நியூயார்க்: சனி கிரகத்தின் துணை கோளான (நிலா) 'டைட்டன்' பூகோளரீதியில் (geology) பூமியை போன்றே உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சனி கிரகத்தின் ஏராளமான துணைக் கோள்களில் மிகப் பெரியது டைட்டன் தான். இந்தக் கோளில் பூமியைப் போன்றே ஏராளமான ஆறுகள் உள்ளன. ஆனால், அதில் நீருக்குப் பதில் திரவ நிலையில் மீத்தேன் தான் ஓடிக் கொண்டுள்ளது. அதே போல சூரிய மண்டலத்தில் உள்ள பிற துணைக் கோள்கள், நிலாக்களில் காணப்படும் ஏராளமான கிரேட்டர்கள் எனப்படும் மேடு, பள்ளங்கள் இதில் இல்லை. விண் கற்கள் தாக்குதல்களால் ஏற்படும் இந்த மேடு, பள்ளங்கள் டைட்டனில் காணப்படாததற்குக் காரணம் இதுவரை தெரியாமல் இருந்தது. ஆனால், பூமியைப் போன்ற டைட்டனிலும் கண்டத் திட்டுகள் நகர்வு உள்ளிட்ட நிலவியல் மாற்றங்கள் ஏற்பட்டு வருவதால் இந்த மேடு, பள்ளங்கள் மறைந்துவிடுவது தெரியவந்துள்ளது. இதன்மூலம் டைட்டனின் புவியியல் தன்மை கிட்டத்தட்ட பூமியை ஒத்து இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்
சனி கிரகத்தின் நிலா 'டைட்டன்' பூமியை போன்றது: விஞ்ஞானிகள்
Written By www.kovilnet.com on Thursday, January 10, 2013 | 5:34 AM
நியூயார்க்: சனி கிரகத்தின் துணை கோளான (நிலா) 'டைட்டன்' பூகோளரீதியில் (geology) பூமியை போன்றே உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சனி கிரகத்தின் ஏராளமான துணைக் கோள்களில் மிகப் பெரியது டைட்டன் தான். இந்தக் கோளில் பூமியைப் போன்றே ஏராளமான ஆறுகள் உள்ளன. ஆனால், அதில் நீருக்குப் பதில் திரவ நிலையில் மீத்தேன் தான் ஓடிக் கொண்டுள்ளது. அதே போல சூரிய மண்டலத்தில் உள்ள பிற துணைக் கோள்கள், நிலாக்களில் காணப்படும் ஏராளமான கிரேட்டர்கள் எனப்படும் மேடு, பள்ளங்கள் இதில் இல்லை. விண் கற்கள் தாக்குதல்களால் ஏற்படும் இந்த மேடு, பள்ளங்கள் டைட்டனில் காணப்படாததற்குக் காரணம் இதுவரை தெரியாமல் இருந்தது. ஆனால், பூமியைப் போன்ற டைட்டனிலும் கண்டத் திட்டுகள் நகர்வு உள்ளிட்ட நிலவியல் மாற்றங்கள் ஏற்பட்டு வருவதால் இந்த மேடு, பள்ளங்கள் மறைந்துவிடுவது தெரியவந்துள்ளது. இதன்மூலம் டைட்டனின் புவியியல் தன்மை கிட்டத்தட்ட பூமியை ஒத்து இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்
Labels:
DIARY
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !