செவ்வாய் கிரகத்தில், களிமண் இருப்பதை, அமெரிக்காவின், கியூரியாசிட்டி விண்கலம் கண்டறிந்துள்ளது. அமெரிக்கா, நாசா விண்வெளி ஆய்வு மையம் சார்பில், செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்பட்ட, கியூரியாசிட்டி விண்கலம், அங்கு சமீபத்தில், பாறை ஒன்றை உடைத்து, அதனுள் இருந்த துகள்களை எடுத்து, விண்கலத்திலுள்ள, “சாம்´ மற்றும் “செமின்´ ஆகிய இரு ஆய்வகங்களில், பரிசோதனை நடத்தியது. அத்துகள்களில், களிமண் படலங்கள் இருப்பது தெரிந்தது.
இதையடுத்து, லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன், அப்பகுதியில் உயிரினம் இருந்திருக்கலாம் என, விஞ்ஞானிகள் நம்புகின்றனர். மேலும், அங்கு களிமண் படலம் இருப்பது கண்டறியப்பட்டதால், சுத்தமான தண்ணீரும் இருந்திருக்க வேண்டும் என்றும், தண்ணீர் இருந்திருக்குமானால், உயிரினம் இருந்திருக்கவும் வாய்ப்பு அதிகமுள்ளதாகவும், நாசா விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
இது தவிர, செவ்வாய் கிரகத்தில், கந்தகம், நைட்ரஜன், ஆக்சிஜன், பாஸ்பரஸ் போன்றவையும் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளதால், செவ்வாய் கிரகத்தில் உயிரினம் இருந்ததற்கான போதுமான ஆதாரங்களை, விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்.நாசா அனுப்பிய விண்கலம், செவ்வாய் கிரகத்தின் மத்திய பகுதியில், கேல் என்ற இடத்தில், மிகவும் புராதனமான, ஏரியின் அடிப்பகுதியில் இருந்து தான், ஆய்வுகளை நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !