பால்வெளி மண்டலத்தில் உள்ள சூரியன்களை துல்லியமாக படம்பிடிக்க, அதிநவீன தொலைநோக்கி விண்ணில் செலுத்தப்பட்டு செயல்படத் தொடங்கியுள்ளது.
ஐரோப்பிய யூனியன் ஆய்வு கூடத்தின்சார்பில் ஏற்கனவே விண்வெளி அதிசயங்களை கண்டறிய ஹுப்பெல் என்ற தொலைநோக்கி செயல்பட்டு வந்தது. குறித்த காலம் முடிவடைந்துவிட்டதால், ஹுப்பெல் தொலைக்காட்சி முடங்கிவிட்டது. இதற்கு பதிலாக ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனம் ஃபிரெஞ்ச் கயானாவில் இருந்து GAIA என்ற புதிய சக்திவாய்ந்த தொலைநோக்கியை ராக்கெட் மூலம் விண்வெளியில் செலுத்தியது. இந்த தொலைநோக்கி, 100 கோடிக்கும் அதிகமான பால்வெளி மண்டல சூரியன்களை துல்லியமாக படம்பிடித்து, அத்தகவல்களை பூமிக்கு அனுப்பும் திறன்கொண்டதாகும். இந்த செயற்கைகோளை 16 நாடுகள் ஒன்றிணைந்து தயாரித்துள்ளன. ஹுப்பெல் தொலைநோக்கியைக் காட்டிலும் பல மடங்கு அதிக தூரத்தில் இந்த தொலைநோக்கி நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !