அமேசான் நதி உருவானது எப்படி ? - nelliadynet
Headlines News :
Home » » அமேசான் நதி உருவானது எப்படி ?

அமேசான் நதி உருவானது எப்படி ?

Written By www.kovilnet.com on Friday, February 15, 2013 | 2:50 AM




உலகின் மிகப் பெரிய மழைக்காடுகள் நிறைந்த பகுதி அமேசான்.நூறு சதவிகித ஓக்சிஜன் கிடைப்பதும் இங்கே தான் .ஆகவே இவ் பதிவில் அமேசான் மழைக்காடுகள் எவ்வாறு உருவானது என்பதை பார்ப்போம்.




பூமி பிறந்து சுமார் 450கோடி ஆண்டுகள் ஆகியிற்று.380கோடி ஆண்டுகள் வரை பூமியில் எந்த உயிரினமும் தோன்றவில்லை.நெருப்புக் குழம்பான பூமி குளிர்ந்து பாறையாகியது.கடல்கள் உருவாகின.அதன் பிறகு உயிர்கள் உருவாகின.ஆனால் அப்போது ஓக்சிஜன் துளிகூட ப+மியில் இல்லை.


அப்படியென்றால் எப்படி சுவாசிக்க முடியும்?
அப்போதுள்ள உயிரினங்கள் ஹைட்ரஜனை மட்டுமே சுவாசித்தன.தாவரங்கள் பூமியில் தோன்றி பிறகுதான் அவை உணவு தயாரிக்கும் போது ஓக்சிஜன் உருவானது. ஓக்சிஜன் உருவாகி சுமார் ஜம்பதுகோடி ஆண்டுகளாகின்றன.


உயிரினங்களின் வரலாறு அறிய காலத்தை மூன்று பிரிவுகளாகப் பிரித்திருக்கின்றனர்.தொன்மைக்காலம் இடைக்காலம் தற்காலம்.சுமார் ஜம்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமி வடக்கே லாரேசியா தெற்கே கோண்டுவானா என இரண்டு நிலப்பரப்புகளாக இருந்தது.


20-25 கோடி ஆண்டுகளுக்கு மன் பாஞ்சயா என்ற ஒற்றைத்திட்டாக மாறிவிட்டது.புவித்தட்டு நகர்வால் பாஞ்சயா உடைந்து இப்போதுள்ள கண்டங்கள் உருவாகின.அட்லாண்டிக் பெருங்கடல் அகன்றது.


பாஞ்சயா கண்டமாக இருந்த காலத்தில் கங்கோவின் துவக்க கால ஆற்று பகுதியில் அமேசான் ஆறு மேற்கு நோக்கி ஓடிக்கொண்டிருந்தது.அப்போது கடல் நீர் நிலப்பரப்புக்குள் அடித்துக்கொண்டு வந்தது.இதனால் அமேசான் ஆறும் அடித்துசெல்லப்பட்டது.





கடல் நீர் பெரு பொலிவியா நாடுகளை நெருங்கியது.அமேசான் ஆற்றுப்படுக்கையைக் கண்டத்துடன் இணைந்தது.


தற்காலத்தில்தான் இன்றைய காடுகளின் அமைப்பும் மழைக்காடுகளும் உருமாற்றம் பெற்றன.இதே கால கட்டத்தில் தென்அமெரிக்காவிலிருந்து ஆப்பிரிக்கா துண்டிக்கப்பட்டு எதிர்திசையில் நகர்ந்தது.இந்த இடைவெளியின் நடுவே உருவானதுதான் அட்லாண்டிக் பெருங்கடல்.அதுவரை அமேசான் ஆறு மேற்கு நோக்கி பசிபிக் பெருங்கடலில் கலந்து கொண்டிருந்தது.


தற்காலத்தில்தான் உலகில் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்தன.தென்அமெரிக்க பூமித்தட்டும் நாஸ்கா தட்டும் ஒன்றுடன் ஒன்று நெருங்கியதன் விளைவாக உருவானது தான் ஆண்டிஸ் மலைத்தொடர்.


ஆண்டிஸ் மலையின் எழுச்சியும் உலகில் நிகழ்ந்த நிலவியல் மாற்றங்களும் அமேசான் ஆற்றையும் போக்கையும் மாற்றியன.ஆண்டிஸ் மலை உயர்ந்ததால் பிரேசில் கயானாவில் இருந்த பாறை திட்டுகள் அமேசானின் ஓட்டத்தை தடுத்தன.



அமேசான் ஆறு என்ற நிலையிலிருந்து உள்நாட்டுக் கடலாக உருமாற்றம் அடைந்தது.காலம் மாற மாற உப்பு நீராக இருந்த அமேசான் பெரிய சதுப்பு நிலமாக மாறி அதன் பின்னர் பெரிய நல்ல நீர் ஏரியாக மாறியது.கடலிருந்து வந்த உயிரினங்களும் ஆற்று நீருக்கு ஏற்ற வகையில் தங்களுடைய வாழ்க்கை முறையை மாற்றி கொண்டன.


சுமார் ஒரு கோடி ஆண்டுகளுக்கு முன் தென்அமெரிக்காவின் மேற்கு பகுதியிலுள்ள மணற்கற்கள் அமேசான் ஆற்று நீரின் ஓட்டத்தை தடுத்தன.அமேசானின் போக்கை கிழக்கு நோக்கி திருப்பி விட்டது.இதே காலகட்டத்தில்தான் அமேசான் ஆற்றின் கரையின் இருபுறமும் நீரோட்டம் அதிகரித்து அமேசான் மழைக்காடுகள் உருவாகின.


பனியுகம் ஆரம்பமானதும் கடல்கள் கூட பனிக்கட்டிகளாக மாறின.பனியுகங்கள் அமேசான் காடுகளை மாற்றியமைத்தன.நிறைய புல்வெளிகளும் அடர்த்தி குறைந்த மரங்களும் காணப்பட்டன.பனியுகம் முடிந்ததும் பனிகள் உருகி நீராக மாறியது.தனித்தனி திட்டுகளாகவும் தீவுகளாகவும் இருந்த காடுகள் ஒன்றாக இணைந்தன.


பலகோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவாகிய அமேசான் இன்றும் தனி சிறப்புடன் தனது ஓட்டத்தை தொடர்ந்து கொண்டு இருக்கிறது.


Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

www.facebook.com/nelliadynet

 
Support :
Template Design by V.Rajeepan Published by Nelliadynet Template