புவி உண்மையிலேயே வெப்பமடைந்ததா என்பதை செர்ன் எனும் அமைப்பு ஆராய்ந்தது.செர்ன் “ஐரோப்பிய நியூக்ளியர் ரிசர்ச்” எனும் மிக மதிப்புள்ள நிறுவனம். உலகின் மிகபெரிய அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம்.60 நாடுகள்,8000 விஞ்ஞானிகள், 600 பல்கலைகழகங்கள் துனையுடன் செயல்படும் நிறுவனம். இன்டெர்னெட்டை கண்டுபிடித்தது செர்ன்.மிக பெரிய பொருட்செலவில் ஸ்டீல் சாம்பர் ஒன்றை அமைத்து பூமியின் சுற்றுபுற சூழலை அதில் மாடல் செய்து இந்த ஆராய்ச்சியை நடத்தியது செர்ன்.
இந்த சாம்பரில் ஒன்றல்ல,இரண்டல்ல 63 விஞ்ஞானிகள் – 17 ஐரோப்பிய நாடுகள் மற்று அமெரிக்காவை சேர்ந்த விஞ்ஞானிகள் – தம் ஆய்வை நடத்தினர்.அந்த ஆய்வு முடிவுகள் அறிவியலில் மிக மதிப்பு வாய்ந்த நேச்சர் ஜர்னலில் வெளியாகின.
அதில் வெளியான தகவல் புவிவெப்பமயத்தின் கல்லறையில் இறுதி ஆணியை இறுக அடித்து பாய்ச்சியுள்ளது.அதாவது “புவியின் வெப்பமயம்,குளிர்ச்சி அனைத்தும் சூரியனாலும், காஸ்மிக் கதிர்களாலும் நிர்ணயிக்கபடுபவையே ஒழிய மனிதன் செய்வதுக்கும் அதற்கும் எந்த தொடர்பும் இல்லை” என இந்த ஆய்வு கூறுகிறது.கடந்த நூற்ராண்டில் அதிகரித்த வெப்பத்தில் 50 முதல் 100 சதவிகிதம் வரை காஸ்மிக் கதிர்களாலும், சூரியனாலும் நிகழ்ந்தது எனவும் இந்த ஆய்வு கூறுகிறது.
காஸ்மிக் கதிர்கள் தான் தட்ப்டவெட்ப நிலை மாற்றங்களுக்கு காரணம் என்ற கருத்து சொல்லப்பட்ட நாள்முதல் அது புவிவெப்பமய கோமாளிகளின் முதன்மை எதிரியாக இருந்து வருகிறது.1996ல் இதை ஒரு கருத்தரங்கில் கூறிய இரு டேனிஷ் விஞ்ஞானிகள் கருத்தரங்கில் இருந்த பிற விஞ்ஞானிகளால் தீண்டதகாதவர்களாக நடத்தபட்டனர்.அவர்கள் ஆராய்ச்சி நிதி நிறுத்தபட்டது.அவர்கள் கட்டுரைகளிலும், ஊடகங்கலிலும் கடுமையாக தக்கபட்டனர்.இதற்கும் அவர்கள் மிக இம்பரசிவான டிராக் ரெகார்டுகளை கொண்டவர்கள்.அவர்கள் மேல் பாய்ந்து குதறி எடுத்த ஐ.பி.சி.சி தலைவர் போல்ட் பெர்ன் “அவர்கள் ஆய்வு முடிவுகள் சிறுபிள்ளைதனமானவை,பொறுபற்றவை” என மிக கடும் வார்த்தைகளில் விமர்சித்தார்.
அதிர்ஷ்டவசமாக நிகில் கார்டர் எனும் நியூ சயன்டிஸ்ட் ஜர்னல் எடிட்டர் அந்த கருத்தரங்கில் இருந்தார்.இவர்கள் சொன்னது உண்மை என அவருக்கு பட்டது.கடுமையாக போராடி இந்த ஆய்வை செர்ன் எடுத்து நடத்த முயன்றார்.புவிவெப்பமய எஸ்டாப்ளிஷ்மெண்ட் இதை 10 வருடங்களாக தடுத்து வந்தது.புவிவெப்பமய ஆதரவு விஞ்ஞானிகள் ஐரோப்பிய அரசுகளுக்கு நெருக்கடி கொடுத்து செர்னின் ஆய்வுகளை அரசு கட்டுபாட்டில் கொண்டுவர முயன்றனர்.அதை எல்லாம் மீறி இந்த ஆய்வு வெளிவந்துள்லது.
தட்பவெட்பநிலை மாற்ரத்துக்கு காரணம் காஸ்மிக் கதிர்களும் சூரியனும் என்ற கிரவுண்ட் பிரேக்கிங் தியரி இப்போது ஊர்ஜிதமாகியுள்ளது.புவிவெப்பமய கோமாளிகள் கடும் அதிர்ச்சியில் ஆழ்ந்து இதற்கு எந்த பதிலும் சொல்ல இயலாமல் மவுனமாக உள்ளனர்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !