறித்து இன்னும் விரிவான ஆராய்ச்சிகள் தொடர்கின்றன. வர்த்தக ரீதியாக பயன்படுத்த முழு அளவில் தயாரிக்கப்படும் என்று இதை கண்டுபிடித்த ஷாங்காய் பல்கலைக்கழக பேராசிரியர் சிநான் கூறியுள்ளார். லெட் வகை பல்பில் மைக்ரோசிப் பொருத்தப்பட்டிருக்கும். அதன் மூலம் அலைக்கற்றைகள் எழுப்பப்பட்டு, இன்டர்நெட் வசதி ஏற்படுத்தப்படுகிறது. சீனாவில் ஷாங்காயில் நவம்பர் 5 ம் தேதி ஆரம்பிக்கப்பட உள்ள சர்வதேச கண்காட்சியில் இந்த லைபை அறிமுகம் செய்யப்படுகிறது.

வழக்கமான வைபை (WiFi) வசதி, ரேடியோ அலைகளை கொண்டு ஏற்படுத்தப்படுகிறது. அதன் மூலம் இன்டர்நெட் உயிர்பெறுகிறது. ஆனால், இந்த ஒரு வாட் பல்பை வைத்து எல்லா இடங்களிலும் இன்டர்நெட்டை பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மலிவு விலை பொருட்களை கண்டுபிடித்து உலக நாடுகளில் சந்தையில் பெரும் மாற்றத்தை கொண்டு வந்துள்ள சீனா வின் லைபை கண்டுபிடிப்பால் புதிய தொழில்நுட்ப புரட்சி ஏற்படும் என்று தெரிகிறது. சீனாவில் மட்டும் 60 கோடி பேர் இன்டர்நெட் பயன்படுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

www.facebook.com/nelliadynet

 
Support :
Template Design by V.Rajeepan Published by Nelliadynet Template