வெறும் 103 ரூபாய்க்கு பிரபலமான பத்திரிக்கை நிறுவனத்தை வாங்கிய மைக் லக்வெல் என்ற தொழிலதிபர்! - nelliadynet
Headlines News :
Home » » வெறும் 103 ரூபாய்க்கு பிரபலமான பத்திரிக்கை நிறுவனத்தை வாங்கிய மைக் லக்வெல் என்ற தொழிலதிபர்!

வெறும் 103 ரூபாய்க்கு பிரபலமான பத்திரிக்கை நிறுவனத்தை வாங்கிய மைக் லக்வெல் என்ற தொழிலதிபர்!

Written By www.kovilnet.com on Friday, February 28, 2014 | 4:37 AM

readers-digest








பிரபல பத்திரிக்கை நிறுவனமான ரீடர்ஸ் டைஜஸ்ட்(Reader’s Digest) வெறும் ஒரு பவுண்டு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
கடந்த 1992ம் ஆண்டு டீவிட் மற்றும் லைலா பெல் வாலஸ் ஆகியோரால் துவங்கப்பட்டது ரீடர்ஸ் டைஜஸ்ட்.
1960களிலேயே உலகம் முழுவதும் 23 மில்லியன் பிரதிகள் விற்பனை செய்யப்பட்டன.
கடந்த 2008ம் ஆண்டு வரை அமெரிக்காவில் அதிகம் விற்பனையாகும் பத்திரிக்கையாக இருந்து வந்தது.
இந்நிலையில் உலகம் முழுவதும் ரீடர்ஸ் டைஜஸ்ட்டின் வியாபாரம் மிகவும் மோசம் அடைந்தது.
இதற்கிடையே இங்கிலாந்தில் உள்ள ரீடர்ஸ் டைஜஸ்ட் நிறுவனத்தை வெறும் ஒரு பவுண்ட் அதாவது ரூ.103க்கு மைக் லக்வெல் என்ற தொழிலதிபர் வாங்கியுள்ளார்.
இந்நிறுவனத்தை அவர் ஜான் மௌல்டனின் பங்கு நிறுவனமான பெட்டர் கேபிடலிடம் இருந்து வாங்கியுள்ளார்.
முன்னதாக அவர் ஹெச்ஐடி என்டர்டெய்ன்மென்ட் மற்றும் டபுள்யூபிபி ஆகியவற்றில் பெரும் முதலீடு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

www.facebook.com/nelliadynet

 
Support :
Template Design by V.Rajeepan Published by Nelliadynet Template