நமது சூரிய குடும்பத்தில் மிகப்பெரிய கிரகமான வியாழனை விட 11 மடங்கு திணிவு கொண்டதும் பூமியை விட மிகத் தொலைவில் அமைந்திருக்கும் நட்சத்திரத்தைச் சுற்றி வலம் வருவதுமான மிகப் பெரும் ஏலியன் கிரகம் ஒன்றினை வானியலாளர்கள் சமீபத்தில் கண்டு பிடித்துள்ளனர்.
வருங்காலத்தில் வேற்றுக் கிரகவாசிகள் (Aliens) அல்லது பிற உயிரினங்கள் வாழும் சாத்தியக் கூறு உள்ள இக்கிரகம் சூரியனுக்கும் பூமிக்கும் இடையேயான சராசரித் தூரத்தை (AU) விட 650 மடங்கு அதிக வித்தியாசத்தில் தனது சூரியனைச் சுற்றி வருவதும் கணிக்கப் பட்டுள்ளது. இக்கிரகத்தின் கண்டுபிடிப்பு எவ்வாறு இத்தகைய வித்தியாசமான ஏலியன் கிரகங்கள் பிரபஞ்சத்தில் தோற்றமும் பரிணாமமும் அடைகின்றன என்பது குறித்த ஆராய்ச்சிகளுக்குப் பயனளிக்கும் எனத் தெரிவிக்கப் படுகின்றது.
மேலும் புதிதாகக் கண்டுபிடிக்கப் பட்ட இந்தக் கிரகத்துக்கு HD 106906 எனப் பெயரிடப் பட்டுள்ளது. சுமார் 13 மில்லியன் வயதுடைய இந்தக் கிரகம் இன்னமும் சூடாக இருப்பதாகவும் இதனால் சுயமாக ஒளி வீசுவதாகவும் கூறப்படுகின்றது. நமது பூமி தோன்றி 4.5 பில்லியன் ஆண்டுகள் ஆகி விட்டன என்று கணிக்கப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதனால் இப் புதிய கிரகத்தை விட 350 மடங்கு பழமை வாய்ந்தது நம் பூமி என்பதால் நமது பூமி தோன்றிய புதிதில் அதில் எவ்வாறு புவியியல் மாற்றங்கள் ஏற்பட்டு உயிர் வாழ்க்கைக்குப் பயனுள்ளதாக அது மாறியது என்பது குறித்துக் கற்க இக்கிரகம் உதவக் கூடும் என நம்பப் படுகின்றது.
சிலியின் அட்டகமா பாலைவனத்தில் அமைந்துள்ள மகெல்லன் விண் தொலைக்காட்டியால் கண்டு பிடிக்கப் பட்ட இக்கிரகத்தின் இருப்பு விண்ணில் உலா வரும் ஹபிள் தொலைக்காட்டியாலும் நோக்கப் பட்டு உறுதி செய்யப் பட்டது குறிப்பிடத்தக்கது
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !