தங்க நகை அணிவதிலும் அதை வாங்குவதிலும் பெண்களுக்கு அலாதி ஆர்வம்தான். சவரன் எத்தனை ஆயிரம் விற்றாலும் பரவாயில்லை மாதத்திற்கு அல்லது வருடத்திற்கு இத்தனை பவுன் சேர்த்துவிடவேண்டும் என்பதில் குறியாக இருப்பார்கள்.
தங்க நகை அணிவது அழகுக்காக என்பதை விட அது ஆரோக்கியத்தோடும் தொடர்புடையது என்கின்றனர் நம்முன்னோர்கள். பழங்காலத்தில் இருந்தே தங்கம், வெள்ளி நகைகளை அணியவும், தாமிரம், பித்தளை பாத்திரங்களை உணவு சமைக்கவும் பயன்படுத்தியுள்ளனர்.
எகிப்து, இந்தியா, சுமேரியா நாகரீகங்களின் கால கட்டத்திலே தாமிரம், வெள்ளி, தங்கத்தின் பயன்பாடு அதிகமாக இருந்துள்ளதை வரலாற்றுச் சான்றுகளின் மூலம் தெரிந்து கொள்ளலாம். அதனால்தான் இன்றைக்கும் நம் வீட்டில் உள்ள தங்க தந்தட்டி போட் பாட்டிகள் தாமிரப் பானையில் தண்ணீர் ஊற்றிவைப்பதும், பித்தளை கும்பாவில் கம்மங்கூழ் ஊற்றிக் குடித்தும் உடம்பை கூல் ஆக வைத்திருக்கின்றனர்.
அதனால் என்னதான் நன்மையிருக்கு மேற்கொண்டு படியுங்களேன்.
அங்கங்களை டச் பண்ணும்
காதில், மூக்கில், கழுத்தில், கைகளில் அணியும் தங்க நகைகள் நம் உடம்பில் உள்ள வர்மப் புள்ளிகளைத் தூண்டி நம் உடம்பின் ஒவ்வொரு உறுப்பின் நலனையும் பராமரிக்க உதவுகிறது என்கின்றனர் அக்குப்பஞ்சர் மருத்துவர்கள்.
உயிர் ஓட்டப்பாதையில் பாதுகாக்கும்
நம் உடலின் நரம்பு மண்டலங்களைப் போல, நம் உயிர் ஓடும் சக்திக்கு என்று தனிப்பாதைகள் உண்டு. ‘நாடி ஓட்டப் பாதை' என்று இதற்குப் பெயர். உயிர்ச்சக்தி ஓட்டப் பாதைகள் என்றும் சொல்வோம். நாடிகளும், நரம்புகளும் முக்கிய இடங்களில் ஒன்று சேர்வதை வர்மப் புள்ளிகள் என்கிறோம். இவற்றை தூண்டுவதன் மூலம் நோய்களை குணப்படுத்துவது அக்குப்பஞ்சர்.
மாமன் மடியில உட்காந்து காது குத்துங்கப்பா
கை, கால், மற்றும் உள்ளங்கை, உள்ளங்காலில் உள்ள வர்மப்புள்ளிகளை தூண்டும் விதமாகவே வெறும் காலால் நடந்து மலைக் கோயிலுக்கு செல்வது, மாமன் மடியில் அமர்ந்து மொட்டை போட்டு காது குத்தி தோடு அணிவிப்பதை ஒரு திருவிழாவாகவே கொண்டாடி மகிழ்ந்துள்ளனர் நம்முன்னோர்கள்.
உடம்பில தேஜஸ் அதிகரிக்கும்
அதேபோல தங்கத்தை காது, மூக்கு கைகளில் போடுவதற்குக் ஸ்பெசல் காரணம் என்னவெனில், தங்கம் உடம்பைத் தொட்டபடி இருந்தால் நம் உடலின் தேஜஸ் அதிகரித்து அழகு மிளிரும் என்கின்றனர் நிபுணர்கள்.
வெள்ளிக் கொலுசுமணி
தேபோல் கால்களில் போடப்படும் வெள்ளிக்கொலுசு பெண்களின் கால்நோவுகளை நீக்குகிறதாம். மாதவிலக்கு சமயத்தில் அதிகஅளவில் சிரமத்திற்கு ஆளாவதில் இருந்து பாதுகாக்கிறதாம்.
கட்டாயம் நகை போடுங்க
நாம் போடுவது தங்கமோ, வெள்ளியோ அல்லது சாதாரண மெட்டலோ எதுவாக இருந்தாலும், அந்த ஆபரணம் என்பது நம் உடலின் அக்குபஞ்சர் புள்ளிகளைத் தூண்டித்தான் விடுகிறது. அதற்காகவாவது, இனி நாம் நகைகளைப் போடுவோம். இதனால் பல வியாதிகள் கட்டுப்படும் என்கின்றர் நிபுணர்கள்.!
தாமிரப்பானைல தண்ணீர்
அதேபோல் தாமிரப் பானையில் இரவில் தண்ணீர் ஊற்றிவைத்து அதை காலை நேரத்தில் குடித்தால் அது அருமருந்து என்கிறது ஆயுர்வேதம். அதேபோல் வெள்ளி தம்ளர் உபயோகித்தாலும் உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்குமாம். தமிரம் உடலில் ரத்தச் சிவப்பணுக்களை அதிகரிக்குமாம். சரும ஆரோக்கியத்தையும், கூந்தலை ஆரோக்கியமாகவும் பேணிக்காக்கிறதாம். அடப்போங்கப்பா தங்கமும்,வெள்ளியும், தாமிரமும் விக்கிற விலையில இதெல்லாம் எங்கே என்று யோசிக்கிறீர்களா? அப்போ காசு செலவழித்து மருத்துவமனைக்கு போங்க என்கின்றனர் நிபுணர்கள்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !