எக்ஸ்-ரே கண் கொண்ட அபூர்வப் பெண் - nelliadynet
Headlines News :
Home » » எக்ஸ்-ரே கண் கொண்ட அபூர்வப் பெண்

எக்ஸ்-ரே கண் கொண்ட அபூர்வப் பெண்

Written By www.kovilnet.com on Wednesday, January 1, 2014 | 5:54 AM


ஷ்யாவைச் சேர்ந்த நிகோலெயவ்னா நடாஷா டெம்கினா என்ற பெண்ணுக்கு இயற்கையாகவே உடலின் உள்ளுறுப்புகளை காணக்கூடிய ஆற்றல் உள்ளது.
FILE


நமது உடலின் உள்ளுறுப்புகளில் உள்ள கோளாறுகளை அறிய நவீன மருத்துவ உலகில் எக்ஸ்-ரே, ஸ்கேன் உள்ளிட்ட எவ்வளவோ புதுமையான மருத்துவ பகுப்பாய்வு முறைகள் தோன்றி விட்டன.

ஆனால், 1987ஆம் ஆண்டு ரஷ்யாவில் உள்ள சரன்ஸ்க் என்ற இடத்தில் பிறந்த நிகோலெயவ்னா நடாஷா டெம்கினா என்ற பெண் தனது வெறும் கண்களாலேயே மனித உடலின் உள்ளுறுப்புகளை உடுருவி பார்க்கும் பிரமிக்கத்தக்க ஆற்றல் பெற்றவராய் திகழ்கிறார்.

தனது பத்தாவது வயதில் தாயின் உடல் உள்ளுறுப்புகளை உடுசக்தி மூலம் வெறும் கண்ணால் பார்க்க தொடங்கிய இவரது புகழ் காலப்போக்கில் உலகம் முழுவதும் படர்ந்து பரவியது.

இதையடுத்து, இவரிடம் உள்ள அற்புத சக்தியை அறிந்த உள்ளூர் மக்கள், இவரது பார்வை பட்டாலே நோய் குணமாகிவிடும் என நம்பத்தொடங்கி டெம்கினாவை வீடுதேடி படையெடுக்க தொடங்கினர்.

மருத்துவரின் வயிற்றின் எந்த பகுதியில் 'அல்சர்' கட்டி உள்ளது என்றும், மற்றொரு பெண்ணின் உடலில் உள்ளது புற்றுக் கட்டி அல்ல என்றும் தீர்க்கமாக கூறி இவர் மருத்துவ நிபுணர்களையே திகைக்க வைத்துள்ளார்.

உலகின் பல்வேறு நகரங்களில் தனது திறமையை வெளிப்படுத்திய டெம்கினா, இதைப்போன்ற சிறப்பாற்றல் படைத்த ஒரே பெண்ணாக அறியப்படுகிறார்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

www.facebook.com/nelliadynet

 
Support :
Template Design by V.Rajeepan Published by Nelliadynet Template