இறந்தவர்களை மீண்டும் உருவாக்கலாம்: விஞ்ஞானிகள் பர பரப்பு தகவல் - nelliadynet
Headlines News :
Home » » இறந்தவர்களை மீண்டும் உருவாக்கலாம்: விஞ்ஞானிகள் பர பரப்பு தகவல்

இறந்தவர்களை மீண்டும் உருவாக்கலாம்: விஞ்ஞானிகள் பர பரப்பு தகவல்

Written By www.kovilnet.com on Friday, December 21, 2012 | 9:06 PM


ஒரு மனிதனை அச்சு அசலாக மீண்டும் உருவாக்கும் மனித குளோனிங் தொழில் நுட்பமுறை இன்னும் 50 வருடங்களில் சாத்தியமாகும் என விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
மருத்துவ அறிவியலில் நவீன கண்டு பிடிப்பான குளோனிங் முறை, உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இங்கிலாந்தை சேர்ந்த மருத்துவ விஞ்ஞானி சர்ஜான் கர்டன் 1950-ல் தவளையை குளோனிங் முறையில் உருவாக்கினார். அவரைத் தொடர்ந்து 1996-ல் டென்மார்க் நாட்டு விஞ்ஞானி ‘டோலி’ என்ற ஆட்டுக் குட்டியை குளோனிங் முறையில் உருவாக்கினார்.
தற்போது இங்கிலாந்து விஞ்ஞானி சர்ஜான் கர்டன் மனித குளோனிங் உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அவர் இந்த ஆண்டு மருத்துவக்கான நோபல் பரிசு பெற்றுள்ளார். அவர் மனித குளோனிங் பற்றி கூறியதாவது:-
1978-ல் உலகின் முதல் டெஸ்ட் டியூப் குழந்தை லூயிஸ் பிரவுனை உருவாக்க உயிரியல் அறிஞர்கள் முயற்சித்தபோது, மக்களிடம் இருந்து அதற்கு எதிர்ப்பு கிளம்பியது.
இதுபோன்ற அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சி மனித குலத்துக்கு கேடானது என சிலர் கருத்து தெரிவித்தனர். ஆனால் முதல் டெஸ்ட் டியூப் குழந்தையை உருவாக்கிய பிறகு மக்கள் அதை ஏற்றுக் கொள்ளத் தொடங்கினர். காரணம் அந்த விஞ்ஞான தொழில் நுட்பத்தின் மூலம் குழந்தை பெற இயலாத தம்பதிகள் குழந்தை பெற்றுக் கொள்ள முடிந்தது.
அதேபோல ஒரு உயிரினத்தை அப்படியே அச்சு அசலாக மீண்டும் உருவாக்கும் குளோனிங் விஞ்ஞான தொழில் நுட்பத்துக்கும் உலகம் முழுவதும் எதிர்ப்பு உள்ளது.
டெஸ்ட் டியூப் தொழில் நுட்பத்தைப்போல குளோனிங் தொழில் நுட்பத்தாலும் மனித குலம் பயன்பெறும். இதன் மூலம் நோயற்ற குழந்தைகளை உருவாக்க முடியும். அப்போது மக்கள் அதை ஏற்றுத்தான் ஆக வேண்டும்.
குழந்தை இல்லாத தம்பதியரில் தாயின் அண்டச் செல் மற்றும் தோல் செல்களைப் பயன்படுத்தி குளோனிங் குழந்தையை உருவாக்க முடியும். அது பாதுகாப்பானது மற்றும் மிகுந்த பலன் தரக்கூடியது. இன்னும் 50 ஆண்டுகளில் மனித குளோனிங் சாத்தியமாகும்.
ஒரு தம்பதி குளோனிங் தொழில் நுட்பம் மூலம் குழந்தை பெற விரும்பினால் அதை நாம் ஏன் தடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

www.facebook.com/nelliadynet

 
Support :
Template Design by V.Rajeepan Published by Nelliadynet Template