நியூயார்க், பிப். 10-
செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழமுடியுமா என ஆய்வு மேற்கொள்ள அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் செவ்வாய் கிரகத்துக்கு கியூரியாசிட்டி ஆய்வக விண்கலத்தை அனுப்பியுள்ளது.
அங்கு தரை இறங்கியுள்ள அந்த விண்கலம் செவ்வாய் கிரகத்தை போட்டோ எடுத்து பூமிக்கு அனுப்பி வருகிறது. தற்போது செவ்வாய் கிரகத்தில் உள்ள மலை மீது ஏறி கியூரியாசிட்டி விண்கலம் ஆய்வு மேற்கொண்டுள்ளது. அங்குள்ள பாறைகளில் துளை போட்டு மாதிரிகளை சேகரித்து வருகிறது.
இந்த நிலையில், கடந்த மாதம் (ஜனவரி) 30-ந் தேதி கியூரியாசிட்டி அனுப்பிய போட்டோவில் பாறைகளின் மீது உலோகம் போன்ற பொருள் மின்னி கொண்டிருப்பது தெரிந்தது. அது 0.5 செ.மீட்டருக்கு குறைவான நீளத்தில் விரல் போன்று உள்ளது.
இதுகுறித்து நாசா விஞ்ஞானிகள் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. அதே நேரத்தில் கியூரியாசிட்டி செவ்வாய் கிரக பாறையில் துளைபோட்டு மாதிரிகளை சேகரித்து வருகிறது. அவற்றின் ஆய்வுக்கு பிறகுதான்அந்த உலோகம் குறித்து தெரிய வரும் என கூறியுள்ளனர்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !