அமெரிக்காவைச் சேர்ந்த ட்ரைனா மேரி எனும் பெண் மனித உடல்களின் மூலம் விதம் விதமான மோட்டார் சைக்கிள்களை வடிவமைக்கிறார்.உடலில் பெரும்பாலான பகுதிகளை வர்ணப்பூச்சுகளை மாத்திரம் அணிந்த பல பெண்கள் தமது உடலை வளைத்து நெளித்து மோட்டார் சைக்கிள் போன்ற உருவத்தை ஏற்படுத்த அந்த ‘மோட்டார் சைக்கிளில்” சீறிப் பாய்வதைப் போல் புகைப்படங்களுக்கு போஸ் கொடுக்கிறார் ட்ரைனா.
வடிவமைக்க விரும்பும் மோட்டார் சைக்கிள்களின் தோற்றங்களுக்கு ஏற்ப, அவரின் சகாக்களின் உடலில் பல்வேறு வர்ணங்கள் பூசப்படுகின்றன.
ஒரு தடவையில் 5-6 நிமிடங்கள் தொடர்ச்சியாக உடலைவளைத்து போஸ் கொடுப்பதுடன் முழுப்படப்பிடிக்கும் சுமார் 18 மணித்தியாலங்கள் வரை செல்லும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
கலிபோர்னியா மாநிலத்தைச் சேர்ந்த ட்ரைனா மேரி ஆரம்பத்தில் மெல்லிய உடலமைப்புடைய மொடல் அழகிகளையே இதற்கு பயன்படுத்தினார். ஆனால் 18 மணித்தியாலங்கள் வரை தாக்குப்பிடிக்க வேண்டும் என்பதற்காக இப்போது விளையாட்டு வீராங்கனைகளையே அவர் பயன்படுத்துகிறார்.
ஆமெரிக்காவில் நடைபெறவுள்ள பல மோட்டார் வாகன கண்காட்சிகளில் தனது மோட்டார் சைக்கிள்களையும் காட்சிப்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக ட்ரைனா மேரி கூறியுள்ளார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !