மனிதரின் வாழ்க்கைக்கு மிகமுக்கிய எரியாற்றல் மூலவளமாக சூரியன் திகழ்கின்றது. அறிவியல் ஆய்வின் படி, சூரியன் மாபெரும் வெப்ப ஆற்றலை வெளியேற்றுகின்றது. மனித குலம் எதிர்நோக்கும் எரியாற்றல் பற்றாக்குறை பிரச்சினையைத் தீர்க்க, சூரியன் எரியாற்றலை உருவாக்கும் வழிமுறையைக் கண்டுப்பிடிப்பதில் உலகின் பல்வேறு நாடுகளின் அறிவியலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். சீனா சொந்தமாக ஆராய்ந்து தயாரித்த புதிய தலைமுறை அணுக் கூட்டிணைவு ஆய்வு சாதனம் தேசிய நிலையிலான சோதனையில் வெற்றி பெற்றுள்ளது என்ற நற்செய்தியை அறிந்து கொண்டுள்ளோம். உலகில் அதிகாரப்பூர்வமாக தயாரிக்கப்பட்டு இயங்கும் முதலாவது அணு கூட்டிணைவு ஆய்வு சாதனம் இதுவாகும். உலகில் சிவில் அணு ஆற்றல் தொழில் நுட்பத்தின் வளர்ச்சிக்கு இது துணை புரியும் அதேவேளையில், செயற்கையான ஒரு சூரியனைத் உருவாக்கும் கனவும் நனவாவதை விரைவுபடுத்தும். கடந்த 100க்கும் அதிகமான ஆண்டுகளில், எரியாற்றல் பற்றிய மனிதரின் ஆய்வும் பயன்பாடும், எண்ணெய் வேதியியல் தொழில் துறை எரியாற்றல் என்ற தனி கட்டமைப்பிலிருந்து, எண்ணெய் வேதியியல் எரியாற்றலை முக்கியமாகக் கொண்டு அணு ஆற்றலையும், நீர் ஆற்றலையும் துணையாகக் கொண்ட பல தரப்பு கட்டமைப்பாக வளர்ந்துள்ளது. தற்போது, உலகில் பல்வேறு நாடுகளில் கட்டியமைக்கப்பட்ட அணு மின் நிலையங்கள், அணுப் பிளவுத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துகின்றன. கடந்த சில ஆண்டுகளாக, சீனா, அமெரிக்கா, ஜப்பான், பிரான்ஸ். ரஷியா ஆகிய நாடுகள் அணுக் கூட்டிணைவு ஆய்வு சாதனங்கள் பற்றிய ஆய்வில் ஆக்கப்பூர்வமாக ஈடுபட்டு வருகின்றன. 1998ம் ஆண்டு கட்டப்படத் துவங்கிய புதிய தலைமுறை அணுக் கூட்டிணைவு ஆய்வு சாதனத்துக்கான சீனா 20 கோடி யுவானை ஒதுக்கியுள்ளது. அணுக் கூட்டிணைவு மூலம் எரியாற்றலை உருவாக்குவது, அணுப் பிளவு தொழில் நுட்பத்தை விட ஈடற்ற மேம்பாடுடையது என்று இந்த ஆய்வுக்குப் பொறுப்பான சீன அறிவியல் கழகத்தின் பேராசிரியர் wan yuan xi கூறினார். பூமியில் இருக்கும் யுரேனியத்தின் அளவு 60 ஆண்டுகள் மட்டுமே பயன்படுத்த முடியும். இது அணுப் பிளவு மின்னாற்றல் உற்பத்தி நிலையங்களின் குறைபாடாகும். ஆனால், அணுக் கூட்டிணைவுக்குத் தேவையான எரிபொருள் கடல் நீரில் உள்ளது. இதன் அளவும் அதிகமானது என்றார் அவர். அணுக் கூட்டிணைவுக்குத் தேவையான முக்கிய மூலப் பொருளான deuterium கடல் நீரில் அதிகமாக இருக்கின்றது. ஒரு லீட்டர் கடல் நீரிலிருந்து கிடைக்கும் deuterium, அணுக் கூட்டிணைவின் ஊடாக போக்கில் 300 லீட்டர் பெட்ரோலியம் ஆற்றலை வழங்கலாம். அறிவியலாளர்கள் கணக்கீட்டின் படி, பூமியின் கடல் நீரில் 45 இலட்சம் கோடி டன் deuterium இருக்கின்றது. இந்த அளவை மனிதர்கள் ஒரு ஆயிரம் கோடி ஆண்டுகள் பயன்படுத்தலாம். இது மட்டுமல்ல, அணுப் பிளவின் தூய்மைக்கேடு மற்றும் பாதுகாப்பு பிரச்சினை கடுமையானது. அணுப் பிளவுக்குப் பின் உருவாகும் கழிவுப் பொருள் அதிக கதிர் வீச்சுத் தன்மை வாய்ந்தது. விபத்து ஏதும் ஏற்பட்டால், கடும் பாதிப்பை ஏற்படுத்தும். எடுத்துக்காட்டாக, 20 ஆண்டுகளுக்கு முன், முன்னாள் சோவியத் யூனியனின் Chernoby அணு மின் நிலையத்தில் அணுப் பொருள் கசிவு ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட துன்பம் இதுவரை முற்றிலும் நீக்கப்படவில்லை. ஆனால், அணுக் கட்டிணைவின் கதிர் வீச்சுத் தன்மை மிகவும் குறைவு. |
Home »
» சீனாவில் தூய்மையான எரியாற்றல் பற்றிய ஆய்வு
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !