வான்வெளியில் மிதந்தபடி பூமியைச் கண்காணித்துப் தன் பயண ஒழுக்கில் சென்று கொண்டிருக்கும் சர்வதேச விண்வெளி மையத்தில் தங்கி ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவென கனடிய வின்வெளிவீரர் கிறிஸ் ஹட்பீல்ட் நாளை விண்வெளி செல்லவுள்ளார்.
சர்வதேச விண்வெளி மையத்தில் தங்கியிருக்க விண்வெளிவீரர்கள் ஆறு மாதங்கள் தங்கியிருப்பதோடல்லாமல் அதன் கட்டுப்பாட்டாளராகவும் இருப்பது மிகவும் பெருமைக்குரியதொரு விடயமாகும். சர்வதேச விண்வெளி மையத்தின் கட்டுப்பாட்டாளராக இருக்கும் முதல் கனடியர் என்ற பெருமையையும் கிறிஸ் ஹட்பீல்ட் பெறுகிறார்.
ரொறன்ரோவை அண்மித்த மில்ரனில் பிறந்து வளர்ந்தவரான ஹட்பீல்ட பணிப்போரின் போதான காலத்தில் ஒரு போர் விமான ஓட்டியாக இருந்ததுடன் நீயூபவுன்லாந்தின் வான் எல்லைப்புறங்களில் ரஸ்ய விமாணங்கள் பறப்புக்களை மேற்கொள்ளாமல் பணியையும் செய்தவர் இந்த கேணல் ஹட்பீல்ட் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே 2001ல் விண்வெளிக்குச் சென்று திரும்பிய ஹட்பீல்ட இந்தமுறை ஆறுமாத காலம் விண்வெளியில் தங்கியிருந்து விஞ்ஞான ஆராச்சிகளையும், திருத்தவேலைகளிற்காக விண்கலத்திற்கு வெளியேயான விண்நடைகளையும் மேற்கொள்ளவுள்ளார்.
சூரியக்கலங்கள், கனடாவின் கை என்ற ஒரு ரோபோக் கை உட்பட பல இத்தியாதிகளைக் கொண்டுள்ள ஒரு உதைபந்தாட்ட மைதானத்தை விட நீளமான இந்த விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் செயற்பாடுகளை 52 கணணிகள் ஒழுங்கமைத்துக் கொண்டிருக்கினறன. இந்த மையத்தில் இணைக்கப்பட்டுள்ள வயர்களின் நீளம் சுமார் 13 கிலோமீற்றரையும் தாண்டிச் செல்லும்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !