இந்தியாவில் கர்நாடக மாநிலம் பாகல்கோட்டையில் மாட்டு தொழுவத்தில் கட்டி வைத்திருந்த எருமை போட்ட சாணத்துடன் செல்போன் ஒன்று வெளியில் வந்து விழுந்துள்ளது.
பாகல்கோட்டை ஹொசரொள்ளி கிராமத்தை சேர்ந்த விவசாயியான ஈஸ்வர தொட்டகாரா என்பவர் மாடுகள் வளர்த்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு மாட்டு தொழுவத்தில் கால்நடைகளுக்கு தீவனம் போட்டுக் கொண்டிருந்த போது எதிர்பாராமல் இவரது பாக்கெட்டில் இருந்த செல்போன் விழுந்துள்ளது.
இதை கவனிக்காமல் வீட்டில் செல்போனை தேடியுள்ளார். அது கிடைக்கவில்லை. உடனடியாக வேறு செல்போன் மூலம் தனது செல்போனுக்கு தொடர்பு கொண்டார். ரிங்டோன் மட்டும் சத்தம் குறைவாக கேட்டுள்ளது.
நாள் முழுவதும் தேடியும் செல்போன் கிடைக்காததால் வேறு செல்போன் வாங்கும் முடிவுக்கு வந்துள்ளார். இதனிடையில் வழக்கம் போல் மாட்டு தொழுவத்திற்கு சென்று கால்நடைகளுக்கு தீவனம் போட்டுக்கொண்டிருந்தார். அப்போது தொழுவத்தில் இருந்த எருமை ஒன்று சாணம் போட்டது.
அதை சேகரிப்பதற்காக கையில் அள்ளிய போது, அதனுடன் செல்போன் வந்துள்ளது. அதை கழுவி பார்த்த போது 7 மிஸ்டு கால்கள் பதிவாகியுள்ளது தெரியவந்தது.
இதை பார்த்து ஈஸ்வர தொட்டகார ஆச்சரியத்தில் மூழ்கினார். பிளாஸ்டிக் கவர் போடப்பட்டிருந்த செல்போனை தீவணத்துடன் சேர்த்து எருமை தின்றுள்ளது தெரியவந்தது.
இதில் ஆச்சரியம் என்னவென்றால், ஒரு நாள் முழுவதும் எருமையின் வயிற்றில் இருந்தும், தண்ணீர் உள்ளே செல்லாமல், செல்போன் நன்றாக இயங்கியது தான்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !