காதல் வயப்பட்டவர்களுக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே பொதுவாகப் பிடித்த ஒன்று தான் இந்த நிலா. பல கவிஞர்களை வாழ வைத்த நிலா. நிலவைக் காட்டிச் சோறூட்டிய என் அம்மா முதல் என் பிள்ளைக்காக நிலவைத் தேடும் என் மனைவி வரை அனைவருக்கும் அழகாக் காட்சி அளிக்கும் இந்த நிலவின் ரகசியங்கள் சிலவற்றை பார்க்கலாம்...
சில அறிவியல் குறிப்புகள்:
- நிலவில் வளி மண்டலம் கிடையாது.
- காற்றோ வானிலை மற்றமோ அங்கில்லை.
- 2009 தில் தான் நிலவில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
- நிலவிற்குச் சென்றவர்களின் காலடித்தடங்கள் 10 மில்லியன் வருடங்கள் அழியாமல் இருக்குமாம்.இதற்குக் காரணம் நிலவில் மண் அரிப்போ காற்றோ இல்லை என்பவைகளாகும்.
- நிலவின் ஒரு முகத்தை மட்டும் தான் பார்த்துக் கொண்டிருக்கிறோம், பார்க்கவும் முடியும். நிலவின் மறு முகத்தை செய்ற்கைகோல்கள் மட்டும் தான் இதுவரை படம் பிடித்துள்ளன.
- பூமியிலிருந்து சுமார் 250,000 மையில்கள் (384,400 கிலோமீட்டர்கள்) தொலைவில் உள்ளது. இந்த தூரத்தை நாம் உணர்ந்துகொள்ள இப்படி எடுத்துக் கொள்ளலாம். ஒரு காரில் 125 கிமி/மணி வேகத்தில் சென்றால் 130 நாள்களில் நாம் நிலவைச் சென்றடையலாம். ராக்கட்டில் 13 மணி நேரத்திலும், ஒளி வேகத்தில் 1.52 நொடிகளிலும் நிலவைச் சென்றடையலாம்.
- சராசரியாக, சந்திரன் பூமியை 2,288 மைல்கள்/மணி (3,683 கிமீ/மணி) வேகத்தில் சுற்றி வருகின்றது.
- ஒரே ஆங்கில மாதத்தில் ஏற்படும் இரண்டு பௌர்ணமி நிலவுகளை நீலநிலா என்றழைக்கின்றனர். கடந்த 2012 ஆகஸ்து மாதம் நீல நிலவு நாள் என்பது குறிப்பிடத்தக்கது.
சுற்றி வரும் சந்திரன்:
ஒவ்வொரு நாளும் 12.2 டிகிரிகள் கிழக்கே நகர்ந்து கொண்டு, ஒரு சந்திர மாதத்தில் 29.5 நாள்கள் x 12.2 டிகிரிகள் = 360 டிகிரிகள் சுற்றி வந்து ஒரு மாதத்தினை நிறைவு செய்யும்.
நிலவின் படிநிலைகள் பற்றியச் சில குறிப்புகள்:
அம்மாவாசையிலிருந்து வளரும் நிலா ஏழாவது நாளில் சுற்றின் முதல் கால்பகுதியில் (அரைவட்ட நிலாவாக) இருக்கும். பதினைந்தாவது நாளில் முழு பெளர்ணமியாகும். பின் தேயத் துவங்கும். இருபத்தி மூன்றாவது நாளில் இறுதிக் கால்பகுதியில் (அரைவட்ட நிலவாக) இருக்கும். மீண்டும் ஒரு அம்மாவாசையில் ஒளியிழந்து அடுத்தச் சுற்றிற்காக ஆயத்தமாகும்.
சூரியனைப் போல் சந்திரனும் கிழக்கில் உதித்து மேற்கில் மறையும். உதிக்கும் மற்றும் மறையும் நேரம் மட்டும் நாளுக்கு நாள் மாறுபடும்.
அம்மாவாசை அன்று சூரியன் உதிக்கும் அதே நேரத்தில் சந்திரனும் உதித்து, சூரியன் மறையும் அதே நேரத்தில் மறைந்து விடும்.அடுத்த நாள் சூரியனை விட சற்று தாமதமாக உதித்து சற்று தாமதமாக மறையும். அதனால் தான் முதல் பிறையை மேற்கு வானில் மறையும் பொழுது சற்று நேரம் பார்க்க முடிகிறது. இரண்டாவது நாள் இன்னும் சற்று தாமதமாகி மீண்டும் மேற்கு வானில் மறையும் நேரத்தில் பார்க்க முடியும்.
முதல் அரைவட்ட நிலா (ஒரு சுற்றின் முதல் கால்பகுதிக் காலச் சந்திரன்- First Quarter Moon) நன்பகலில் உதித்து நல்லிரவில் மறையும். ஆகையால், சூரியன் மறையும் நேரத்தில் நிலா உச்சியில் இருப்பத்திப் பார்க்கலாம். வேறுவிதமாக, சூரியன் உச்சியில் இருக்கும் பொழுது நிலவு உதிக்கும் என்றும் சொல்லாம்.
பெளர்ணமி அன்று சூரியன் மறையும் நேரத்தில் முழு நிலவு (பெளர்ணமி நிலவு) உதித்து, அடுத்த நாள் காலை சூரியன் உதிக்கும் நேரத்தில் மறையும். ஆகையல் முழு நிலவை இரவு முழுவதும் பார்த்து ரசிக்கலாம்.
படத்தில், சூரியன் உச்சியில் இருக்கும் பொழுது நிலவு எதிர்திசையில் இருப்பதைப் பார்க்கலாம்.
இறுதி அரைவட்ட நிலா (ஒரு சுற்றின் இறுதிக் கால்பகுதி நிலவு- Last Quarter Moon) நல்லிரவில் உதித்து நன்பகலில் மறையும். சந்திர மாதத்தின் கடைசி நாள்கள் வர வர நிலவு உதிக்கும் நேரம் நல்லிரவையும் தாண்டியிருப்பதால் அந்த நாள்களில் நாம் நிலவை பார்க்க வேண்டுமென்றால் இரவில் கண் விழிக்க வேண்டும். பெளர்ணமிக்குப் பின் வரும் நாள்களில், நிலவு உதிக்கும் நேரம் சூரியன் மறைந்த நேரத்திலிருந்து சற்று தாமதமாகி தாமதமாகி இறுதிக் கால்பகுதிக்குப் பின் சூரியன் உதிக்கும் சில மணி நேரத்திற்கு முன்னர் தான் நிலவைப் பார்க்க முடியும்.
இவ்வாறு தாமதமாக உதித்து வரும் சந்திரன் அம்மாவாசை அன்று மீண்டும் அடுத்த சுற்றிற்காக தயாராகிவிடும். அதாவது நிலவின் உதயம் மற்றும் மறையும் நேரம் சூரியனை ஒத்திருக்கும்.
ஞாயிற்று வழிமாதம்: (Synodic Month)
ஒரு அம்மாவாசையிலிருந்து மறு அம்மாவாசை வரை கணக்கிடப்படும் சந்திரனின் ஒரு முழுச் சுற்று ஞாயிற்று வழிமாதம் அல்லது சந்திர மாதம் எனப்படும். இதற்காக ஆகும் காலம் 29.5 நாள்கள். துல்லியமாகச் சொல்லப் போனால், 29 நாள்கள், 12 மணிகள், 43 நிமிடங்கள், 11.6 நொடிகள் ஆகும்.
வானக மாதம்: (Sidereal Month)
பூமியைச் சுற்றி வர, சுற்றைத் துவங்கிய இடத்திலிருந்து மீண்டும் அதே இடத்திற்கு 27 நாள்கள் (27 நாள்கள், 7 மணிகள், 43 நிமிடங்கள், 11.6 நொடிகள்) எடுத்துக் கொள்கிறது. இது வானக மாதம் (Sidereal Month) எனப்படுகிறது.
இதுபோக....:
தினந்தோறும் வளர்ந்தும் தேய்ந்தும் வரும் நிலவினால் பூமியில் பல மாறுதல்கள் ஏற்படுகின்றன. நிலவின் ஈர்ப்பினால் தான் கடல் மட்டத்தில் அவ்வப்பொழுது ஏற்ற இறக்கங்கள் காணப்படுகின்றன. நிலவின் படித்தளங்களினால் மனித உடலிலும் சில மாறுதல்கள் ஏற்படும். இதற்காகத் தனியே சந்திர முறை கருத்தரிப்புக் கால அட்டவனைகளைச் (Lunar Fertility Calendar) சில மருத்துவர்கள் பயன்படுத்தி வருவது கூடுதல் தகவல்.
முற்றிலுமாகச் சூரியனின் உதவியாலேயே வெளிச்சம் தருகின்ற இரவு நேரத்து விளக்கு. சூரிய ஒளியில் இயங்கும் முதல் சாதனம் இதுவாகத்தான் இருக்கும்.
அறிவியலோடு நிலவை ரசித்தால் இன்னமும் சுவாரசியமாக இருக்கும் என்பதற்கான சிறிய முயற்சியே இந்த ஆக்கம்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !