கடவுள் துணிக்கை (Higs Boson) இருப்பது உறுதியானது - பௌதிகவியலில் திருப்பம் - nelliadynet
Headlines News :
Home » » கடவுள் துணிக்கை (Higs Boson) இருப்பது உறுதியானது - பௌதிகவியலில் திருப்பம்

கடவுள் துணிக்கை (Higs Boson) இருப்பது உறுதியானது - பௌதிகவியலில் திருப்பம்

Written By www.kovilnet.com on Monday, March 25, 2013 | 7:14 AM

அணுவின் கருவுக்குள்ளே உள்ள துணை அணுத் துகளாக (subatomic particle) ஊகிக்கப் படும் கடவுள் துணிக்கை எனப்படும் ஹிக்ஸ் போசொன் (Higs Boson) உண்மையில் இருக்கிறதா அல்லது இல்லையா என நீண்ட காலமாக பௌதிகவியலாளர்கள் சுவிட்சர்லாந்தின் சேர்ன் நகரில் உள்ள Hadron Collider எனும் கருவிக்குள்ளே ஆய்வு நடத்தி வந்தனர்.
இன்று வியாழக்கிழமை ஒரு வழியாக அதை உறுதிப் படுத்தியுள்ளனர்.

குறித்த ஒரு அணுவுக்கு திணிவைத் தரும் துணை அணுத் துகளாகக் கருதப் படும் ஹிக்ஸ் போசொனை கண்டு பிடிப்பதற்காக Hadron Collider இனுள்ளே கடந்த 3 வருடங்களாக புரோட்டோன் (Proton) கற்றைகளை மோத விட்டு தகவல்கள் சேமிக்கப் பட்டன. இந்நிலையில் சமீபத்தில் இக்கருவியினுள்ளே ஹிக்ஸ் போசொன் துகள் சேமிக்கப் பட்டதால் மேலதிக மோதல்கள நிறுத்தியுள்ளனர். 1964 ஆம் ஆண்டு பிரபஞ்சத்தின் படைப்பு பற்றிய புரிந்துணர்வுக்காக மும்மொழியப் பட்டதே கடவுள் துணிக்கை (God Particle) எனப்படும் ஹிக்ஸ் போசொன். இந்தத் துகள் ஏனைய பாகங்களுடன் காட்டும் எதிர்வினையை அவதானிக்கும் போது இது நிச்சயம் ஹிக்ஸ் போசொனாகத் தான் இருக்கும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இதேவேளை சேர்ன் ஆய்வு கூடத்தில் பணியாற்றிய CMS எனும் குழு இவ்விடயம் குறித்துத் தகவல் அளிக்கையில் 2012 ஆம் ஆண்டு சேர்ன் ஆய்வு கூடத்தில் கிடைக்கப்  பெற்ற தகவல்கள் அருமையானவை. இதனால் நாம் இப்போது ஹிக்ஸ் போசொனுடன் உறவாடி வருவது ஊர்ஜிதமாகின்றது. எனினும் தற்போது இத்துகளை இணங்கண்டதுடன் சரி. ஆனால் இன்னும் பயணிக்க வேண்டியது நிறைய உள்ளது. அதாவது ஹிக்ஸ் போசொன் என்ன மாதிரியான துணிக்கை? அதன் இயல்புகள் என்ன? பிரபஞ்சத்தின் தோற்றத்திலும் பரிணாமத்திலும் அதன் பங்கு என்ன? ஆகிய விடயங்களை அறிய வேண்டியுள்ளது என்றுள்ளது.

ஹிக்ஸ் போசொன் பற்றிய இயல்புகளை நாம் அறியும் போது பிரபஞ்சத்தின் கட்டட அமைப்பைத் தீர்மானிக்கும் சக்தியை அடையாளம் காண முடிவதுடன் பிரபஞ்சத்துக்கு எலெக்ட்ரான்களுடன் அதன் அளவையும் வடிவத்தையும் உருவாக்கும் சடப்பொருளையும் கொடுக்கும் மூலப் பொருளாக அதை இனங் காணவும் முடியும்.

சுவிஸ் பிரெஞ்சு எல்லைக்கு அண்மையில் சேர்னில் அமைக்கப்பட்ட Hadron collider கருவி பிரபஞ்சம் எப்படித் தோன்றியதோ அதே போன்ற தாக்கத்தை அதாவது புரோட்டன் (Proton) கற்றைகளை மோத விட்டு அதன் விளைவாக சேகரிக்கப் படும் ஹிக்ஸ் போசொனை அடையாளம் காண்பதற்காக உருவாக்கப் பட்டது. இதற்கான செலவு $10 பில்லியன் டாலர்களாகும்.

கடவுள் துணிக்கை (Higs Boson)  இருப்பது உறுதியானது - பௌதிகவியலில் திருப்பம்
 
அணுவின் கருவுக்குள்ளே உள்ள துணை அணுத் துகளாக (subatomic particle) ஊகிக்கப் படும் கடவுள் துணிக்கை எனப்படும் ஹிக்ஸ் போசொன் (Higs Boson) உண்மையில் இருக்கிறதா அல்லது இல்லையா என நீண்ட காலமாக பௌதிகவியலாளர்கள் சுவிட்சர்லாந்தின் சேர்ன் நகரில் உள்ள Hadron Collider எனும் கருவிக்குள்ளே ஆய்வு நடத்தி வந்தனர். இன்று வியாழக்கிழமை ஒரு வழியாக அதை உறுதிப் படுத்தியுள்ளனர்.
 
குறித்த ஒரு அணுவுக்கு திணிவைத் தரும் துணை அணுத் துகளாகக் கருதப் படும் ஹிக்ஸ் போசொனை கண்டு பிடிப்பதற்காக Hadron Collider இனுள்ளே கடந்த 3 வருடங்களாக புரோட்டோன் (Proton) கற்றைகளை மோத விட்டு தகவல்கள் சேமிக்கப் பட்டன. இந்நிலையில் சமீபத்தில் இக்கருவியினுள்ளே ஹிக்ஸ் போசொன் துகள் சேமிக்கப் பட்டதால் மேலதிக மோதல்கள நிறுத்தியுள்ளனர். 1964 ஆம் ஆண்டு பிரபஞ்சத்தின் படைப்பு பற்றிய புரிந்துணர்வுக்காக மும்மொழியப் பட்டதே கடவுள் துணிக்கை (God Particle) எனப்படும் ஹிக்ஸ் போசொன். இந்தத் துகள் ஏனைய பாகங்களுடன் காட்டும் எதிர்வினையை அவதானிக்கும் போது இது நிச்சயம் ஹிக்ஸ் போசொனாகத் தான் இருக்கும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
 
இதேவேளை சேர்ன் ஆய்வு கூடத்தில் பணியாற்றிய CMS எனும் குழு இவ்விடயம் குறித்துத் தகவல் அளிக்கையில் 2012 ஆம் ஆண்டு சேர்ன் ஆய்வு கூடத்தில் கிடைக்கப்  பெற்ற தகவல்கள் அருமையானவை. இதனால் நாம் இப்போது ஹிக்ஸ் போசொனுடன் உறவாடி வருவது ஊர்ஜிதமாகின்றது. எனினும் தற்போது இத்துகளை இணங்கண்டதுடன் சரி. ஆனால் இன்னும் பயணிக்க வேண்டியது நிறைய உள்ளது. அதாவது ஹிக்ஸ் போசொன் என்ன மாதிரியான துணிக்கை? அதன் இயல்புகள் என்ன? பிரபஞ்சத்தின் தோற்றத்திலும் பரிணாமத்திலும் அதன் பங்கு என்ன? ஆகிய விடயங்களை அறிய வேண்டியுள்ளது என்றுள்ளது.
 
ஹிக்ஸ் போசொன் பற்றிய இயல்புகளை நாம் அறியும் போது பிரபஞ்சத்தின் கட்டட அமைப்பைத் தீர்மானிக்கும் சக்தியை அடையாளம் காண முடிவதுடன் பிரபஞ்சத்துக்கு எலெக்ட்ரான்களுடன் அதன் அளவையும் வடிவத்தையும் உருவாக்கும் சடப்பொருளையும் கொடுக்கும் மூலப் பொருளாக அதை இனங் காணவும் முடியும்.
 
சுவிஸ் பிரெஞ்சு எல்லைக்கு அண்மையில் சேர்னில் அமைக்கப்பட்ட Hadron collider கருவி பிரபஞ்சம் எப்படித் தோன்றியதோ அதே போன்ற தாக்கத்தை அதாவது புரோட்டன் (Proton) கற்றைகளை மோத விட்டு அதன் விளைவாக சேகரிக்கப் படும் ஹிக்ஸ் போசொனை அடையாளம் காண்பதற்காக உருவாக்கப் பட்டது. இதற்கான செலவு $10 பில்லியன் டாலர்களாகும்.

Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

www.facebook.com/nelliadynet

Support :
Template Design by V.Rajeepan Published by Nelliadynet Template