சில நூதன புதிய கண்டுபிடிப்புக்கள்..! (Photo Gallery) - nelliadynet
Headlines News :
Home » » சில நூதன புதிய கண்டுபிடிப்புக்கள்..! (Photo Gallery)

சில நூதன புதிய கண்டுபிடிப்புக்கள்..! (Photo Gallery)

Written By www.kovilnet.com on Thursday, January 3, 2013 | 1:01 AM


சகோ..! இங்கே சில மதிநுட்பமான கண்டுபிடிப்புகளை, மனிதனின் நூதன சிந்தனை
 திறனை வெளிப்படுத்தக்கூடிய ஆக்கப்பூர்வமான புதிய எண்ணங்களை,
 புகைப்படங்களாக வந்தவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் உவகை
 அடைகிறேன். எவ்வித ராயல்டியோ, பேடன்ட் பயமோ இன்றி... இவற்றை
 நீங்களும் உங்கள் வாழ்வில் தாராளாமாக பயன்படுத்திக்கொள்ளலாம்.  :)

மாடிப்படிகளுக்கு கீழேயுள்ள இடத்தை எப்படி உபயோகமாய் மாற்றுவது..?
அல்லது...
ஒரு அலமாரியையே அழகிய மாடிப்படியாக்குவது எப்படி..?


சுறாமீனுடன் நட்பு கொண்டு, அதனுடன் டீ குடிக்க விரும்புவோரா நீங்கள்..?


உங்களுக்காகவே இதோ வந்துவிட்டது சகோ... 'சுறா டீ'..! 



உங்கள் கம்பெனிக்குள் லேப்டாப் கொண்டு செல்ல செக்யூரிட்டியில்  பிரச்சினையா..? கவலைவேண்டாம்..! 'லேப்-புக்' கொண்டு செல்லுங்கள்..!


ஜூஸ் குடிக்கும் போது... பழத்தினுள்ளே ஸ்டிரா போட்டு உறிஞ்ச ஆசையா..?


 நீங்கள் செஸ் ஆடும்போது குட்டீஸ் வந்து கலைத்து விடுவார்களோ என்ற பயமா...அல்லது...சம்மரில் டேபிள்/சீலிங் ஃபேனை ஹை ஸ்பீடில் வைக்க முடியவில்லையே.... என்ற வருத்தமா சகோ..?


 பிட்ஸாவை உடையாமல் கட் பண்ணி எடுத்து வைத்து பரிமாற வேண்டுமா..?


 உலர்த்தப்படும் உங்கள் உடைகளில் காக்கா வந்து கக்கா போகிறதா..? 
இதோ..."சோளக்கொல்லை பொம்மை கிளிப்"...!


இரவில் 'டெர்ரர் கனவு' வருகிறதா..? அல்லது "அப்படி ஏதும் நமக்கு கனவே வருவதில்லையே" என்று மனதுக்குள் ஒரே ஃபீலிங்ஸா சகோ..?


 ஐ...! பூப்பூவா... அழகிய வடிவில் ஆஃப் பாயில்..! குட்டீசுக்கு நிச்சயம் பிடிக்கும்..!


தரைக்கும் டயருக்கும் 'லவ்கிரிப்'..! வளைவில் கூட வண்டி 'ஸ்கிட்' ஆகாதோ..?


 நூடுல்ஸ் பிரியர்கள் கவனத்திற்கு..! கிளிப்பை இப்படியும் உபயோகிக்கலாம்..!


மழை/வெயில் என்றால் குடை..! இல்லையெனில் பொதுவாக கைப்பை.!


ஐஸ் கோல்ட் டிரிங்க்ஸ் டின்னை கையில் பிடித்து குடிப்பதற்கு புது டெக்னிக்.


பிரட்டுக்கு ஹார்ட் ப்ராப்ளமா..? இதய சிகிச்சை நிபுணரின் பிரட் டோஸ்டர்..?


இது ஒற்றைக்கையில் புத்தகம் படிக்கும் படிப்பாளிகளுக்காக சகோ..!


எரிகின்ற ஒன்றுதான் நல்ல பல்பு..! மற்றதெல்லாம் ஃப்யூஸ் போனதுங்கோ..!


தண்ணீர் சிக்கனத்திற்கான மிகச்சிறந்த சிந்தனை..! வாஷ்பேசின் பக்கமா திரும்பி உட்கார்ந்து பல் விளக்கி, வாய் கழுவி, அப்புறம் அந்த தண்ணீரையே...


பேன்ட் வாங்க போனால், "ஸார்,அளவு என்ன?"--இக்கேள்வி தேவை இல்லை. 
டயட் கண்ட்ரோலில் இருப்பதாக அலுவலகத்தில் பீலா விடுகிறீர்களா..? 
இது காட்டிக்கொடுத்து விடும்..! 
வெளியிலேயே ஃபிரன்ட்ஸுடன் ஃபுல்லா ரவுண்டு கட்டிட்டு... வீட்டுக்கு லேட்டா வந்து... "ஸாரி டியர் எனக்கு பசி இல்லை... இருந்தாலும் செஞ்சிருக்கே... ஸோ... ஓர் இட்லி போதும்..!" என்று சொன்னால்... ஹா...ஹா...ஹா.... வசமாய் வாங்கிக்கட்டிக்கொள்ளப்போகிறீர்கள் ..!
எச்சரிக்கை சகோ..! உங்களுக்கே நெகடிவ் குத்திக்காதீங்க..!


காவல் காத்து குரைக்கணும்...! ஆனால்... யாரையும் கடிச்சிடக்கூடாது..!


ஏற்கனவே, LapTop-ஐ மடியில் வைப்பதால் உடலுக்கு ஏற்படும் பல்வேறு ஆபத்துக்களால், அதற்கு பல்வேறு மாற்று ஏற்பாடுகள் வருகின்றன. (நான் கூட என் ட்விட்டரில், இதற்கு 'MobilePC' என்று பெயர் மாற்ற வேண்டும் என்றேன்). அதில் ஒரு மாற்று ஏற்பாடுதான் இது..! இவருக்குத்தான் இது தோள்கணிணி (Shoulder-Top) ..! ஆனால், நிறையபேருக்கு 'தொப்பைக்கணிணி'..?


உங்களுக்குறிய பணியை உரிய நேரத்திற்கு முன்னரே முடித்துவிட்டு வெட்டியாக அமர்ந்திருக்கும் மீத அலுவல் நேரத்தில் தூக்கம் வருகிதா..? இமைக்கு மேலே இந்த ஸ்டிக்கரை ஓட்டிக்கொண்டு சேஃபா தூங்குங்க சகோ.!

 

ஃப்ளாட்டான பல்பு..! யாருக்குத்தரலாம் இதை..? ம்ம்ம்...?

Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

www.facebook.com/nelliadynet

 
Support :
Template Design by V.Rajeepan Published by Nelliadynet Template