நியூயார்க், பிப்.11-
செவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற்கொள்ள அமெரிக்காவின் நாசா மையம் கியூரியா சிட்டி என்ற ஆய்வக விண்கலத்தை அனுப்பியுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்டு 6-ந்தேதி அங்குள்ள காலே கிரேடர் எரிமலையில் தரை இறங்கிய அந்த விண்கலம் போட்டோக்களை எடுத்து பூமிக்கு அனுப்பி வருகிறது.
இந்த நிலையில் செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் உள்ளதா? என்பதை கண்டறிய அங்குள்ள மலைப்பாதைகளில் துளையிட்டு மாதிரிகள் சேர்க்க முடிவு செய்யப்பட்டது. அதற்காக கியூரியா சிட்டி விண்கலத்தில் உள்ள ரோபோ எந்திரத்தின் கரங்கள் மூலம் பாறையில் துளை போடுவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டது.
அதன்படி ரோபோவின் கரங்கள் செவ்வாய் கிரக மலைப்பாறையில் முதன் முறையாக துளையிட்டு மாதிரிகளை சேகரித்தது. 1.6 செ.மீட்டர் அகலம் மற்றும் 6.4 செ.மீ. ஆழத்திலும் துளை போடப்பட்டது. இது ஒரு மாபெரும் சாதனையாக நாசா மையம் கருதுகிறது. துளையிடப்பட்ட அந்த பாறைக்கு மறைந்த விஞ்ஞானி ஜான்கிளன் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !