சந்திரனிலிருந்து பூமிக்கு சூரிய ஒளி மின்சாரம்: ஜப்பான் - nelliadynet
Headlines News :
Home » » சந்திரனிலிருந்து பூமிக்கு சூரிய ஒளி மின்சாரம்: ஜப்பான்

சந்திரனிலிருந்து பூமிக்கு சூரிய ஒளி மின்சாரம்: ஜப்பான்

Written By www.kovilnet.com on Tuesday, February 11, 2014 | 4:55 AM

சந்திரனிலிருந்து பூமிக்கு சூரிய ஒளி மின்சாரம்: ஜப்பான் நிறுவனம் ஏற்பாடு.
 1/1 

டோக்கியோ, டிச.4 - சந்திரனிலிருந்து பூமிக்கு சூரிய ஒளி மின்சாரம் கொண்டு வருவதற்கு ஜப்பான் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. ஜப்பானில் கடந்த 2011_ம் ஆண்டு மார்ச் மாதம் பூகம்பமும், சுனாமியும் ஏற்பட்டதில் புருஷிமா அணு உலை வெடித்துச் சிதறியது. அதனால் அங்குள்ள அணு மின் நிலையங்கள் மூடப்பட்டு வருகின்றன. எனவே நாட்டின் மின் தேவைக்கு விஞ்ஞா னி கள் மாற்று வழியை உருவாக்க முயற்சி செ ய்தனர். 
இந்த வகையில் சூரிய ஒளி மூலம் மின் சாரம் தயாரிப்பதை தீவிரப்படுத்த உள்ளனர். பூமியைப் பொறுத்தவரை எப்போதும் கடுமையான சூரிய ஒளி கிடைப்பதில்லை.  பகலில் மட்டுமே சூரிய ஒளி கிடைக்கிறது. மோசமான தட்பவெப் நிலை மேக மூட்டம் இருந்தால் அதையுஇம் முழுமையாகப் பெற முடியாது. எனவே சந்திரனிலிருந்து பூமிக்கு சூரியஒளி மூலம் மின்சாரம் தயாரித்து பூமிக்குக் கொண்டுவர ஜப்பானில் உள்ள விமிஷூ கார்ப்ப ரேஷன் என்ற நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.
சந்திரனின் பூமத்திய ரேகை பகுதியைச் சுற்றிலும் சோலார் பேனல் தகடுகளை சீராக அமைத்து அதன் மூலம் சூரிய ஒளி மின்சாரம் தயாரித்து பூமிக்குக் கொண்டு வர திட்டமிடப்ட்டுள்ளது. அதற்கு ஜனா ரிங் என பெயரிட்டுள்ளனர். இதன்மூலம் 13 ஆயிரம் டெராவாட் மின்சாரத்தை தயாரித்து பூமிக்குக்  கொண்டுவர முடியும். ஒரு டெராவாட் என்பது ஒரு லட்சம் கோடி வாட் ஆகும். இந்த திட்டத்தின் கட்டுமானப் பணி தொடங்கப்பட உள்ளது. 
தொடர்ந்து மின்சாரம் தயாரிக்க சந்திரனின் பூமத்திய ரேகை பகுதியில் 11 ஆயிரம் கி.மீ. பரப்பளவில் 400கி.மீ. இடைவெளியில் ஆங்காங்கே கோலார் மின்கலன்கள் அமைக்கப்பட உள்ளன. சந்திரனின் சோலார் பேனல் தகடுகள் மற்றும் சோலார் மின்கலன்கள் அமைக்கும் பணியில் ரோபோக்கள் பயன்படுத்தப்பட உள்ளன. 
சந்திரனின் பூமத்திய ரேகை பகுதியில் அமைக்கப்படும் சோலார் பேனல் தகடுகள் கேபிள்கள் மூலம் பெறப்படும். மின்சாரம் மைக்ரோவேவ் மற்றும் லேசர் டிரான்ஸ்மிசன் நிலையங்களில் இணை க்கப்படும். பின்நர் அவை 20 கி.மீ. விட்டமுள்ள ஆண்டனாக்கள் மூலம் பூமிக்கு வரும்.                           
          

Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

www.facebook.com/nelliadynet

 
Support :
Template Design by V.Rajeepan Published by Nelliadynet Template