கம்பியில்லா மின் இணைப்பு தொழில் நுட்பம் - nelliadynet
Headlines News :
Home » » கம்பியில்லா மின் இணைப்பு தொழில் நுட்பம்

கம்பியில்லா மின் இணைப்பு தொழில் நுட்பம்

Written By www.kovilnet.com on Thursday, May 29, 2014 | 8:46 AM

Wireless electricity power transmission

கம்பியில்லா மின் இணைப்பைப் பெறும் தொழில் நுட்பத்தை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். மொபைல் போன் உள்ளிட்ட மின் சாதனப் பொருள்களை ஒயர் இணைப்பு இல்லாமல் சார்ஜ் செய்து கொள்ளக்கூடிய முறையை அமெரிக்காவின் டியூக் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இது குறித்து விஞ்ஞானிகள் தெரிவிக்கையில் மிகவும் நுண்ணிய மின் காந்த அலைகள் மூலம் மின்சாரத்தை கொண்டு செல்ல முடியும். இதன் மூலம் மின் கம்பி இணைப்பு இல்லாமலேயே மின் சாதனப் பொருள்களுக்கு தேவையான மின்சாரத்தைப் பெற்று இயக்க முடியும்.

மின்காந்த அலைகளை பெற்று மின்சாரமாக மாற்றும் கருவியில் உள்ள காயில்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு ஏற்ப மின்சாரத்தை எடுத்துச் செல்லும் தூரத்தையும் அதிகரிக்க முடியும். செல்போன் போன்ற சிறிய மின் சாதனங்கள் மட்டுமின்றி, பெரிய அளவிலான மின் சாதனங்கள் மற்றும் மின்மாற்றிகளுக்கு இந்த தொழில்நுட்பத்தின் மூலம் மின்சார விநியோகத்தை மேற்கொள்ளும் ஆராய்ச்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

www.facebook.com/nelliadynet

 
Support :
Template Design by V.Rajeepan Published by Nelliadynet Template