கணக்குப் போடத் தெரிந்த தாவரங்கள் - nelliadynet
Headlines News :
Home » » கணக்குப் போடத் தெரிந்த தாவரங்கள்

கணக்குப் போடத் தெரிந்த தாவரங்கள்

Written By www.kovilnet.com on Tuesday, February 18, 2014 | 7:18 AM


ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட அராபிடொப்சிஸ் செடி
தாவர வகைகள் தமக்கு தேவையான உணவையும் அதன் சேமிப்பையும் கணக்கிட்டே செய்கின்றன என்று ஒரு ஆய்வு முடிவில் இப்போது தெரியவந்துள்ளது.
'இ லைஃப் ஜர்னல்' எனும் அறிவியல் சஞ்சிகையில் இது குறித்து எழுதியுள்ள பிரிட்டிஷ் தாவரவியல் விஞ்ஞானிகள், தாவரங்கள் தமது உணவுத் தேவை மற்றும் பயன்பாடு குறித்த கணக்குகளை மேற்கொள்ள தமக்குள்ளேயே ஒரு திறமையைக் கொண்டுள்ளன என்று கூறியுள்ளனர்.
ஒவ்வொரு தாவரமும் இரவு நேரங்களில், தமக்கு எந்த அளவுக்கு மாவுச் சத்து தேவை என்பதை, பகல் நேரத்தில் சூரிய ஒளி இருக்கும் வேளையில், அதிநவீன நுண்ணிய கணித நுட்பங்களை பயன்படுத்தி கணக்கிட்டு சேமித்து வைத்துக்கொள்கின்றன என்று அந்த சஞ்சிகையில் எழுதியுள்ள கட்டுரையில் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

துல்லியமான கணக்கு


வளர்ந்து வரும் ஒரு செடி
இலைகளில் உள்ள இராசயனங்களை வகுத்து கணக்கிடுவது உட்பட தாவரங்கள் தமது இரவுத் தேவைக்கான உணவின் அளவை நிர்ணயித்து பகிர்ந்து கொள்கின்றன என்று அந்த ஆய்வு முடிவில் கண்டறியப்பட்டுள்ளதாக அதில் ஈடுபட்ட விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்.
இரவு நேரத்தில் சூரிய ஒளிச் சக்தியை பயன்படுத்த முடியாத சூழலில் தாவரங்கள் கரியமில வாயுவை சர்க்கரை மற்றும் மாவுச் சத்தாக மாற்ற முடியாத நிலைமையில், அதிகாலை மீண்டும் சூரிய ஒளி வரும் வரையில் தமக்குள்ளே இருக்கும் மாவுச் சத்தை திட்டமிட்டு சீராக பயன்படுத்த வேண்டியத் தேவை தாவரங்களுக்கு உள்ளது.

அந்நிலையில் தாவரங்கள் மிகவும் துல்லியமான கணக்கின்படி தமது இரவுத் தேவையை கணக்கிட்டு உணர்ந்து அதற்கு ஏற்ற வகையில் பகல் நேரத்தில் உணவைச் சேமித்துக் கொள்கிறது என்பது இந்த ஆய்வின் முடிவு.

இராசயன வகுத்தல்


பேராசிரியர் டாக்டர் நரசிம்மன்
தாவரங்கள் தமது மாவுச் சத்து தேவையை உணர்ந்து அதற்கு ஏற்ற வகையில் தம்மிடம் உள்ள மாவுச் சத்தை பங்கீடு செய்கின்றன என்றால், அவை துல்லியமாக வகுத்தல் கணக்குகளை செய்கிறது என்பதையே நாரிச்சிலுள்ள ஜான் இன்ன்ஸ் மையத்தில் விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
மிகவும் அடிப்படையான கணக்குகளை இரசாயன வகையில் தாவரங்கள் செய்கின்றன என்பது மிகவும் ஆச்சர்யமாகவும் வியப்பை ஏற்படுத்தும் விதத்திலும் உள்ளன என்று ஆய்வுக் குழுவின் தலைவர் பேராசிரியன் ஆலன் ஸ்மித் பிபிசியிடம் தெரிவித்தார்.

Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

www.facebook.com/nelliadynet

 
Support :
Template Design by V.Rajeepan Published by Nelliadynet Template