Friday, July 26, 2013
சமூக இணையத்தளங்களில் அனைவராலும் அதிகம் விரும்பி பயன்படுத்துவது பேஸ்புக் தளத்தைத்தான் இதில் உங்கள் எண்ணங்கள் கருத்துக்களை தமிழில் பகிர்வதற்கு நினைப்பீர்கள் ஆனால் பேஸ்புக் தளத்தில் நேரடியாக தமிழில் டைப் செய்யும் வசதி இல்லை என்பது நீங்கள் அனைவரும் அறிந்த விடயமே.
சரி நாம் இன்று பேஸ்புக்கில் நேரடியாக தமிழில் டைப் செய்வது எப்படி என்று பார்ப்போம் இதற்க்கு Google Transliteration IME என்ற மென்பொருள் பயன்படுகிறது இதனை டவுன்லோட் செய்து எவ்வாறு பயன்படுத்துவது என்று பார்ப்போம்
1.முதலில் இங்கு சென்று Google Transliteration IME என்ற மென்பொருளை Download செய்யவும். கீழே படத்தில் உள்ளது போல் Tamil என்பதை தெரிவு செய்து I agree to the Google.. என்பதில் மார்க் வைத்து Download செய்து உங்கள் கணினியில் Install செய்து கொள்ளவும்.
2.இதனை உங்கள் கணினியில் Install செய்த பின்பு கீழே படத்தில் உள்ளதுபோல் Taskbar -இல் EN என்று வந்திருக்கும் நீங்கள் EN என்பதில் கிளிக் செய்து TA Tamil (India) என்பதை தெரிவு செய்யவும்
3.TA Tamil என்பதை தெரிவு செய்த பின்பு கீழே படத்தில் உள்ளதுபோல் உங்கள் கணினி Desktop-இல் வரும்
4. இப்பொழுது நீங்கள் பேஸ்புக் Skype எங்கு வேண்டுமானாலும் உங்கள் கணினியில் தம்ழில் டைப் செய்யலாம்! நீங்கள் டைப் செய்யும்போது தமிழ் சொல்லை ஆங்கிலத்தில் டைப் செய்ய வேண்டும்.உதரணத்திற்க்கு கீழே உள்ள படத்தை பார்க்கவும்
5.நீங்கள் தமிழில் டைப் செய்யும்போது ஆங்கிலத்தில் டைப் செய்ய வேண்டுமானால் CTRL+G கொடுக்கவும். திரும்ப தமிழில் டைப் செய்ய இதே போன்று CTRL+G கொடுத்தால் சரி
இதனை Download செய்து பயன்படுத்துவதில் ஏதாவது சந்தேகம் இருந்தால் கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.
Video Recorded By KananiNet.Com
இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் இது பற்றி தெரியாத உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளவும்! :)
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !