இக்கோளம் வானிலே பூமியைச் சுற்றி வருகின்றது. இரவிலே குளிர்வாக ஒளிதரும் இக்கோளத்தை வானிலே காணலாம்.
இந்த நிலாதான் பூமியின் ஒரே இயற்கையான துணைக்கோள். இது பூமியைச் சுற்றி வர சராசரி 27.32 நாட்கள் ஆகின்றது. இந்த நிலா பூமியை ஒரு நீள் வட்டப் பாதையில் சுற்றுகிறது. பூமிக்கும் நிலாவுக்கும் சராசரி தொலைவு 384, 403 கி.மீ.
வளர்பிறை, தேய்பிறை:
பூமியிலிருந்து சந்திரனைப் பார்க்கும் போது சந்திரனானது அதன் இருப்பிடத்தைப் பொறுத்து வௌ;வேறு அளவில்; காட்சியளிக்கிறது. இதை பிறை என்பார்கள்.
அமாவாசை இரவு என்பது வானில் நிலவே தென்படாத இருட்டு இரவைக் குறிக்கும். பிறகு ஒவ்வொரு நாளும் சிறிகச் சிறுக வெளிச்சம் தெரியும் பகுதி பெரிதாகிகொண்டே வரும், இவைகளை இரண்டாம் பிறை, மூன்றாம் பிறை என்று சொல்வார்கள். பின்னர் சுமார் 14 நாட்கள் கழித்து ஒரு நாள் முழு நிலா பெரிதாய் வட்ட வடிமாய்த் தெரியும். இதனை முழு நிலா நாள் என்றும் பௌர்ணமி நாள் என்றும் சொல்வர். பிறகு அடுத்த சில நாட்கள் நிலா வெளிச்சம் சிறுக சிறுக குறைந்து கொண்டே போய், மீண்டும் அமாவாசை நாளுக்கான நிலைக்கே திரும்பி விடும். முதலில் முழுநிலா நாள் வரை வளர்ந்து வருவதை வளர்பிறை என்றும், அடுத்த சுமார் 14 நாட்களைத் தேய்பிறை என்றும் அழைப்பர். புவியின் ஈர்ப்பைக் காட்டிலும் நிலவின் ஈர்ப்பு ஆறுமடங்கு குறைவு.
நிலவின் ஈர்ப்பு குறைவாக இருப்பதால், அதிலுள்ள பொருள்களின் விடுபடு வேகமும் குறைவு; மேலும் நிலவின் பரப்பு வெப்பநிலை அதிகம் ஆதலால், அங்குள்ள மூலக்கூறுகள் விடுபட்டுச் சென்று விடும். எனவே நிலவில் காற்று இல்லை. நிலவோடு ஒப்பிடும்போது
அமாவாசை
அமாவாசை என்பது சந்திரன் கண்களுக்குத் தோன்றாத அல்லது முழுவதும் மறைந்திருக்கும் நாளாகும். வானியலின்படி, பூமியைச் சுற்றிவருகின்ற சந்திரன் பூமிக்கும், சூரியனுக்கும் இடையில் வரும் நாளே அமாவாசையாகும். சூரியனுடைய ஒளி சந்திரனில் பட்டுத் தெறிப்பதனாலேயே புவியிலிருந்து பார்ப்போருக்குச் சந்திரன் தெரிகிறது. ஆனால் சந்திரன் புவிக்கும், சூரியனுக்கும் இடையில் இருக்கும்போது சூரிய ஒளி புவியிலிருந்து பார்ப்போருக்குத் தெரியாத சந்திரனின் பின்பகுதியில் விழுவதால் அது நமக்குத் தெரிவதில்லை. இந்த நிகழ்வின்போதே சில தருணங்களில் சந்திரன் சூரியனை மறைப்பதனால் சூரிய கிரகணமும் ஏற்படுகிறது.
பௌர்ணமி
பௌர்ணமி என்பது சந்திரன் முழு வட்டமாகத் தோற்றமளிக்கும் நாளாகும். வானியலின்படி, சந்திரனுக்கும் சூரியனுக்கும் இடையில் பூமி வரும் நாள் பௌர்ணமி ஆகும். சூரிய ஒளி சந்திரனில் படும் பகுதி முழுமையாக பூமியில் இருப்பவர்களுக்குத் தெரிவதால் முழு வட்ட நிலவாக தெரிகிறது. சில தருணங்களில் சூரிய ஒளியை பூமி மறைப்பதால் சந்திர கிரகணம் ஏற்படுகிறது.

0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !