நியூசிலாந்து நாட்டின் பியுக்ஹினா கடற்கரையொன்றில் இராட்சத கடல் வாழ் உயிரினமொன்று இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது.
இதன் உடலின் பெரும் பகுதி அழுகிய நிலையில் காணப்படுகின்றது.
இம் மர்ம உயிரினம் தொடர்பில் விஞ்ஞானிகள் ஆராய்ச்சிகளைத் தொடங்கியுள்ளனர்.
திமிங்கிலம் அல்லது உவர் நீர் முதலை என பல விலங்குகளுடன் இதனை ஒப்பிட்டுப் பார்த்து வருகின்றனர் விஞ்ஞானிகள்.
சிலர் இது ஆழ் கடல் உயிரினமாக இருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.
முதலில் இது தொடர்பில் காணொளியொன்றை எலிசபெத் ஹேன் என்ற பெண்ணே யுடியூப்பில் வெளியிட்டார்.
தற்போது இவ் உயிரினம் தொடர்பில் விஞ்ஞான உலகம் பரபரப்பாக பேசி வருகின்றது.
அழுகிய நிலையில் உள்ள குறித்த உயினமானது 30 அடி நீளமானதென தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் கூரிய பற்களையும் அது கொண்டுள்ளது. அதன் உடலின் சில பகுதிகள் காணப்படவில்லையெனத் தெரிவிக்கப்படுகின்றது.
இத்தகைய மர்ம விலங்குகள் கடலிலிருந்து கரையொதுங்குவது இது முதன் முறையல்ல.
சீனாவின் குவாண்டொங் கடற்கரைப் பகுதியில் கடந்த 2011 ஆம் ஆண்டு இராட்சத உயிரினமொன்று கரை ஒதுங்கியது. இது 55 அடி நீளமான உயிரினமொன்றினுடையதாகும்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !