மகுடி இசையும் பாம்புச் செவியும் - nelliadynet
Headlines News :
Home » » மகுடி இசையும் பாம்புச் செவியும்

மகுடி இசையும் பாம்புச் செவியும்

Written By www.kovilnet.com on Tuesday, February 18, 2014 | 7:10 AM

மடிகு இசைக்கு கட்டுண்டுதான் பாம்பு படம் எடுத்து ஆடுகிறதா? நம்மில் பலருக்கு மகுடி இசையை கேட்டுதான் பாம்பு படம் எடுக்கிறதா என்று சந்தேகம் இருக்கலாம். மகுடி இசை, புன்னாகவராளி என்ற ராகத்தில் இருந்தாலும், இப்படி சந்தேகப்பட்டு வேறு விளக்கம் தேடுவதற்கு மற்றொரு காரணம் பாம்பிற்கு எமக்கு இருப்பதைப் போல வெளிப்படையாக இல்லை. அப்படியானால்பாம்பு எவ்வாறு மகுடி இசையைக் கேட்டு ஆடுது. அதைத்தான் பாம்புச் செவி என்பார்களோ?

இதற்கு ‘ஓக்காமின் ஷவரக்கத்தி’ தத்துவத் தீர்வின்படி வேறு எளிய விளக்கமும் கொடுக்க முடியும். ஒருவேளை மகுடியை ஊதுவதால் இல்லாமல், அந்த சாக்கில் பாம்பாட்டி அப்படி இப்படி மகுடியை ஆட்டுவதை கண்ணால் பார்த்து பாம்பு ஆடுகிறதோ. ஆனால் இது பற்றி ஆராய்ந்த விஞ்ஞானிகள் என்ன சொல்கிறார்கள்? மேலே சொன்ன அனைத்தையும் தூக்கியடிப்பது போல பாம்பிற்கு செவி உண்டு என்கின் றனர் விஞ்ஞானிகள்.
அமெரிக்க பல்கலைக் கழக ஆராய்ச்சி யாளர்கள் தங்கள் ஆராய்ச்சியின் முடிவில் இரை நகர்வதை பாம்பு தன் காதால் கேட்டுதான் துரத்திப் பிடிக்கிறது என்று ஆதாரத்துடன் நிரூபிக்கிறார்கள். பாம்பிற்கு வெளியே தெரிகிறாற் போல காது மடல்தான் இல்லை. ஆனால் நம் உள்நாக்கு போல, அதற்கு உட்காது உண்டாம். இந்த உட்காதுடன் பாம்பின் தாடைக்கு எலும்புத் தொடர்பே இருக்கிறதாம்.
பாம்பின் தாடை நுண்ணியதாக அதிர்கையில், ஸ்டேப்ஸ் என்னும் எலும்பு அதிரும், இந்த அதிர்ச்சியை அதன் மூளை கேட்கிறது. ஸ்டேப்ஸ் என்னும் எலும்பு நம் காதிலும் உண்டு. (உடம்பிலேயே மிகச் சிறிய எலும்பு) நமக்கு அது காற்றின் அழுத்த மாற்றங்களை, அதிர்வுகளை உணர்கிறது. பாம்பு நிலத்தில் ஊர்கையில் தூரத்தில் எலி ஓடினால் போதுமாம். அந்த நுண்ணிய அதிர்வுகளை கூட தாடை, உணர்ந்து, தானும் ஆடி தன்னுடன் ஸ்டேப்ஸையும் ஆட்டி எலியை மாட்டி விடுமாம்.
மண் தரையாக இருந்தால் இன்னமும் உத்தமம். எலி முதல் எது நகர்ந்தாலும் அது குளத்தில் கல் போட்டால் பரவுவது போல நொடிக்கு 50 மீட்டர் வேகத்தில் அதிர்வுகளை மண்ணில் பரப்பும் (இந்த வேகம் மாறுபடும், ஒப்பிட்டு கொள்ள காற்றில் ஒலி அலைகளின் வேகம் நொடிக்கு 330 மீட்டர்). அந்த அதிர்வுகளின் வீச்சு(aசீplituனீலீ) மிகவும் குறைவானது. ஒரு மில்லி மீட்டரில் ஆயிரத்தில் ஒரு பாகம். ஆனாலும் அது பாம்பிற்கு கேட்குமாம்.
பாம்புச் செவி என்று சரியாகத்தான் சொன்னார்கள்.
இதில் மற்றொரு பிரமிப்பு இருக்கிறது. நாம் காற்றில் ஒலி அதிர்வுகளை அரை நொடி, அரைக்கால் நொடி தாமதத்தில் ஒரு காதிலும் அடுத்த காதிலும் விழுவதை வைத்து சத்தம் வரும் திசையை உணர்ந்து திரும்பி, சரேல் என்று வரும் வாகனங்களில் மோதாமல் தப்பி விலகுவோம். மனித மிருக, பறவை இனங்கள் அனைத்தும் இப்படி செய்வதையும் பாம்பு நிலத்தில் தாடை பதித்து, மெதுவான வீச்சியிலிருந்தும் சத்தத்தின் திசையை ஊற்றை, இரையை கண்டுபிடித்துவிடுமாம்.
மேலே குறிப்பிட்ட ஆராய்ச்சி முடிவுகளை பார்க்கையில், காது இருந்தாலும் ஊர்கையில் தான் பாம்பின் செவி நில அதிர்வுகளை உணர்கிறது என்று தெரிகிறது. தலையை நிலத்திலிருந்து தூக்கிவிட்டால் பாம்பிற்கு இந்த காது பயனற்று போய்விடுகிறது.
அதனால் காற்றில் வரும் மகுடி இசையை அதனால் கேட்க முடியாது என்று கருதலாம். பாம்பாட்டியும் நிலத்தில் உட்கார்ந்து முதலில் காலால் தரையை தட்டி ஊறும்பாம்பின் காதில் விழுவார். சரேல் என்று நிமிர்ந்து பார்க்கையில் மகுடி ஊதி ஆட்டுவார். பாம்பு படமெடுத்து தொடரும். அது படமெடுப்பது தான் கண்ணால் கண்ட எதிரியை (மகுடியோ மூடியோ நாமோ எதுவாயினும்) தற்காப்பிற்காக பயமுறுத்தி தன்னை நெருங்க விடாமல் செய்வதற்கு. ஆகையால் கட்டுரையின் முதலில் நாம் ஊகித்த காரணம் சரிதான் என்று நினைக்கத் தோன்றுகிறது.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

www.facebook.com/nelliadynet

 
Support :
Template Design by V.Rajeepan Published by Nelliadynet Template