அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா சூரியமண்டலத்தில் 4-வதாக உள்ள செவ்வாய் கிரகத்தில் மக்கள் வாழ்வதற்கான சூழ்நிலைகள் பற்றி ஆராய உள்ளது. இதற்காக வரும் 2020-ம் ஆண்டு மேலும் ஒரு ரோவர் விண்கலத்தை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது.
சிகப்பு கிரகமான செவ்வாயை 13 கேமிராக்கள் பொருத்தப்பட்ட க்யூரியாசிட்டி ரோபோ விண்கலம் ஆராய்ந்து வருகிறது. அக்கருவியின் தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்டு இந்த ரோவர் விண்கலமும் செயல்பட உள்ளது. இது வரும் 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அங்கு சென்று இறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விண்கலங்களை அனுப்பி வெற்றிக்கண்டுள்ள பழைய தொழில்நுடபங்களையே மீண்டும் பயன்படுத்த நாசா எதிர்பார்க்கிறது. க்யூரியாசிட்டி விண்கலம் செவ்வாய் கிரகத்தின் மண்ணை எடுத்து பல்வேறு சோதனைகள் செய்து வருகின்றது. ஆனால் 2 1/2 பில்லியன் டாலர் செலவில் செல்லும் இந்த ரோவர் விண்கலம் செவ்வாய் கிரகத்தில் மக்கள் வாழ்வதற்கான சூழ்நிலைகள் பற்றி ஆராயவுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !